இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள News செயலியில் News செய்திகளைக் கோருதல்

Apple News+க்கு நீங்கள் சந்தா சேர்ந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட News+ செய்திகளின் ஆடியோ பதிப்புகளைக் கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட Apple News+ ஆடியோ செய்திகளை பாட்காஸ்ட்கள் செயலியிலும் நீங்கள் கேட்கலாம்.

குறிப்பு: Apple News, Apple News+ மற்றும் ஆடியோ அம்சம் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும் தன்மைக்கான இணையதளம் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

ஆடியோ செய்திகளைத் தேடிப்பார்த்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. Apple News+ ஆடியோ செய்திகள் மற்றும் Apple News Todayஐக் காட்ட, ஆடியோ பட்டன்-ஐத் தட்டவும். நீங்கள் சந்தாதாரராக இருந்தால், பின்வருவனவற்றுக்கான அணுகல் உங்களுக்கு இருக்கும்:

    • எடிட்டர்களின் விருப்பங்கள்: Apple News Today மற்றும் “Apple Newsஇல் உரையாடல்கள்” பிரிவுகளின் சமீபத்திய எபிசோடுகளும் Apple News எடிட்டர்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆடியோ செய்திகளும் முன்னிலைப்படுத்தப்படும்.

    • அடுத்து வருவது: நீங்கள் தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் அல்லது “அடுத்து வருவது” வரிசையில் சேர்த்துள்ள செய்திகள்.

    • உங்களுக்காக: உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்.

    • செய்திக் குழுக்கள்: விண்வெளி ஆய்வு அல்லது உங்கள் பயணத்துக்குத் தொடர்புடைய செய்திகள் போன்ற ஒரு தலைப்பு அல்லது கருப்பொருளின் அடிப்படையில் Apple News எடிட்டர்களால் தொகுக்கப்பட்ட செய்திகளின் டைனமிக் தொகுப்புகள்.

    • மேலும் அம்சங்கள்: அனைத்து ஆடியோ செய்திகளுக்கான இணைப்புகள், Apple News Today எபிசோடுகள், சமீபத்தில் பிளே செய்த செய்திகள், “கலை & பொழுதுபோக்கு”, “செய்தி & அரசியல்” மற்றும் விளையாட்டு போன்ற வகைப்பிரிவுகளின் செய்திகள்.

ஒரு செய்தியைக் கேட்பதற்கு முன் அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, “விவரங்களைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

நீங்கள் Apple News+ சந்தாதாரர் இல்லையெனில், எடிட்டர்களின் விருப்பங்கள், உங்களுக்கான ஆடியோ செய்திகள் மற்றும் செய்திக் குழுக்களில் உள்ள ஆடியோ செய்திகளின் முன்னோட்டத்தைக் கேட்கலாம். Apple News Today, Apple Newsஇல் உரையாடல்கள் பிரிவுகளின் எபிசோடுகள் முழுவதையும் கேட்கலாம்.

ஆடியோ செய்திகளை பிளே செய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. ஆடியோ பட்டன்-ஐத் தட்டி, செய்தி ஒன்றைத் தட்டவும்.

  3. கூடுதல் பிளேபேக் கட்டுப்பாடுகளுக்கு, முழு-திரை பிளேயரைத் திறக்க கீழே உள்ள மினி பிளேயரைத் தட்டவும்.

  4. மினி பிளேயருக்குத் திரும்ப, முழு திரை பிளேயரைச் சிறிதாக்க கீழே ஸ்வைப் செய்யவும்.

    முழு திரை பிளேயரை மூட, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “ஆடியோ பிளேயரை மூடுக” என்பதைத் தட்டவும். மினி பிளேயரை மூட, “மூடுக” பட்டன் என்பதைத் தட்டவும்.

    ஒரு ஆடியோ செய்தியைக் காட்டும் ஆடியோ பிளேயர் திரை, அதற்குக் கீழே பிளேயர் கட்டுப்பாடுகள், வால்யூம் ஸ்லைடர் ஆகியவை உள்ளன.

    ஃபீடிலும் ஆடியோ செய்திகளைக் காட்டலாம். செய்தியைக் கேட்க “இப்போது பிளே செய்” (Apple News+ சந்தா தேவை) என்பதைத் தட்டவும். செய்தியைப் படிக்க, அதைத் தட்டி, செய்தியின் மேலே உள்ள “இப்போது பிளே செய்“ என்பதைத் தட்டவும்.

    பின்வரும் கட்டுப்பாடுகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்:

    கட்டுப்பாடு

    விளக்கம்

    "பிளே செய்" பட்டன்.

    பிளே செய்யும்

    "இடைநிறுத்து" பட்டன்.

    இடைநிறுத்தும்

    “அடுத்த செய்தி” பட்டன்.

    அடுத்த செய்தி

    “15 விநாடிகள் ரீவைண்ட்” பட்டன்.

    15 விநாடிகள் பின்செல்லும்

    “பிளேபேக் வேகம்” பட்டன்.

    வேகமான அல்லது மெதுவான பிளேபேக் வேகத்தைத் தேர்வுசெய்யும்

    “பிளேபேக் இலக்கு” பட்டன்.

    மற்ற சாதனங்களுக்கு ஆடியோவை ஸ்ட்ரீம் செய்யும்

    "மேலும்" பட்டன்.

    வரிசையில் செய்தியை அடுத்ததாக அல்லது கடைசியில் வைத்தல், செய்தியைப் படித்தல் அல்லது அதைப் பகிர்தல் போன்ற மேலும் செயல்களைத் தேர்வுசெய்யும்

“அடுத்து வருவது” பட்டியலில் செய்திகளைச் சேர்த்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • “ஆடியோ” தாவல் அல்லது செய்தி ஃபீடில் “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அடுத்ததை பிளே செய்” அல்லது “முந்தையதை பிளே செய்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • செய்தியின் மேல்பகுதியில் உள்ள “இப்போது பிளே செய்” என்பதைத் தொட்டுப் பிடித்து, “அடுத்ததை பிளே செய்” அல்லது “முந்தையதை பிளே செய்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

      நீங்கள் சமீபத்தில் வாசித்த அல்லது கேட்டுக்கொண்டிருந்த நிலையிலிருந்து தொடர்ந்து கேட்க, “இதிலிருந்து அடுத்ததை பிளே செய்” அல்லது “இதிலிருந்து முந்தையதை பிளே செய்” என்பதைத் தட்டவும்.

வரிசையில் உள்ள செய்திகளை மறுவரிசைப்படுத்த, “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி, “மறுவரிசைப்படுத்து” பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, செய்திகளை நீங்கள் விரும்பும் வரிசைக்கு இழுக்கவும்.

ஆடியோ செய்திகளைப் படித்தல், பகிர்தல், அகற்றுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • படிக்க, சேமிக்க, பகிர மற்றும் பலவற்றைச் செய்ய: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • “அடுத்து வருவது” அல்லது “உங்களுக்காக” வரிசையில் உள்ள செய்திகளை அகற்ற: செய்தியைத் தொட்டுப் பிடித்து, “அகற்று” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: நீங்கள் ஒரு செய்தியை இடது அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யும் போதும் இந்த விருப்பங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஒரு செய்தியைக் கேட்கும்போது, முழு திரை பிளேயரைத் திறந்து, இதே போன்ற விருப்பங்களின் பட்டியலைப் பார்க்க, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.