இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியை” அமைத்தல் அல்லது அதில் இணைதல்

iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரி அம்சம் மூலம், ஐந்து நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் வரை புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்ப ஒரு பகிர்ந்த லைப்ரரியை அமைக்கலாம் அல்லது இணையலாம். நீங்களும் உங்களுக்கு நெருக்கமானவர்களும் புகைப்பட தொகுப்பைச் சேர்ந்து பார்க்கலாம், மேலும் ஒரே இடத்தில் முழுமையான நினைவுகளைப் பார்த்து மகிழலாம். நீங்கள் ஒரு சமயத்தில் ஒரு பகிர்ந்த லைப்ரரியை மட்டுமே வைத்திருக்க முடியும்.

ஒரு பகிந்த லைப்ரரியில் நீங்கள் சேரும்போது, நீங்கள் பங்களித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் தனிப்பட்ட லைப்ரரியில் இருந்து பகிர்ந்த லைப்ரரிக்கு நகர்த்தலாம், லைப்ரரியின் அனைத்து உறுப்பினர்களும் அதைப் பார்க்கலாம், திருத்தலாம், நீக்கலாம். பகிர்ந்த லைப்ரரியின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஃபோட்டோஸ் செயலியில் உங்கள் தனிப்பட்ட உள்ளடக்கத்துடன் சேர்த்து தடையின்றி ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனினும், ஃபில்டரைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட மற்றும் பகிர்ந்த லைப்ரரிக்கு இடையே விரைவாக நீங்கள் மாறலாம்.

குறிப்பு: iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியைப் பயன்படுத்த iOS 16.1, iPadOS 16.1, macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை. பகிர்ந்த லைப்ரரியில் சேர்க்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் மென்பொருளின் முந்தைய பதிப்புகளைக் கொண்ட சாதனங்களில் கிடைக்காது.

தொடங்குவதற்கு முன்பு

iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை அமைப்பதற்கு அல்லது இணைவதற்கு முன்பு, உங்கள் iCloud புகைப்படங்கள் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > ஃபோட்டோஸ் என்பதற்குச் சென்று “இந்த iPadஐ ஒத்திசைக்கவும்” என்பது ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: பகிர்ந்த லைப்ரரியை அமைக்க குடும்பப் பகிர்வு அம்சத்தை ஆன் செய்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை அமைத்தல்

iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியை அமைத்தவர் அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டவும்.

  3. “பகிர்ந்த லைப்ரரி” என்பதைத் தட்டி, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்த லைப்ரரிக்கு நகர்த்தலாம்.

    குறிப்பு: பகிர்ந்த லைப்ரரியில் நீங்கள் சேர்க்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் உங்கள் தனிப்பட்ட லைப்ரரியில் காட்டப்படாது. உங்கள் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியையும் தனிப்பட்ட லைப்ரரியையும் பார்க்க அவற்றுக்கிடையே மாறுதல் என்பதைப் பார்க்கவும்.

    பகிர்ந்த லைப்ரரியில் நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் முன்னோட்டத்தைப் பார்க்கலாம், மெசேஜஸ் அல்லது இணைய இணைப்பைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்களை அழைப்பதற்கு முன்பு மாற்றங்களைச் செய்யலாம்.

iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியில் சேர்தல்

iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியில் சேர, ஒருங்கிணைப்பாளர் அனுப்பிய அழைப்பைத் தட்டி, தொடங்குக என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். அமைவின்போது, ஒருங்கிணைப்பாளரைப் போலவே பகிர்ந்த லைப்ரரியில் நீங்களும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்க்கலாம் (iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்).

பகிர்ந்த லைப்ரரியில் நீங்கள் இணைந்த பிறகு, அதில் பல வழிகளில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்க்கலாம். மேலும் பகிர்ந்த லைப்ரரியில் உள்ள உள்ளடக்கத்தை ஒருங்கிணைப்பார்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்களைப் போலவே அணுகலாம். iCloud பகிரப்பட்ட புகைப்பட லைப்ரரியில் உள்ளடக்கத்தைச் சேர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் பங்கேற்பாளர்களைச் சேர்த்தல்

பகிர்ந்த iCloud புகைப்பட லைப்ரரியை அமைப்பவரால் (ஒருங்கிணைப்பாளர்), பகிர்ந்த லைப்ரரியில் புதிய பங்கேற்பாளர்களைச் சேர்க்க முடியும்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டவும்.

  3. பகிர்ந்த லைப்ரரியின் வலதுபக்கத்தில் உள்ள “நிர்வகியுங்கள்” என்பதைத் தட்டி, “பங்கேற்பாளர்களைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: பகிர்ந்த லைப்ரரியில் ஒருங்கிணைப்பாளர் உட்பட ஆறு பங்கேற்பாளர்கள் வரை இருக்கலாம். நீங்கள் ஒரு சமயத்தில் ஒரு பகிர்ந்த லைப்ரரியை வைத்திருக்கலாம்.

iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியை நீக்குதல் அல்லது அதிலிருந்து வெளியேறுதல்

நீங்கள் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தால், அதை நீக்கலாம். நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இல்லாவிட்டால், பகிர்ந்த லைப்ரரியை விட்டு வெளியேறலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் வலது மூலையில் உள்ள உங்கள் கணக்கைத் தட்டவும்.

  3. பகிர்ந்த லைப்ரரியின் வலதுபக்கத்தில் உள்ள “நிர்வகியுங்கள்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

    • பகிர்ந்த லைப்ரரியை நீக்க: பகிர்ந்த லைப்ரரியை நீக்கும்போது, அந்தப் பகிர்ந்த லைப்ரரியில் 7 நாட்களுக்கு மேல் உறுப்பினர்களாக இருந்த பங்கேற்பாளர்கள், பகிர்ந்த லைப்ரரியில் உள்ள அனைத்தையும் தங்கள் சொந்த லைப்ரரிகளுக்கு நகலெடுக்கலாம். 7 நாட்களுக்கும் குறைவாக உறுப்பினர்களாக இருந்த பங்கேற்பாளர்கள் அவர்கள் வழங்கிய உள்ளடக்கத்தை மட்டுமே நகலெடுக்க முடியும்.

    • பகிர்ந்த லைப்ரரியிலிருந்து வெளியேற: பகிர்ந்த லைப்ரரியை விட்டு வெளியேறும்போது, பகிர்ந்த லைப்ரரியில் உள்ள அனைத்தையும் உங்கள் சொந்த லைப்ரரியிலோ அல்லது நீங்கள் பங்களித்த உள்ளடக்கத்திலோ நகலெடுக்கலாம்.

பகிர்ந்த லைப்ரரியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்கள் அனைத்தும், லைப்ரரி ஒருங்கிணைப்பாளரின் iCloud சேமிப்பக இடத்திற்கு ஏற்ப கணக்கிடப்படுகின்றன. உங்கள் iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் சேமிப்பக இடத்தைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.