இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள வேறு உலாவிக்கு Safari தரவைப் எக்ஸ்போர்ட் செய்தல்

iPadOS 18.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில், நீங்கள் தேர்ந்தெடுத்த தரவை Safariஇல் இருந்து எக்ஸ்போர்ட் செய்யலாம், பிறகு அந்தத் தரவை வேறு உலாவியில் இம்போர்ட் செய்யலாம்.

Safariஇல் இருந்து நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யக்கூடிய தரவுகளில் பின்வருவன அடங்கும்:

  • புக்மார்க்குகள்

  • வரலாறு

  • நீட்டிப்புகள்

  • கிரெடிட் கார்டுகள்

  • பாஸ்வேர்டுகள்

கவனத்திற்கு: எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட உங்கள் தரவு என்கிரிப்ட் செய்யப்படவில்லை, கோப்பை அணுகக்கூடிய அனைவரும் அதைப் பார்க்கலாம். வேறு உலாவியில் தரவை இம்போர்ட் செய்த பிறகு, நீங்கள் எக்ஸ்போர்ட் செய்த கோப்பை நீக்கவும்.

Safariஇல் இருந்து வேறு உலாவிக்கு நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யக்கூடிய தரவைக் காட்டுகின்ற “உலாவல் தரவை எக்ஸ்போர்ட் செய்தல்” திரை.
  1. அமைப்புகள்  > செயலிகள் > Safari என்பதற்குச் செல்லவும்.

  2. “வரலாறு மற்றும் இணையதளத் தரவுகள்” என்பதற்குக் கீழே, “எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.

  3. எக்ஸ்போர்ட் செய்யவேண்டிய தரவைத் தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் உலாவலுக்கான சுயவிவரங்களை Safariஇல் உருவாக்கியிருந்தால், நீங்கள் தரவை எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் சுயவிவரத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது “சுயவிவரங்கள் அனைத்தும்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    ஒவ்வொரு சுயவிவரத்திற்கும் அதற்கென வரலாறு மற்றும் நீட்டிப்புகள் தரவுகள் உள்ளன. புக்மார்க்குகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பாஸ்வேர்டுகளுக்கான தரவுகள் அனைத்துச் சுயவிவரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

  4. “பதிவிறக்கங்களில் சேமி” என்பதைத் தட்டவும்.

  5. முடிந்தது என்பதைத் தட்டவும்.

எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட தரவுகள் உங்கள் “பதிவிறக்கங்கள்” கோப்புறையில் .zip கோப்பாகச் சேமிக்கப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.