இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்

நீங்கள் மொபைல் டேட்டா மற்றும் ரோமிங்கை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், எந்தெந்தச் செயலிகள் மற்றும் சேவைகள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அமைக்கலாம், மொபைல் டேட்டா பயன்பாட்டைப் பார்க்கலாம் மற்றும் பிற மொபைல் டேட்டா விருப்பங்களை அமைக்கலாம்.

குறிப்பு: மொபைல் நெட்வொர்க் சேவைகள், வாய்ஸ்மெயில், பில்லிங் ஆகியவற்றுக்கான உதவிக்கு, உங்கள் வயர்லெஸ் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

மொபைல் நெட்வொர்க்குகள் பற்றி

உங்கள் iPhone மொபைல் டேட்டா நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், ஸ்டேட்டஸ் பாரில் மொபைல் நெட்வொர்க்கை அடையாளப்படுத்தும் ஐகான் காட்டப்படும்.

GSM மொபைல் நெட்வொர்க்குகளில் உள்ள 5G, LTE, 4G மற்றும் 3G சேவைகள் ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா தொடர்புகளை ஆதரிக்கின்றன. மற்ற அனைத்து மொபைல் இணைப்புகளுக்கும், இணையத்திற்காக உங்கள் iPhone Wi-Fi இணைப்பைக் கொண்டிருக்காதவரை, நீங்கள் ஃபோனில் பேசும்போது இணையச் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. உங்கள் நெட்வொர்க் இணைப்பைப் பொறுத்து, உங்கள் iPhone மொபைல் நெட்வொர்க்கில் தரவைப் பரிமாற்றம் செய்யும்போது (எடுத்துக்காட்டாக இணையப் பக்கத்தைப் பதிவிறக்குதல்) உங்களால் அழைப்புகளைப் பெற முடியாமல் போகக்கூடும்.

  • GSM நெட்வொர்க்குகள்: EDGE அல்லது GPS இணைப்பில், தரவுப் பரிமாற்றத்தின்போது உங்களுக்கு வரும் அழைப்புகள் நேரடியாக வாய்ஸ்மெயிலுக்குச் செல்லக்கூடும். நீங்கள் பதிலளிக்கும் அழைப்புகளுக்கு, தரவுப் பரிமாற்றங்கள் இடைநிறுத்தப்படும்.

  • CDMA நெட்வொர்க்குகள்: EV-DO இணைப்புகளில், உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போது தரவுப் பரிமாற்றங்கள் இடைநிறுத்தப்படும். 1xRTT இணைப்புகளில், தரவுப் பரிமாற்றத்தின்போது உங்களுக்கு வரும் அழைப்புகள் நேரடியாக வாயிஸ்மெயிலுக்குச் செல்லக்கூடும். நீங்கள் பதிலளிக்கும் அழைப்புகளுக்கு, தரவுப் பரிமாற்றங்கள் இடைநிறுத்தப்படும்.

நீங்கள் அழைப்பை முடிக்கும்போது தரவுப் பரிமாற்றம் தொடங்கும்.

மொபைல் டேட்டா ஆஃப் செய்யப்பட்டிருந்தால், மின்னஞ்சல், இணைய உலாவல், புஷ் அறிவிப்புகள் உட்பட அனைத்து டேட்டா சேவைகளும் Wi-Fiஐ மட்டுமே பயன்படுத்தும். மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், நெட்வொர்க் வழங்குநர் கட்டணங்கள் பொருந்தக்கூடும். எடுத்துக்காட்டாக Siri, மெசேஜஸ் போன்ற தரவைப் பரிமாற்றும் சில அம்சங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக உங்கள் டேட்டா திட்டத்தில் கட்டணம் விதிக்கப்படலாம்.

Wi-Fiஐப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்ய, Wi-Fiஐப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.

ரோமிங் விருப்பங்களை நிர்வகித்தல் மற்றும் பிற மொபைல் டேட்டா விருப்பங்களைத் தேர்வுசெய்தல்

மொபைல் டேட்டாவை ஆன் அல்லது ஆஃப் செய்ய, அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் சென்று “மொபைல் டேட்டா” என்பதைத் தட்டவும்.

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, விருப்பங்களை அமைக்க, அமைப்புகள் > மொபைல் சேவை > மொபைல் டேட்டா விருப்பங்கள் என்பதற்குச் சென்று பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • டேட்டா ரோமிங்கை ஆன் அல்லது ஆ:ப் செய்தல்: உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் நெட்வொர்க்கைத் தாண்டியுள்ள பகுதியில் நீங்கள் இருக்கும்போது மொபைல் டேட்டா நெட்வொர்க் மூலம் இணைய அணுகலை டேட்டா ரோமிங் அனுமதிக்கிறது. நீங்கள் பயணம் செய்யும்போது ரோமிங் கட்டணங்களைத் தவிர்க்க டேட்டா ரோமிங்கை ஆஃப் செய்யலாம்.

  • மொபைல் சேவை பயன்பாட்டைக் குறைத்தல்: “டேட்டா பயன்முறை” என்பதைத் தட்டி “குறைந்த டேட்டா பயன்முறை” என்பதைத் தேர்வுசெய்யவும். iPhone Wi-Fi உடன் இணைக்கப்படாதபோது இந்தப் பயன்முறை தானியங்குப் புதுப்பிப்புகளையும் பின்னணிப் பணிகளையும் இடைநிறுத்தும்.

உங்கள் iPhone மாடல், நெட்வொர்க் வழங்குநர் மற்றும் வட்டாரத்தைப் பொறுத்து பின்வரும் விருப்பங்கள் கிடைக்கக்கூடும்:

  • வாய்ஸ் ரோமிங்கை ஆன் அல்லது ஆ:ப் செய்தல்: (CDMA) பிற நெட்வொர்க் வழங்குநரின் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதால் கட்டணங்கள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க வாய்ஸ் ரோமிங்கை ஆஃப் செய்யவும். உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் நெட்வொர்க் கிடைக்காதபோது, iPhoneஇல் மொபைல் சேவை (டேட்டா அல்லது வாய்ஸ்) இருக்காது.

  • 4G/LTEஐச் செயல்படுத்துதல் அல்லது முடக்குதல்: 4G அல்லது LTEஐப் பயன்படுத்துவதால் சில சமயங்களில் இணையத் தரவு வேகமாக ஏற்றப்படும், ஆனால் பேட்டரி செயல்திறன் குறையக்கூடும். 4G/LTEஐ ஆஃப் செய்வதற்கோ, “வாய்ஸ் & டேட்டா (VoLTE)” அல்லது “டேட்டா மட்டும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவோ விருப்பங்கள் இருக்கக்கூடும்.

5G டேட்டா திட்டத்துடன் கூடிய iPhone 12 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • பேட்டரி நிலையை மேம்படுத்த “ஸ்மார்ட் டேட்டா பயன்முறை” அம்சத்தைச் செயல்படுத்துதல்: “வாய்ஸ் & டேட்டா” என்பதைத் தட்டி “5G ஆட்டோ” என்பதைத் தேர்வுசெய்யவும். இந்தப் பயன்முறையில், 5G வேகம் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்த செயல்திறனை வழங்காதபோது, உங்கள் iPhone தானாக LTEக்கு மாறும்.

  • 5G நெட்வொர்க்குகளில் உயர்தர வீடியோ மற்றும் FaceTime HDஐப் பயன்படுத்துதல்: “டேட்டா பயன்முறை” என்பதைத் தட்டி “5Gஇல் கூடுதல் டேட்டாவை அனுமதி” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  • 5Gஐ ஆ:ப் செய்தல்: “வாய்ஸ் & டேட்டா” என்பதைத் தட்டி “LTE” என்பதைத் தேர்வுசெய்யவும்.

உங்கள் இணைய இணைப்பைப் பகிர தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டை அமைக்க, உங்கள் இணைய இணைப்பை iPhoneஇல் இருந்து பகிர்தல் பிரிவைப் பார்க்கவும்.

நீங்கள் எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்த்தல்

நீங்கள் எவ்வளவு மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைப் பார்க்க, அமைப்புகள் > மொபைல் சேவை என்பதற்குச் சென்று பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • தனிப்பட்ட செயலிகளுக்கான மொபைல் டேட்டா பயன்பாட்டைப் பார்த்தல்: உங்கள் செயலிகளின் பட்டியலின் கீழ்ப்பகுதி வரை ஸ்க்ரால் செய்து “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டவும். பயன்படுத்தப்படும் மொபைல் டேட்டாவின் அளவு ஒவ்வொரு செயலியின் கீழும் காட்டப்படும். மொபைல் டேட்டாவை ஒரு செயலி பயன்படுத்த வேண்டாம் நீங்கள் நினைத்தால், அந்தச் செயலிக்கு அதை ஆஃப் செய்யலாம். மொபைல் டேட்டா ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது, டேட்டாவிற்காக செயலிகள் Wi-Fiஐ மட்டுமே பயன்படுத்தும்.

  • தனிப்பட்ட சிஸ்டம் சேவைகளுக்கான மொபைல் டேட்டா பயன்பாட்டைப் பார்த்தல்: மொபைல் சேவைப் பிரிவில் உள்ள செயலிகளின் பட்டியலுக்கு மேலே சிஸ்டம் சேவைகள் காட்டப்படும். தனிப்பட்ட சிஸ்டம் சேவைகளுக்கு மொபைல் டேட்டாவை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியாது.

தற்போதைய கால வரம்பில் ஒரு செயலியின் டேட்டா பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களை நீங்கள் பார்க்கலாம் அல்லது ரோமிங்கில் இருக்கும்போது டேட்டாவைப் பயன்படுத்திய செயலிகளுக்கான டேட்டா புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம். இந்தப் புள்ளிவிவரங்களை மீட்டமைக்க, அமைப்புகள் > மொபைல் சேவை என்பதற்குச் சென்று, கீழ்ப்பகுதி வரை ஸ்க்ரால் செய்தபிறகு “புள்ளிவிவரங்களை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhoneஇல் இரண்டு SIMஐப் பயன்படுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுத்த மொபைல் டேட்டா எண்ணில் எவ்வளவு மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைப் பார்க்கலாம்.

குறிப்பு: தற்போதைய கால வரம்பிற்கான மிகவும் துல்லியமான மொபைல் டேட்டா பயன்பாட்டைப் பெற, உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

செயலிகள் மற்றும் சேவைகளுக்கான மொபைல் டேட்டா பயன்பாட்டை அமைத்தல்

அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் சென்று, மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு செயலி (மேப்ஸ் போன்ற) அல்லது சேவைக்கும் (Wi-Fi அசிஸ்ட் போன்ற) மொபைல் டேட்டாவை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருந்தால், iPhone அந்தச் சேவைக்கு Wi-Fiஐ மட்டுமே பயன்படுத்தும்.

குறிப்பு: Wi-Fi அசிஸ்ட் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். Wi-Fi இணைப்பு மோசமாக இருந்தால், சிக்னலை அதிகரிக்க Wi-Fi அசிஸ்ட் தானாகவே மொபைல் டேட்டாவுக்கு மாறும். உங்களிடம் மோசமான Wi-Fi இணைப்பு இருக்கும்போது நீங்கள் மொபைல் சேவை நெட்வொர்க்கில் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பீர்கள் என்பதால், நீங்கள் அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தக்கூடும், இதனால் உங்கள் டேட்டா திட்டத்தைப் பொறுத்து கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படக்கூடும். Wi-Fi அசிஸ்ட்டைப் பற்றி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் SIM கார்டை லாக் செய்தல்

ஃபோன் அழைப்புகளுக்காகவோ மொபைல் டேட்டாவுக்காகவோ உங்கள் சாதனம் SIM கார்டைப் பயன்படுத்தினால், மற்றவர்கள் கார்டைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) பயன்படுத்தி கார்டை லாக் செய்யலாம். பின்னர், உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கும்போதெல்லாம் அல்லது SIM கார்டை அகற்றும்போதெல்லாம், உங்கள் கார்டு தானாகவே லாக் ஆகும், உங்கள் பின் எண்ணை உள்ளிடவும் வேண்டும். iPhone அல்லது iPadக்கு SIM PINஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

eSIMஐச் சேர்க்க, மொபைல் சேவையை அமைத்தல் பிரிவைப் பார்க்கவும்.

இவற்றையும் பாருங்கள்iPhoneஇல் மொபைல் சேவையை அமைத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.