இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் நினைவுகளைப் பார்த்தல்

ஃபோட்டோஸ் செயலியில் உள்ள நினைவுகள் அம்சம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பிரத்தியேகமாக்கப்பட்ட தொகுப்புகளை உருவாக்குகிறது. அவற்றுக்கு இசை அமைக்கப்பட்டு திரைப்படம் போல பிளே செய்யப்படும். ஒவ்வொரு நினைவிலும் உங்கள் புகைப்பட லைப்ரரியிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க நபர் இடம்பெறுவார் அல்லது இடமோ நிகழ்வோ இடம்பெறும். நீங்கள் உங்கள் சொந்த நினைவுகளை உருவாக்கியும் அவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

“நினைவுகள்” தொகுப்பு ஃபோட்டோஸ் செயலியில் திறந்துள்ளது. கீழே உள்ள நினைவுகளின் பட்டியலுடன் அனைத்தும் தாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நினைவை பிளே செய்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “நினைவுகள்” என்பதைத் தட்டி, ஒரு நினைவை பிளேசெய்ய அதைத் தட்டவும்.

  3. நீங்கள் பார்க்கும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • இடைநிறுத்துதல்: திரையைத் தட்டி, “இடைநிறுத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

    • பின்னோக்கி அல்லது முன்னோக்கிச் செல்ல: திரையில் இடது அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும். அல்லது திரையைத் தட்டி, திரையின் கீழ் இடது அல்லது வலதுபக்கத்தில் உள்ள ஃபிரேம்களை ஸ்லைடு செய்யவும்.

    • நினைவை மூட: திரையைத் தட்டி, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நினைவை லூப் செய்யும்படி அமைக்க, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “திரைப்படத்தை லூப் செய்” என்பதைத் தட்டவும்.

நினைவை உருவாக்குதல்

ஒரு நிகழ்வு, உங்கள் லைப்ரரியில் உள்ள குறிப்பிட்ட நாள் அல்லது ஆல்பம் ஆகியவற்றில் இருந்து உங்கள் சொந்த நினைவை உருவாக்கலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஏற்கனவே உள்ள தொகுப்பு அல்லது ஆல்பத்தைத் தட்டி, புகைப்படங்களையும் வீடியோக்களையும் நினைவாகப் பார்க்க திரைப்படம் என்பதைத் தட்டவும்.

    புதிதாக ஒரு நினைவை உருவாக்க, ஒரு புகைப்பட ஆல்பத்தை உருவாக்கி, அதன் பிறகு மேலே குறிப்பிடப்பட்ட படிகளைப் பின்பற்றி பிறகு அதை ஒரு நினைவாகப் பார்க்கலாம்.

நினைவை வீடியோவாகப் பகிர்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “நினைவுகள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் நினைவைத் தட்டவும்.

  3. நினைவு பிளே ஆகும்போது, திரையைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “திரைப்படத்தைப் பகிர்” என்பதைத் தட்டி, AirDrop, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்தல் முறையைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: முழுத் திரைப்படமாக இல்லாமல், நினைவுகளில் உள்ள புகைப்படங்களை மட்டும் அனுப்ப, திரையின் கீழே உள்ள “புகைப்படங்கள்” என்பதைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புகைப்படங்களைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

ஒரு நினைவிலிருந்து அனைத்து புகைப்படங்களையும் பகிர்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “நினைவுகள்” என்பதைத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் நினைவைத் தட்டவும்.

  3. நினைவு பிளே ஆகும்போது, திரையைத் தட்டி, ஃபோட்டோஸ் செயலியைத் தட்டவும்.

  4. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புகைப்படங்களைப் பகிர்” என்பதைத் தட்டவும்.

  5. AirDrop, மெசேஜஸ் அல்லது Mail போன்ற பகிர்வு முறையைத் தேர்வுசெய்யவும்.

பிடித்தவையில் நினைவைச் சேர்த்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “நினைவுகள்” என்பதைத் தட்டி, நினைவின் மேல் வலது மூலையில் உள்ள “பிடித்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்களுக்கு பிடித்த நினைவுகளைப் பார்க்க, நினைவுகளைத் தட்டி, “பிடித்தவை” என்பதைத் தட்டவும்.

நினைவை நீக்குதல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரில் “நினைவுகள்” என்பதைத் தட்டி, நீங்கள் நீக்க விரும்பும் நினைவைத் தொட்டு பிடிக்கவும்.

  3. நினைவை நீக்கு என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.