இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் FaceTimeஐப் பயன்படுத்தத் தொடங்குதல்

Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேருக்கு நேர் பார்வையிட, FaceTime செயலியைப் பயன்படுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்ளவும். FaceTime அழைப்பில் இருக்கும்போது, நீங்கள் டிவி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கலாம், இசை கேட்கலாம், ஒன்றாக உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

FaceTime அமைப்புகள் திரை, FaceTimeஐ ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கான கட்டுப்பாட்டையும் FaceTimeக்கு பயன்படுத்தப்படும் Apple கணக்கையும் காட்டுகிறது.

FaceTimeஐ அமைத்தல்

FaceTime பயன்படுத்தத் தொடங்குவதற்கு, அமைப்புகள் > செயலிகள் > FaceTime ஆகிவற்றுக்குச் சென்று, உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும் அல்லது FaceTimeஐ இயக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு முறைகள் கீழே தோன்றினால், "FaceTimeஇல் உங்களை அணுகலாம்" என்பதைத் தேர்ந்தெடுக்க அல்லது தேர்வுநீக்க நீங்கள் தட்டலாம்.

FaceTime அழைப்பைத் தொடங்குவதற்கான திரை, FaceTime அழைப்பைத் தொடங்குவதற்கான புதிய FaceTime பட்டனைக் காட்டுகிறது.

FaceTime அழைப்பைச் செய்தல்

FaceTime செயலியைத் திறந்து, புதிய FaceTimeஐத் தட்டி, பிறகு நீங்கள் அழைக்க விரும்பும் நபரின் (அல்லது நபர்களின்) பெயரையோ ஃபோன் எண்ணையோ உள்ளிடவும். வீடியோ அழைப்பைச் செய்ய “FaceTime” பட்டன் அல்லது ஆடியோ அழைப்பைச் செய்ய “அழைப்பு” பட்டன் மீது தட்டவும் (அனைத்து நாடுகளிலும் அல்லது பிராந்தியங்களிலும் இந்த வசதி கிடைப்பதில்லை). அழைப்பில் 32 பேருடன் நீங்கள் பேசலாம்.

Apple சாதனம் இல்லாத ஒருவரை அழைக்க, அழைப்பிற்கான இணைப்பை உருவாக்கி மெசேஜஸ் அல்லது Mailஇல் அனுப்பலாம். தொடங்குவதற்கு FaceTimeஐத் திறந்து, “இணைப்பை உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

அழைப்பின் செயல்நிலையைக் காட்டும் FaceTime திரை. அழைப்பாளரின் படம் கீழ் வலதுபுறத்தில் ஒரு சிறிய செவ்வகத்தில் தோன்றும், அழைக்கப்படுபவரின் படம் திரையின் மீதமுள்ள பகுதியை நிரப்புகிறது. ஸ்பீக்கர், கேமரா, ஒலிமுடக்கு, உள்ளடக்கத்தைப் பகிர் மற்றும் முடிவு பட்டன்கள் உள்ளிட்ட FaceTime கட்டுப்பாடுகள் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ளன. கட்டுப்பாடுகளின் மேற்புறத்தில் நீங்கள் பேசும் நபரின் பெயர் அல்லது Apple கணக்கு உள்ளது.

FaceTime கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

FaceTime அழைப்பில் இருக்கும்போது, FaceTime கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் ஸ்பீக்கர், மைக் அல்லது கேமராவை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், உங்கள் திரையைப் பகிரலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். கட்டுப்பாடுகளைப் பார்க்கவில்லை என்றால் உங்கள் திரையைத் தட்டவும்.

SharePlay அமர்வைக் கொண்ட FaceTime அழைப்பு, அழைப்பில் Apple TV+ வீடியோ உள்ளடக்கம் பகிரப்படுவதைக் காட்டுகிறது. FaceTime கட்டுப்பாடுகள் திரையின் மேற்புறத்தில் காட்டப்பபட்டுள்ளன, கட்டுப்பாடுகளுக்கு சற்று கீழே வீடியோ பிளே ஆகிறது, பிளேபேக் கட்டுப்பாடுகள் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ளன.

FaceTime அழைப்பில் உங்கள் திரையைப் பகிர்தல்

FaceTime அழைப்பின் போது, அதிலுள்ள மற்றவர்களுடன் உங்கள் திரையைப் பகிரலாம்.

FaceTime கட்டுப்பாடுகளில் “உள்ளடக்கத்தைப் பகிர்” பட்டன்-ஐத் தட்டவும் (“உள்ளடக்கத்தைப் பகிர்” பட்டன் காட்டப்படவில்லை என்றால் திரையைத் தட்டவும்). “எனது திரையைப் பகிர்” என்பதைத் தட்டி உங்கள் முகப்புத் திரைக்குச் சென்று, பின்னர் ஒரு செயலி அல்லது ஆவணத்தைத் திறக்கவும், அழைப்பில் உங்கள் திரையின் சிறிய படம் தோன்றும். அதைத் தட்டுவதன் மூலம் பெரிதாக்கி உங்கள் உள்ளடக்கத்தை அழைப்பில் உள்ள பிறர் பார்க்கலாம்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

குறிப்பு: அனைத்து அம்சங்களும் உள்ளடக்கமும் எல்லா நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்காது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.