இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் உள்ள மேப்ஸில், இடங்களைச் சுற்றிப் பார்த்தல்

360 டிகிரி பனோரமா காட்சிகள் வழியாக நீங்கள் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

மேப்ஸ் செயலியில் இந்தப் பகுதிக்கான மேப்பிற்கு மேற்புறம், நகர்த்திப் பார்க்கும் வகையிலான 360 டிகிரி பனோரமா காட்சி காட்டப்பட்டுள்ளது. மேப்பின் மீது உள்ள “சுற்றிப் பார்த்தல்” ஐகான் காட்சியை நோக்கிச் சுட்டிக்காட்டுகிறது.
  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பிட்ட சில நகரங்களில், மேப்பின் கீழ்ப்பகுதிக்கு அருகில் உள்ள “சுற்றிப் பார்த்தல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. காட்சியை மாற்ற, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • நகர்த்த: காட்சியில், இடதுபுறம் அல்லது வலதுபுறம் விரலை இழுக்கவும்.

    • முன்னோக்கி நகர்த்த: காட்சியைத் தட்டவும்.

    • பெரிதாக்க அல்லது சிறிதாக்க: உள்நோக்கி அல்லது வெளிநோக்கி பின்ச் செய்யவும்.

    • வேறொரு பிரபலமான இடத்தைப் பார்க்க: முழுத்திரைக் காட்சியிலிருந்து மாறிய பிறகு, மேப்பில் எங்கு வேண்டுமானாலும் தட்டவும் அல்லது மேப்பை இழுக்கவும்.

    • முழுத்திரைக் காட்சிக்கோ அதிலிருந்தோ மாற்ற: “முழுத்திரைப் பயன்முறையைக் காட்டு” பட்டன் அல்லது “முழுத்திரைப் பயன்முறையிலிருந்து வெளியேறு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • முழுத்திரைக் காட்சியில் உள்ள லேபிள்களை அகற்ற: திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள முகவரி கார்டைத் தட்டி, லேபிள்களை மறை என்பதைத் தட்டவும்.

  4. முடிந்ததும், “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

“சுற்றிப் பார்த்தல்” அம்சம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.