இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTagஐச் சேர்த்தல்

உங்கள் iPadஐப் பயன்படுத்தி உங்கள் Apple கணக்கு உடன் AirTagஐ இணைக்கலாம். கீசெயின், முதுகுப் பை போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுடன் இதை இணைப்பதன் மூலம், அந்தப் பொருட்களைத் தொலைத்துவிட்டாலோ அல்லது அவற்றைத் தவறுதலாக எங்கேனும் வைத்துவிட்டாலோ “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறியலாம்.

உங்கள் AirTagஐ எங்காவது விட்டுச் சென்றாலும் நீங்கள் அறிவிப்புகளைப் பெறலாம். AirTag அல்லது பிற ஐட்டத்தை விட்டுச் செல்லும்போது தெரிவிக்கும் வகையில் விழிப்பூட்டல்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

“இடம் அறி” செயலியில் ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளையும் நீங்கள் சேர்க்கலாம். மூன்றாம் தரப்பு ஐட்டத்தைச் சேர்த்தல் அல்லது புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.

AirTagஐச் சேர்த்தல்

  1. உங்கள் iPad முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. AirTagஇல் இருந்து பேட்டரி டேபை அகற்றி (பொருந்தினால்), அதை உங்கள் iPadக்கு அருகில் வைக்கவும்.

  3. உங்கள் iPad திரையில் காட்டப்படும் “இணை” என்பதைத் தட்டவும்.

  4. பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்வுசெய்யவும் அல்லது “பிரத்தியேகப் பெயர்" என்பதைத் தேர்வுசெய்து ஒரு பெயரை டைப் செய்து, இமோஜியைத் தேர்ந்தெடுத்து, “தொடர்க” என்பதைத் தட்டவும்.

  5. “தொடர்க” என்பதைத் தட்டி உங்கள் Apple கணக்கில் ஐட்டத்தைப் பதிவுசெய்து, “நிறைவுசெய்” என்பதைத் தட்டவும்.

“இடம் அறி” செயலியிலும் AirTagஐப் பதிவுசெய்யலாம். “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “AirTagஐச் சேர்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

ஐட்டம் வேறொருவரின் Apple கணக்கில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அவர்கள் அதை நீக்கிய பின்னர் மட்டுமே உங்களால் அதைச் சேர்க்க முடியும். ”இடம் அறி” செயலியில் இருந்து AirTag அல்லது பிற ஐட்டங்களை அகற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

AirTagஇன் பெயர் அல்லது இமோஜியை மாற்றுதல்

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலியைத் திறக்கவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, பெயர் அல்லது இமோஜியை மாற்ற விரும்பும் AirTagஐத் தட்டவும்.

  3. “ஐட்டத்திற்கு மறுபெயரிடு” என்பதைத் தட்டவும்.

  4. பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்வுசெய்யவும் அல்லது பிரத்தியேகப் பெயர் என்பதைத் தேர்வுசெய்து ஒரு பெயரை டைப் செய்து, இமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

AirTag பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்த்தல்

உங்கள் Apple கணக்கில் AirTagஐப் பதிவுசெய்த பின், அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை “இடம் அறி” செயலியில் நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் “இடம் அறி” செயலியைத் திறக்கவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, கூடுதல் விவரங்களைப் பார்க்க விரும்பும் AirTagஐத் தட்டவும்.

  3. AirTagஇன் பெயரைத் தட்டி, அதன் வரிசை எண் மற்றும் ஃபர்ம்வேர் பதிப்பைப் பார்க்கலாம்.

பேட்டரி அளவு குறைவாக இருந்தால், AirTagஇன் இருப்பிடத்திற்குக் கீழே ஒரு மெசேஜ் காட்டப்படும். “ஐட்டங்கள்” பட்டியலில் AirTag பெயருக்கு அருகிலும், பேட்டரி குறைவாக உள்ளது குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.