இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியில் மூன்றாம் தரப்புச் சாதனங்களைச் சேர்த்தல் அல்லது புதுப்பித்தல்

குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளை “இடம் அறி” செயலியில் நீங்கள் பயன்படுத்த முடியும். உங்கள் iPadஐப் பயன்படுத்தி உங்கள் Apple கணக்குடன் இந்தத் தயாரிப்புகளைப் பதிவுசெய்வதன் மூலம், அவற்றைத் தொலைத்துவிட்டால் அல்லது தவறவிட்டால் “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறியலாம்.

உங்கள் ஐட்டத்தை எங்காவது விட்டுச் சென்றாலும் நீங்கள் அறிவிப்புகளைப் பெறலாம். நீங்கள் ஒரு AirTag அல்லது ஐட்டத்தை விட்டுச் செல்லும்போது அறிவிப்பைப் பெறும் வகையில் iPadஇல் “இடம் அறி” செயலியில் விழிப்பூட்டல்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

நீங்கள் “இடம் அறி” செயலியில் AirTagஐயும் சேர்க்கலாம். iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTagஐச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

மூன்றாம் தரப்பு ஐட்டத்தைச் சேர்த்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு ஐட்டத்தைக் கண்டறியக்கூடியதாக அமைக்க உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  3. “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “மற்ற ஐட்டத்தைச் சேர்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  4. “இணை” என்பதைத் தட்டி, பெயரை டைப் செய்து, இமோஜியைத் தேர்ந்தெடுத்து, “தொடர்க” என்பதைத் தட்டவும்.

  5. “தொடர்க” என்பதைத் தட்டி உங்கள் Apple கணக்கில் ஐட்டத்தைப் பதிவுசெய்து, “நிறைவுசெய்” என்பதைத் தட்டவும்.

ஓர் ஐட்டத்தைச் சேர்ப்பதில் சிக்கலை எதிர்கொண்டால், அதில் “இடம் அறி” அம்சம் ஆதரிக்கப்படுகிறதா என்பதை அறிய அதன் உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளவும்.

ஐட்டம் வேறொருவரின் Apple கணக்கில் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அவர்கள் அதை நீக்கிய பின்னர் மட்டுமே உங்களால் அதைச் சேர்க்க முடியும். ”இடம் அறி” செயலியில் இருந்து AirTag அல்லது பிற ஐட்டங்களை அகற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

ஐட்டத்தின் பெயர் அல்லது இமோஜியை மாற்றுதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, பெயர் அல்லது இமோஜியை மாற்ற விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. “ஐட்டத்திற்கு மறுபெயரிடு” என்பதைத் தட்டவும்.

  4. பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்வுசெய்யவும் அல்லது பிரத்தியேகப் பெயர் என்பதைத் தேர்வுசெய்து ஒரு பெயரை டைப் செய்து, இமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

உங்கள் ஐட்டத்தைப் புதுப்பித்த நிலையில் வைத்தல்

உங்கள் ஐட்டத்தைப் புதுப்பித்த நிலையில் வைப்பதன் மூலம் “இடம் அறி” செயலியில் அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, புதுப்பிக்க விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. “புதுப்பிப்பு உள்ளது” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    குறிப்பு: “புதுப்பிப்பு உள்ளது” என்பதை நீங்கள் பார்க்கவில்லை என்றால், உங்கள் ஐட்டம் புதுப்பித்த நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

    ஐட்டம் புதுப்பிக்கப்படும்போது, “இடம் அறி” அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியாது.

ஐட்டம் பற்றிய விவரங்களைப் பார்த்தல்

உங்கள் Apple கணக்கில் ஓர் ஐட்டத்தைப் பதிவுசெய்த பின், “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி வரிசை எண் அல்லது மாடல் போன்ற அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் பார்க்கலாம். மூன்றாம் தரப்புச் செயலியை உற்பத்தியாளர் வழங்குகிறாரா என்ற தகவலையும் நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • விவரங்களைப் பார்க்க: “விவரங்களைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    • மூன்றாம் தரப்புச் செயலியைப் பெற அல்லது திறக்க: மூன்றாம் தரப்புச் செயலி கிடைக்கிறது என்றால், செயலி ஐகான் உங்களுக்குக் காட்டப்படும். செயலியைப் பதிவிறக்க “பெறுக” அல்லது “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டவும். செயலியை ஏற்கெனவே பதிவிறக்கியிருந்தால், உங்கள் iPadஇல் அதைத் திறக்க “திற” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.