இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்தல் மற்றும் பகிர்தல்

உரையாடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை நீங்கள் வேறு பெறுநருக்கு முன்னனுப்பலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் முன்னனுப்ப விரும்பும் மெசேஜ் பபுள் ஒன்றைத் தொட்டுப் பிடித்து, “மேலும்” என்பதைத் தட்டவும்.

  3. முன்னனுப்புவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களைத் தேர்ந்தெடுக்க அதனைத் தட்டி, முன்னனுப்புவதற்கான பட்டன் ஐகானைத் தட்டவும்.

  4. பெறுநர்களை உள்ளிட்டு, அனுப்புவதற்கான பட்டன் ஐகானைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: மெசேஜ் பபுள்களையும் நேர விவரங்களையும் உரையாடலில் தோன்றுவதைப் போலவே காட்ட, மெசேஜ்களை முன்னனுப்புவதற்குப் பதிலாக ஸ்கிரீன்ஷாட்டை ஓர் இணைக்கப்பட்ட படமாக அனுப்பவும்.

மற்ற சாதனங்களில் உங்கள் மெசேஜ்களைப் பகிர, iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள உங்கள் அனைத்து சாதனங்களிலும் மெசேஜஸுக்கு iCloudஐ அமைத்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.