இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

பெரிதாக்கும் கண்ணாடி போன்று iPadஐப் பயன்படுத்துதல்

உங்கள் iPadஐ ஒரு பெரிதாக்கும் கண்ணாடி போலப் பயன்படுத்தி “பெரிதாக்கி” செயலியின் மூலம் உரை அல்லது உங்களைச் சுற்றியுள்ள பொருட்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.

“பெரிதாக்கி” செயலியில் குளோஸ்-அப்பில் ஒரு பூ காட்டப்படுகிறது.

அருகிலுள்ள பொருட்கள் அல்லது உரையைப் பெரிதாக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பெரிதாக்க விரும்பும் உரை அல்லது பொருளின் மீது iPad கேமராவைக் காட்டி, படத்தைப் பெரிதாக்க/சிறிதாக்க ஸ்லைடரை இழுக்கவும்.

  3. பின்வரும் இயல்புநிலைக் கட்டுப்பாடுகளில் ஏதேனும் ஒன்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்:

உதவிக்குறிப்பு: கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அல்லது iPad பட்டனை கிளிக் செய்வதன் மூலம் “பெரிதாக்கி” செயலியை விரைவாகத் திறப்பதற்கான சுருக்கவழியை அமைக்கலாம். அணுகல்தன்மை அம்சங்களை விரைவாக ஆன்/ஆஃப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

ஃபிரேமைத் தற்காலிகமாக ஃப்ரீஸ் செய்தல்

ஃபிரேமில் உள்ளவற்றை ஃபோட்டோஸ் செயலியில் சேமிக்காமலேயே தற்காலிகமாகப் படமெடுக்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. “படமெடு” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

எளிதாக வாசிக்கும் வகையிலான வடிவமைப்பில் உரையைப் பார்த்தல்

உரை உள்ள ஒரு ஃபிரேமை நீங்கள் படமெடுத்தால், எளிதாக வாசிக்கும் வகையிலான வடிவமைப்பில் அதை நீங்கள் பார்க்கலாம். உரையின் எழுத்துரு, அளவு, நிறம் ஆகியவற்றை நீங்கள் சரிசெய்யலாம் அல்லது சத்தமாக வாசிக்கச் செய்து கேட்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “பெரிதாக்கி” செயலிக்குச் செல்லவும்.

  2. ஃபிரேமைப் படமெடுக்க “படமெடு” பட்டன்-ஐத் தட்டி, “ரீடர்” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் படமெடுத்த ஃபிரேமில் உரை எதுவும் இல்லை என்று “பெரிதாக்கி” செயலி அறிவிப்பைக் காட்டுகிறது.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உரையின் தோற்றத்தை மாற்ற: “எழுத்தின் அளவு” பட்டன்-ஐத் தட்டி, உரையின் எழுத்துரு, அளவு மற்றும் நிறத்திற்கான விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

    • உரையைச் சத்தமாக வாசிக்கச் செய்து கேட்க: “எழுத்தின் அளவு” பட்டன்-ஐத் தட்டி, “பக்கத்தை வாசி” என்பதைத் தட்டவும்.

    • படமெடுத்த ஃபிரேமுக்குத் திரும்ப: “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.