இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPadஇல் அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுமதிக்க iPhoneஐப் பயன்படுத்துதல்

iPhoneஇல் இருந்து iPadக்கு ஃபோன் அழைப்புகளையும் மெசேஜ்களையும் ரிலே செய்யலாம் என்பதால், நீங்கள் எந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினாலும் எளிதாகப் பிறரைத் தொடர்புகொள்ளலாம்.

உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகள் அல்லது மெசேஜ்களைப் பெற உங்கள் iPhoneஐப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: மொபைல் சேவைக்கான கட்டணங்கள் பொருந்தக்கூடும். Wi-Fi அழைப்பு அனைத்து நெட்வொர்க் வழங்குநர்களிடம் இருந்தும் கிடைக்காது.

தொடங்கும் முன்

பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்:

நீங்கள் VPN பயன்படுத்தினால், சில கன்டினியுட்டி அம்சங்களை அது பாதிக்கக்கூடும் என்பதால் அதன் உள்ளமைவு உள்ளூர் நெட்வொர்க்கிற்கு இடையூறு செய்யாத வகையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகளை அனுமதிக்க உங்கள் iPhoneஐ அமைத்தல்

  1. iPhoneஇல், அமைப்புகள்  > மொபைல் சேவை என்பதற்குச் செல்லவும்.

    குறிப்பு: உங்கள் iPhoneஇல் இரண்டு சிம்கள் இருந்தால், ஒரு லைனைத் தேர்வுசெய்யவும் (சிம்களுக்குக் கீழே).

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “பிற சாதன அழைப்புகள்” என்பதைத் தட்டி “பிற சாதன அழைப்புகளை அனுமதி” என்பதை ஆன் செய்த பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்யவும் பெறவும் அனுமதிக்க விரும்பும் சாதனங்களைத் தேர்வுசெய்யவும்.

      நீங்கள் தேர்வுசெய்யும் சாதனங்கள் உங்கள் iPhoneக்கு அருகில் இருந்தால், Wi-Fiஇல் இணைக்கப்பட்டிருந்தால் மற்றும் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால், அவற்றால் அழைப்புகளைச் செய்யவும் பெறவும் முடியும்.

    • “Wi-Fi அழைப்பு” என்பதைத் தட்டி “இந்த iPhoneஇல் Wi-Fi மூலம் அழைப்பு” என்பதை ஆன் செய்த பிறகு “பிற சாதனங்களில் Wi-Fi மூலம் அழைக்கும் வசதியைச் சேர்” என்பதை ஆன் செய்யவும்.

      மற்ற சாதனங்கள் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருக்கும் வரை, அவை உங்கள் iPhoneக்கு அருகில் இல்லாவிட்டாலும், அவற்றால் Wi-Fi மூலம் அழைப்புகளைச் செய்யவும் பெறவும் முடியும்.

  3. உங்கள் iPad இல், அமைப்புகள் > FaceTimeக்குச் சென்று, "பிற சாதன அழைப்புகளை அனுமதி" என்பதை ஆன் செய்யவும்.

உங்கள் iPad அல்லது Macஇல் ஃபோன் அழைப்புகளைச் செய்தல் அல்லது பெறுதல்

மற்ற சாதனங்களில் அழைப்புகளை அனுமதிக்கும் வகையில் உங்கள் iPhoneஐ அமைத்த பிறகு, உங்கள் iPad மற்றும் Macஇல் ஃபோன் அழைப்புகளைச் செய்யலாம் பெறலாம்.

  • அழைப்பைச் செய்தல்: தொடர்புகள், கேலண்டர், FaceTime, மெசேஜஸ், தேடல் அல்லது Safari ஆகியவற்றில் ஃபோன் எண்ணைத் தட்டவும். அல்லது FaceTimeஐத் திறந்து “புதிய FaceTime” என்பதைத் தட்டி அல்லது கிளிக் செய்த பிறகு தொடர்பு அல்லது ஃபோன் எண்ணை உள்ளிடவும்.

    இரண்டு SIM உடன் கூடிய உங்கள் iPad வழியாக ரிலே செய்வதன் மூலம் மற்றொரு சாதனத்தில் இருந்து அழைப்பைச் செய்தால், உங்கள் இயல்புநிலை வாய்ஸ் லைனைப் பயன்படுத்தி அழைப்பு செய்யப்படும்.

  • அழைப்பைப் பெறுதல்: அழைப்பைப் புறக்கணிக்கவோ பதிலளிக்கவோ அறிவிப்பை ஸ்வைப் செய்யவும் அல்லது தட்டவும்.

உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகளைப் பெறுவதை நிறுத்தவும்

உங்கள் iPadஇல் அழைப்புகளைப் பெற வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் iPhoneஇல் அதற்கான விருப்பத்தை ஆஃப் செய்யவும்.

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் > செயலிகள் > FaceTime என்பதற்குச் செல்லவும்.

  2. “பிற சாதன அழைப்புகளை அனுமதி” என்பதை ஆஃப் செய்யவும்.

உங்கள் iPadஇல் மெசேஜ்களை அனுப்புதல் மற்றும் பெறுதல்

உங்கள் iPadஇல் iMessage, SMS/RCS/MMS ஆகிய இரண்டு மெசேஜ்களையும் அனுப்பலாம், பெறலாம். iMessage மற்றும் SMS/RCS/MMS மெசேஜ்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, iMessage, RCS, SMS/MMS ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? என்ற பிரிவைப் பார்க்கவும்

iPadஇல் iMessagesஐ அனுப்புவதற்கும் பெறுவதற்கும், iPadஇல் மெசேஜஸ் செயலியை அமைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் iPadஇல் SMS/RCS/MMS மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெறுவதற்கும், உங்கள் அனைத்து Apple சாதனங்களிலும் மெசேஜ்களை அணுகுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால்

உங்கள் iPadஇல் ஃபோன் அழைப்புகளைச் செய்வது மற்றும் பெறுவதுடன், ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்திற்கு FaceTime அழைப்பை மாற்ற Handoffஐயும் பயன்படுத்தலாம். உங்கள் iPadஇல் இருந்து உங்களின் iPadக்கான பிற Apple சாதனங்களுக்கு FaceTime அழைப்பை ஹேண்ட் ஆஃப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Wi-Fi அழைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Wi-Fi அழைப்பின் மூலம் அழைப்பைச் செய்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.