இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இருந்து சேமிப்பகச் சாதனம், சர்வர் அல்லது கிளவுடிற்குக் கோப்புகளை மாற்றுதல்

iPad மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம், கோப்பு சர்வர் அல்லது iCloud, Box, Dropbox போன்ற கிளவுட் சேமிப்பகச் சேவைகளைப் பயன்படுத்தி கோப்புகளை நீங்கள் இடமாற்றலாம்.

வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம் மூலம் கோப்புகளை இடமாற்றுதல்

  1. USB டிரைவ் அல்லது SD கார்டு போன்ற வெளிப்புறச் சேமிப்பக சாதனத்துடன் உங்கள் iPad அல்லது கம்ப்யூட்டரை இணைக்கவும்.

    iPad உடன் இணைக்க, கேபிள் அடாப்டர் உங்களுக்குத் தேவைப்படலாம். வெளிப்புறச் சேமிப்பக சாதனங்களை இணைத்தல் என்பதைப் பார்க்கவும்.

    குறிப்பு: உங்கள் iPadஇல் “இந்த கம்ப்யூட்டர் நம்பகமானதா?” என்று கேட்கக்கூடிய விழிப்பூட்டல் காட்டப்பட்டால் “நம்பகமானது” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘இந்த கம்ப்யூட்டர் நம்பகமானதா?’ விழிப்பூட்டல் பற்றிய விவரங்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

  2. சேமிப்பகச் சாதனத்திற்குக் கோப்புகளை நகலெடுக்க ஆதரிக்கப்படும் செயலியைப் பயன்படுத்தவும் (கோப்புகள், Pages போன்றவை). கோப்புகள் மற்றும் கோப்புறைகளை ஒழுங்கமைத்தல் என்பதைப் பார்க்கவும்

  3. சேமிப்பகச் சாதனத்தைத் துண்டித்து, நகலெடுக்கப்பட்ட கோப்புகளை இடமாற்ற விரும்பும் சாதனத்துடன் அதை இணைக்கவும்.

  4. இணைக்கப்பட்ட சாதனத்திற்குக் கோப்புகளை நகலெடுக்கவும். Mac பயனர் வழிகாட்டியின் பிற சேமிப்பகச் சாதனங்களை Mac உடன் இணைத்துப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்தை அணுகுதல்

இணைக்கப்பட்ட வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்தை நீங்கள் திறக்கலாம், மறுபெயரிடலாம், அதிலுள்ளவற்றை அழிக்கலாம் மற்றும் அதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேல்பகுதியில் உள்ள “சைடுபார்” பட்டன் என்பதைத் தட்டவும்.

  3. இருப்பிடங்கள் என்பதற்குக் கீழே காட்டப்படும் வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்தின் பெயரைத் தொட்டுப் பிடித்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • சேமிப்பக சாதனத்தின் உள்ளடக்கங்களைப் பார்க்க: “புதிய விண்டோவில் திற” என்பதைத் தட்டவும்.

    • சேமிப்பகச் சாதனத்திற்கு மறுபெயரிட: “[சாதனம்] மறுபெயரிடு” என்பதைத் தட்டவும்.

    • சேமிப்பகச் சாதனத்தை அழிக்க: “அழி” என்பதைத் தட்டவும்.

    • சேமிப்பகச் சாதனம் பற்றிய தகவல்களைப் பெற: “தகவல் பெறுக” என்பதைத் தட்டவும்.

வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்தின் வடிவமைப்பை மாற்றுதல்

USB-C போர்ட் உள்ள iPad மாடல்களில், “கோப்புகள்” செயலி மூலம் நீங்கள் வெளிப்புற டிரைவின் வடிவமைப்பை APFS (Apple File System), ExFAT அல்லது MS-DOS (FAT) கோப்பு வடிவத்திற்கு விரைவாக மாற்றலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேற்புறம் உள்ள “சைடுபாரை நிலைமாற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “இருப்பிடங்கள்” என்பதற்குக் கீழே உள்ள சேமிப்பகச் சாதனத்தின் பெயரைத் தொட்டுப் பிடித்து, “அழி” என்பதைத் தட்டவும்.

  4. சாதனத்திற்கான வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, APFS, ExFAT அல்லது MS-DOS (FAT). பிறகு “அழி” என்பதை மீண்டும் தட்டவும்.

கம்ப்யூட்டர் அல்லது கோப்பு சர்வருடன் இணைத்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “சைடுபார்” பட்டன் என்பதைத் தட்டவும்

  3. சைடுபாரின் மேற்பகுதியில் உள்ள “மேலும்” பட்டன் என்பதைத் தட்டவும்.

  4. “சர்வருடன் இணை” என்பதைத் தட்டவும்.

  5. லோக்கல் ஹோஸ்ட் பெயர் அல்லது நெட்வொர்க் முகவரியை உள்ளிட்டு, பின்னர் “இணை” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டர் அல்லது கோப்பு சர்வருடன் இணைத்த பிறகு, “சர்வருடன் இணை” திரையில் உள்ள “சமீபத்திய சர்வர்கள்” பட்டியலில் இணைக்கப்பட்ட சர்வர் காட்டப்படும். பட்டியலில் உள்ள சமீபத்திய சர்வருடன் இணைக்க, அதன் பெயரைத் தட்டவும்.

  6. இணைக்க விரும்பும் விதத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

    • விருந்தினர்: பகிரப்பட்ட கம்ப்யூட்டர் விருந்தினர் அணுகலை அனுமதித்தால், விருந்தினர் பயன்முறையில் நீங்கள் இணைக்கலாம்.

    • பதிவுசெய்துள்ள பயனர்: நீங்கள் பதிவுசெய்துள்ள பயனர் என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் பயனர்பெயரையும் பாஸ்வேர்டையும் உள்ளிட வேண்டும்.

  7. “அடுத்து” என்பதைத் தட்டி, “உலாவுக” சைடுபாரில் (பகிரப்பட்டவைக்குக் கீழே) சர்வர் தொகுதி அல்லது பகிரப்பட்ட கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்.

கோப்பு சர்வரைத் துண்டிக்க, “உலாவுக” சைடுபாரில் சர்வர் பெயருக்கு அருகில் இருக்கும் “எஜெக்ட்” பட்டன்-ஐத் தட்டவும்.

Mac சாதனத்தில் கோப்புப் பகிர்வை அமைப்பது தொடர்பான தகவலுக்கு, Mac பயனர் வழிகாட்டியில் Macஇல் கோப்புப் பகிர்வை அமைத்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

Box அல்லது Dropbox போன்ற கிளவுட் சேமிப்பகச் சேவைகள் மூலம் கோப்புகளை இடமாற்றுதல்

குறிப்பு: சந்தாக் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

  1. நீங்கள் பகிர விரும்பும் கோப்புகளைப் பதிவேற்ற, கிளவுட் சேமிப்பகச் சேவை நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை உங்கள் iPad அல்லது கம்ப்யூட்டரில் செயல்படுத்தவும்.

  2. பகிரப்பட்ட கோப்புகளை உங்கள் iPadஇல் அணுக, கோப்புகள் செயலிக்குச் சென்று, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சைடுபார்” பட்டன் என்பதைத் தட்டி, “இருப்பிடங்கள்” என்பதற்குக் கீழே உள்ள சேமிப்பகச் சேவையின் பெயரைத் தட்டவும்.

    பகிரப்பட்ட கோப்புகளை கம்ப்யூட்டரில் அணுக, சேவை நிறுவனத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புகளைப் பதிவிறக்கப்பட்டதாக வைத்திருத்தல்

உங்கள் iPadஇல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்த விரும்பும் கோப்புகளைப் பதிவிறக்கப்பட்டதாக வைத்திருக்கலாம். நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது இந்தக் கோப்புகளில் மாற்றங்களைச் செய்தால், மீண்டும் ஆன்லைன் வரும்போது அந்த மாற்றங்கள் iCloud உடன் ஒத்திசைக்கப்படும்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பதிவிறக்கப்பட்டதாக வைக்க விரும்பும் கோப்பைக் கண்டறியவும்.

  3. பதிவிறக்கப்பட்டதாக வைக்க விரும்பும் கோப்பைத் தொட்டுப் பிடிக்கும்போது, திறக்கும் மெனுவில் “பதிவிறக்கப்பட்டதை வைத்திரு” என்பதைத் தட்டவும்.

    “பதிவிறக்கப்பட்டதை வைத்திரு” விருப்பம் மெனுவில் காட்டப்படவில்லை என்றால், உங்கள் iPadஇல் அந்தக் கோப்பு ஏற்கெனவே உள்ளது என்று அர்த்தம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.