இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள பகிர்ந்த ஆல்பத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்த்தல் மற்றும் நீக்குதல்

பகிர்ந்த ஆல்பத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் சேர்க்கலாம் நீக்கலாம். பகிர்ந்த ஆல்பத்திலிருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்கள் புகைப்பட லைப்ரரியில் சேமிக்கலாம்.

பகிர்ந்த ஆல்பத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்த்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “பகிர்ந்த ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, ஆல்பத்தைத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புகைப்படங்களைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுத்து, “சேர்” என்பதைத் தட்டவும்.

நீங்கள் புதிய புகைப்படங்களைச் சேர்க்கும்போது, ஆல்பத்தைப் பகிரும் நபர்களுக்கு அது தானாகவே அறிவிக்கப்படும்.

பகிரப்பட்ட ஆல்பத்திலிருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துகளை நீக்குதல்

பகிர்ந்த ஆல்பத்தை உருவாக்கியவரால் அந்த ஆல்பத்தில் உள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் கருத்துகளையும் நீக்க முடியும். சந்தாதாரர்கள் அவர்கள் தனிப்பட்ட முறையில் சேர்த்த எதையும் நீக்கலாம். நீக்கப்படும் அனைத்தும் உங்களின் எல்லாச் சாதனங்களிலும் மற்றும் அனைத்து சந்தாதாரர்களின் சாதனங்களிலும் பகிரப்பட்ட ஆல்பத்திலிருந்து தானாக நீக்கப்படும்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “பகிர்ந்த ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, ஆல்பத்தைத் தட்டவும்.

  3. புகைப்படம் அல்லது வீடியோவைத் தொட்டுப் பிடித்து, “பகிரப்பட்ட ஆல்பத்திலிருந்து நீக்கு” என்பதைத் தட்டவும்.

ஒரு கருத்தை நீக்க, அதைத் தொட்டு பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

பகிர்ந்த ஆல்பத்திலிருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்கள் புகைப்பட லைப்ரரியில் சேமித்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “பகிர்ந்த ஆல்பங்கள்” என்பதைத் தட்டி, ஒரு புகைப்படத்தையோ வீடியோவையோ தட்டவும்.

  3. “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, மேலே ஸ்வைப் செய்து, படத்தை சேமி அல்லது வீடியோவைச் சேமி என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.