இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் கால்குலேட்டர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

கால்குலேட்டர் செயலியில் யூனிட்களை மாற்றலாம் மற்றும் கணிதத் தீர்வுகளைக் கண்டறியலாம். கணிதக் குறிப்புகள் அம்சத்தைப் பயன்படுத்தி அடிப்படை அல்லது அறிவியல் கணக்கீடுகளைச் செய்யலாம், கணக்குகளுக்கான வரைபடங்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டறியலாம். உங்கள் முந்தைய கணக்கீடுகளையும் மீண்டும் பார்க்கலாம்.

அடிப்படை கால்குலேட்டரில் நாணய மாற்றம் காட்டப்பட்டுள்ளது.

யூனிட்களை எளிதாக மாற்றுதல்

மைலில் இருந்து மில்லிமீட்டருக்கு மாற்ற வேண்டுமா? யென்னில் இருந்து யூரோக்களுக்கு மாற்ற வேண்டுமா? “யூனிட் மாற்றம்” பயன்முறை மூலம் நீளம், எடை, ஆற்றல், அழுத்தம், வேகம், நாணயம் மற்றும் பலவற்றின் யூனிட்களை மாற்றலாம். கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, "மாற்று" என்பதை ஆன் செய்யவும்.

மெமரி, மடங்கு, மடக்கை மற்றும் முக்கோணவியல் செயல்பாடுகளைக் கொண்ட அறிவியல் கால்குலேட்டர் iPadஇல் காட்டப்பட்டுள்ளது.

அறிவியல் கால்குலேட்டரைச் சிறப்பாகப் பயன்படுத்துதல்

அறிவியல் கால்குலேட்டரில் பின்னங்கள், அடுக்குகள், வர்க்கமூலங்கள், மடங்குகள், மடக்கைகள், முக்கோணவியல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட கணக்கீடுகளைச் செய்யலாம். கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, “அறிவியல்” என்பதைத் தட்டி, கணிதக் கோவையை உள்ளிடவும். மீண்டும் தொடங்க, அனைத்தையும் அழி (AC) பட்டனைத் தட்டவும் அல்லது “நீக்கு” கீ-ஐத் தொட்டுப் பிடிக்கவும்.

iPadஇல் கால்குலேட்டர் செயலியில் கணிதக் குறிப்பு திறந்துள்ளது. அதில் வரையறுக்கப்பட்ட மாறிகள், சமன்பாடுகள், ஒரு கிராஃப் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

கணிதக் கோவைகளை கிராஃப்களாக வரைதல்

கணிதக் குறிப்புகளில் கணிதக்கோவைகளுக்குத் தீர்வு காணலாம், மாறிகளுக்குப் பதிலீடு செய்யலாம் மற்றும் கிராஃப்களை வரையலாம். கால்குலேட்டர் பயன்முறை பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டி, இரண்டு மாறிகள் கொண்ட சமன்பாட்டை எழுதவும். உங்கள் கிராஃபை வடிவமைக்க, சமன்பாட்டிலுள்ள “சமன்” குறியீட்டைத் தட்டவும்.

iPad கால்குலேட்டர் செயலியின் இடதுபுறத்தில் இதுவரையான கணக்கீடுகள் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் தீர்வுகளை மறுஆய்வு செய்தல்

அடிப்படை அல்லது அறிவியல் கால்குலேட்டர்களில் முந்தைய கணக்கீடுகளைப் பார்க்க, “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு பட்டியலை மீண்டும் ஏற்ற அதைத் தட்டவும். பட்டியலில் உள்ள ஒரு கணிதக்கோவை அல்லது முடிவைத் தொட்டுப்பிடித்து நகலெடுத்து, கால்குலேட்டர் அல்லது பிற செயலிகளில் மீண்டும் பயன்படுத்தலாம்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.