இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் AirPods அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல்

AirPods 3 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள், AirPods Pro, AirPods Max போன்றவற்றின் மூலம், உங்கள் நகர்வுநிலை அல்லது கேட்கும் திறனுக்கு ஏற்ற வகையில் அணுகல்தன்மை அமைப்புகளை நீங்கள் மமற்றலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > AirPods என்பதற்குச் செல்லவும்.

  2. உங்களிடம் பல AirPods இருந்தால், ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. பின்வரும் விருப்பங்களில் ஒன்றை அமைக்கவும்:

    • அழுத்தும் வேகம்: ஒரு செயல் செய்யப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று முறை எவ்வளவு வேகமாக அழுத்த வேண்டும் என்பதை மாற்றவும்.

    • அழுத்திப் பிடிப்பதற்கான கால அளவு: உங்கள் AirPodsஐ அழுத்திப் பிடிக்கத் தேவையான கால அளவை மாற்றவும்.

    • ஒரு AirPodஇல் இரைச்சல் நீக்கம்: AirPods Proஐப் பயன்படுத்தும்போது, உங்கள் AirPodsஇல் ஒன்றை மட்டுமே பயன்படுத்தினாலும் “இரைச்சல் நீக்கம்” அம்சத்தை ஆன் செய்யலாம்.

    • ஸ்பேஷியல் ஆடியோ தலை அசைவு: “iPadஐப் பின்தொடர்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளபோது, ஆதரிக்கப்படும் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கத்திற்கான ஸ்பேஷியல் ஆடியோ, உங்கள் தலை அசைவைப் பின்தொடராமல் உங்கள் iPadஇல் இருந்து வருவதைப்போல் கேட்கும்.

    • டோன் ஒலியளவு: பேட்டரி குறைவாக இருப்பது தொடர்பான விழிப்பூட்டல்கள் போன்று AirPods மூலம் இயக்கப்படும் ஒலி எஃபெக்ட்டுகளின் ஒலியளவை மாற்றலாம்.

உங்களிடம் AirPods Pro 2 இருந்தால், iPadஐப் பயன்படுத்தி செவித்திறன் பரிசோதனை செய்யலாம். உங்களுக்கு லேசானது முதல் மிதமான செவித்திறன் இழப்பு இருந்தால், “செவித்திறன் உதவி” அம்சத்தின் மூலம் செவித்திறன் சார்ந்த உதவியைப் பெறலாம். AirPods Pro 2இல் செவித்திறன் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களைப் பயன்படுத்துதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.