இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

மவுஸை iPad உடன் இணைத்தல்

Magic Mouse, மற்றொரு Bluetooth® மவுஸ் அல்லது USB மவுஸை iPad உடன் இணைக்கலாம்.

குறிப்பு: மவுஸ் சாதனங்கள் தனியாக விற்கப்படுகின்றன. iPadஇன் குறிப்பிட்ட சில மாடல்களுடன் சில குறிப்பிட்ட மவுஸ் சாதனங்கள் மட்டுமே இணக்கமாக இருக்கும்.

Magic Mouse அல்லது மற்ற Bluetooth மவுஸை இணைத்தல்

  1. Magic Mouseஐப் பொறுத்தவரை, மவுஸ் சார்ஜ் செய்யப்பட்டிருப்பதையும் ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.

    மற்ற Bluetooth மவுஸைக் கண்டறிதல் பயன்முறையில் அமைக்க மவுஸுடன் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  2. iPadஇல், அமைப்புகள்  > Bluetooth என்பதற்குச் சென்று Bluetoothஐ ஆன் செய்யவும்.

  3. மற்ற சாதனங்கள் பட்டியலில் சாதனம் தோன்றும்போது அதைத் தேர்ந்தெடுக்கவும்.

    நீங்கள் Magic Mouseஐ இணைக்கும்போது PIN கேட்கப்பட்டால், “0000” (நான்கு பூஜ்ஜியங்கள்) என டைப் செய்து “இணை” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: Mac அல்லது மற்றொரு iPad உடன் மவுஸ் இணைக்கப்பட்டிருந்தால், மவுஸை உங்கள் iPad உடன் இணைப்பதற்கு முன்பு அவற்றை நீங்கள் இணைப்புநீக்க வேண்டும். பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • iPhone அல்லது iPadஇல்: Bluetooth ஆக்சஸரியை இணைப்பு நீக்குதல் பிரிவைப் பார்க்கவும்.

  • macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில்: Apple மெனு  > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து சைடுபாரில் Bluetooth என்பதை கிளிக் செய்த பிறகு கன்ட்ரோல் பட்டனை அழுத்திக்கொண்டே சாதனத்தை கிளிக் செய்து “நீக்கு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  • macOS 12.5 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில்: Apple மெனு > சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் தேர்வுசெய்து Bluetooth என்பதை கிளிக் செய்த பிறகு கன்ட்ரோல் பட்டனை அழுத்திக்கொண்டே சாதனத்தை அழுத்தி “அகற்று” என்பதை கிளிக் செய்யவும்.

மவுஸை iPad உடன் மீண்டும் இணைத்தல்

மவுஸின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தாலோ Bluetooth வரம்பிற்கு வெளியே, அதாவது சுமார் 33 அடியை (10 மீட்டர்) தாண்டி மவுஸ் அல்லது iPadஐ நகர்த்தினாலோ அதன் இணைப்புநீக்கப்படும்.

மீண்டும் இணைக்க, மவுஸ் ஸ்விட்ச்சை ஆன் செய்யவும் அல்லது மவுஸ் மற்றும் iPadஐ மீண்டும் வரம்பிற்குள் கொண்டுவந்து மவுஸை கிளிக் செய்யவும்.

USB மவுஸை இணைத்தல்

பொருத்தமான கேபிள் அல்லது அடாப்டர்கள் மூலம், USB மற்றும் USB அடிப்படையிலான ரிசீவர்களைப் பயன்படுத்தி பல்வேறு மூன்றாம் தரப்பு மவுஸ் சாதனங்களை iPad உடன் இணைக்கலாம். சாதன உற்பத்தியாளர் வழங்கும் வழிமுறைகளைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.