இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள இசைச் செயலியில் பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்கும் விதம்

நீங்கள் Apple Music சந்தா சேர்ந்து நீங்கள் ஒரு பிளேலிஸ்ட்டைப் பகிர்ந்து அதில் மற்றவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து கேட்கலாம். ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் அனைவரும் இசையைச் சேர்க்கலாம், அகற்றலாம், மறுவரிசைப்படுத்தலாம், பாடல்களுக்கு இமோஜி மூலம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்.

குறிப்பு: Apple Music அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்க பிறரை அழைத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. பிளேலிஸ்ட்டைத் தட்டி “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நபர்கள் சேருவதற்கு முன்பு அவர்களை அங்கீகரிக்க “ஒன்றாகச் சேர்ந்து கேட்பவர்களை அனுமதி” அம்சத்தை ஆன் செய்யவும்.

    இந்த விருப்பத்தை நீங்கள் ஆன் செய்யவில்லை எனில், இணைப்பைக் கொண்ட எவரும் ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் சேரலாம்.

  4. ஒன்றாகச் சேர்ந்து கேட்கத் தொடங்கு என்பதைத் தட்டி பிளேலிஸ்ட்டுக்கு இணைப்பை அனுப்ப, AirDrop, மெசேஜ்கள், அல்லது Mail போன்ற பகிர்வு முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

    ஒன்றாகச் சேர்ந்து கேட்பதைத் தொடங்க இணைப்பைப் பெறுபவர் அனைவரும் பிளேலிஸ்ட்டில் இணைய வேண்டும்.

நீங்கள் ஒரு உரிமையாளராக இருந்து “ஒன்றாகச் சேர்ந்து கேட்பவர்களை அனுமதி” அம்சத்தை ஆன் செய்யவில்லை எனில் ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் சேர்வதற்கு ஒரு புதிய நபர் கோரும்போது அறிவிப்புகள் மேல் வலது மூலையில் தோன்றும்.

ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் மேலும் பலரைச் சேர்த்தல்

ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டின் உரிமையாளராக நீங்கள் இருந்தால் அல்லது “ஒன்றாகச் சேர்ந்து கேட்பவர்களை அனுமதி” அம்சத்தை உரிமையாளர் ஆன் செய்யவில்லை எனில் பிளேலிஸ்ட்டுக்கான இணைப்பை நீங்கள் அதிக நபர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டைத் தட்டி “கூட்டுப்பணியாற்றுவதை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அருகில் உள்ள ஒருவரைச் சேர்க்க: QR குறியீட்டைத் தட்டவும். மற்றவர்கள் தங்கள் iPhoneஇல் உள்ள கேமராவைப் பயன்படுத்தி உங்கள் iPhoneஇல் காட்டப்படும் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பிளேலிஸ்ட்டில் இணையலாம்.

    • வேறொருவரைச் சேர்க்க: “புதிய இணைப்பை உருவாக்கு” (தேவைப்பட்டால்) என்பதைத் தட்டி “அழைப்பைப் பகிர்” என்பதைத் தட்டவும். பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்க பிறரை அழைக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டுக்கான பகிரப்பட்ட அமைப்புகளை நிர்வகித்தல்

நீங்கள் உரிமையாளர் என்றால், நீங்கள் பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்கத் தொடங்கிய பிறகு தனிநபர்கள் அல்லது அனைவருக்கான அணுகலையும் அனுமதிகளையும் மாற்றலாம்.

இசை செயலியில் கூட்டுப்பணியாற்றுவதை நிர்வகித்தல் திரை.
  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டைத் தட்டி “கூட்டுப்பணியாற்றுவதை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • பிறரை அழைக்க: ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் மேலும் பலரைச் சேர்த்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

      குறிப்பு: நீங்கள் “ஒன்றாகச் சேர்ந்து கேட்பவர்களை அனுமதி” அம்சத்தை ஆன் செய்யவில்லை என்றால், பிளேலிஸ்ட்டில் இணைந்து ஒன்றாகச் சேர்ந்து கேட்கும் எவரும் அந்த பிளேலிஸ்ட்டுக்கான இணைப்பைப் பகிரலாம்.

    • நபர்கள் சேருவதற்கு முன் அவர்களை அங்கீகரிக்க: “ஒன்றாகச் சேர்ந்து கேட்பவர்களை அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.

    • கோரிக்கையை ஏற்க: ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் சேர நபரை அனுமதிக்க “கோரிக்கையை ஏற்றுக்கொள்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • கோரிக்கையை நிராகரிக்க: ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டில் அந்த நபர் சேருவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் “கோரிக்கையை நிராகரி” பட்டன்-ஐத் தட்டவும்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்பதை நிறுத்துதல்

நீங்கள் உரிமையாளராக இருந்தால், பிளேலிஸ்ட்டில் இருந்து நபர்களை அகற்றலாம் அல்லது அதில் ஒன்றாகச் சேர்ந்து கேட்பதை முற்றிலுமாக நிறுத்தலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டைத் தட்டி “கூட்டுப்பணியாற்றுவதை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • ஒரு நபரை அகற்ற: நபரின் பெயரில் இடதுபுறமாக ஸ்வைப் செய்த பிறகு “அகற்று” என்பதை கிளிக் செய்யவும்.

    • பிளேலிஸ்ட்டை ஒன்றாகச் சேர்ந்து கேட்பதை நிறுத்த: “நிறுத்து” என்பதைத் தட்டவும்.

ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டிலிருந்து உங்களை நீங்களே அகற்றுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. ஒன்றாகச் சேர்ந்து கேட்கக்கூடிய பிளேலிஸ்ட்டைத் தட்டி, “கூட்டுப்பணியாற்றுவதை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி “விலகு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.