இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலியில் கட்டுப்பாடுகளைப் பிரத்தியேகமாக்குதல்

“பெரிதாக்கி” செயலியில் காட்டப்படும் கட்டுப்பாடுகளை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பிரத்தியேகமாக்கலாம்.

கட்டுப்பாடுகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “அமைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • செயல்பாடுகள், படமெடுத்தல் அல்லது கண்டறிதல் பயன்முறையைச் சேர்க்க அல்லது அகற்ற: செயல்பாடுகள், படமெடுத்தல் அல்லது கண்டறிதல் என்பதைத் தட்டி, “கட்டுப்பாட்டுப் பேனலில் காட்டு” என்பதை ஆன்/ஆஃப் செய்யவும்.

    • பிற கட்டுப்பாடுகளைச் சேர்க்க அல்லது அகற்ற: கட்டுப்பாட்டுக்கு அடுத்துள்ள “சேர்” பட்டன் அல்லது “அகற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

      இரண்டு முதன்மைக் கட்டுப்பாடுகள் வரை நீங்கள் தேர்வுசெய்யலாம். “பெரிதாக்கி” செயலியைத் திறக்கும்போது முதன்மைக் கட்டுப்பாடுகள் முதன்மைத் திரையில் தோன்றும். இரண்டுக்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளைச் சேர்த்திருந்தால், திரையின் கீழேயுள்ள கட்டுப்பாட்டு பேனலை மேல்நோக்கி ஸ்வைப் செய்து இரண்டாம் நிலைக் கட்டுப்பாடுகளை நீங்கள் அணுகலாம்.

    • பிற கட்டுப்பாடுகளை மறுவரிசைப்படுத்த: கட்டுப்பாட்டை மேலே அல்லது கீழே நகர்த்த, "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ இழுக்கவும்.

கட்டுப்பாடு

விளக்கம்

ஒளிர்வு

ஒளிர்வைச் சரிசெய்யலாம்.

கேமராக்கள்

முன் மற்றும் பின்புற கேமராக்களுக்கு இடையே மாற்றலாம்.

கான்ட்ராஸ்ட்

கான்ட்ராஸ்ட்டைச் சரிசெய்யலாம்.

ஃபில்டர்கள்

நிற ஃபில்டரைப் பயன்படுத்தலாம்.

ஃபில்டர்கள் கட்டுப்பாட்டைச் சேர்க்கும்போது, நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஃபில்டர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

ஃபிளாஷ்லைட்

ஃபிளாஷ்லைட்டை ஆன் செய்யலாம்

குறிப்பு: ட்ரூ டோன் ஃபிளாஷ் உள்ள iPad மாடல்களில் இந்த விருப்பம் கிடைக்கிறது.

ஃபோகஸ் லாக்

பெரிதாக்கியின் ஃபோகஸை லாக் செய்யலாம்.

ஜூம்

பெரிதாக்கலாம் அல்லது சிறிதாக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான கட்டுப்பாடுகளைச் செயல்பாடுகளுக்கு அமைத்தல்

அடிக்கடி மேற்கொள்ளும் பணிகள் அல்லது சூழ்நிலைகளுக்கு (செயல்பாடுகள் என்று அழைக்கப்படும்) நீங்கள் பயன்படுத்தும் கட்டுப்பாடுகளைச் சேமிக்கலாம், தேவைப்படும்போது வெவ்வேறு செயல்பாடுகளுக்கிடையே மாறலாம் உதாரணமாக, உணவகத்தில் மெனுவை வாசிப்பதற்கு நீங்கள் ஒரு செயல்பாட்டை உருவாக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “செயல்பாடுகள்” பட்டன்-ஐத் தட்டி, தற்போதைய கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி புதிய செயல்பாட்டை உருவாக்க “புதிய செயல்பாடாகச் சேமி” என்பதைத் தட்டவும்.

  3. செயல்பாட்டிற்கான பெயரை உள்ளிட்டு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.