இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

டைப் செய்த வார்த்தைகளை “நேரலைப் பேச்சு” அம்சத்தைப் பயன்படுத்தி iPadஐ வாசிக்கச் செய்தல்

உங்களால் பேச முடியாவிட்டாலோ அல்லது காலப்போக்கில் உங்கள் பேச்சுத் திறனை இழந்திருந்தாலோ, நேரடி உரையாடல்களின்போதும் FaceTime போன்ற செயலிகளிலும் டைப் செய்வதன் மூலம் “நேரலைப் பேச்சு” அம்சத்தைப் பயன்படுத்தி iPadஐச் சத்தமாக வாசிக்கச் செய்யலாம். சிஸ்டத்தில் உள்ள பல்வேறு குரல்களில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம் அல்லது நீங்கள் உருவாக்கும் “என் குரலைப்” பயன்படுத்தலாம்.

குறிப்பு: “நேரலைப் பேச்சு” அம்சம் அனைத்து மொழிகளிலும் கிடைக்காது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.

நேரலைப் பேச்சை ஆன் செய்தல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > நேரலைப் பேச்சு என்பதற்குச் சென்று “நேரலைப் பேச்சு” என்பதை ஆன் செய்யவும்.

  2. குரலைத் தேர்வுசெய்யவும். “என் குரல்” உட்பட, நீங்கள் தேர்வுசெய்யும் எந்தவொரு குரலின் மூலமாகவும் “நேரலைப் பேச்சு” அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

  3. மேல் பட்டனையோ முகப்பு பட்டனையோ மூன்று முறை கிளிக் செய்து (உங்கள் iPad மாடலைப் பொறுத்து) “நேரலைப் பேச்சு” என்பதைத் தட்டவும் (ஒன்றுக்கு மேற்பட்ட அம்சங்களுடன் அணுகல்தன்மைச் சுருக்கவழியை அமைத்திருந்தால்).

நீங்கள் டைப் செய்ததைச் சத்தமாக வாசித்தல்

  1. நீங்கள் ”நேரலைப் பேச்சு” அம்சத்தை ஆன் செய்தபிறகு, வாசிக்கப்பட வேண்டிய வார்த்தைகளை “நேரலைப் பேச்சு” சாளரத்தில் டைப் செய்யவும்.

    நகலெடுத்த வார்த்தையைச் சாளரத்தில் ஒட்டலாம் அல்லது நீங்கள் டைப் செய்யும் போது கீபோர்டுக்கு மேலே காட்டப்படும் பரிந்துரைச் சொற்களைத் தட்டவும்.

  2. உங்கள் வார்த்தை சத்தமாக வாசிக்கப்படுவதற்கு “பேசு” என்பதைத் தட்டவும்.

நீங்கள் FaceTime அழைப்பில் இருந்தால், அழைப்பின் மறுமுனையில் நேரலைப் பேச்சு பிளே செய்யப்படும். இல்லையெனில், உங்கள் iPad ஸ்பீக்கரில் நேரலைப் பேச்சு பிளே செய்யப்படும்.

சேமித்த சொற்றொடர்களைச் சத்தமாக வாசித்தல்

நேரலைப் பேச்சு அம்சத்தின் மூலம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர்களின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.

  1. நீங்கள் ”நேரலைப் பேச்சு” அம்சத்தை ஆன் செய்தபிறகு, “நேரலைப் பேச்சு” சாளரத்தின் மேற்புறத்தில் உள்ள “கீபோர்டு” என்பதைத் தட்டவும்.

  2. “சமீபத்தியது”, “சேமிக்கப்பட்டவை” போன்ற ஒரு பிரிவைத் தட்டி சத்தமாக வாசிக்கப்படுவதற்கு ஒரு சொற்றொடரைத் தட்டவும்.

  3. சேமிக்கப்பட்ட சொற்றொடர்களை மறைத்துவிட்டு கீபோர்டு மூலம் வார்த்தையை உள்ளிடுவதற்கு, “நேரலைப் பேச்சு” சாளரத்தின் மேற்புறத்தில் உள்ள “சொற்றொடர்கள்” என்பதைத் தட்டவும்.

சேமிக்கப்பட்டச் சொற்றொடர்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சேமிக்கப்பட்ட சொற்றொடர்களின் பட்டியலில் சொற்றொடர்களைச் சேர்க்கலாம் அல்லது அதிலிருந்து அகற்றலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > நேரலைப் பேச்சு என்பதற்குச் சென்று “வாக்கியங்கள்” என்பதைத் தட்டவும்.

  2. “சேமிக்கப்பட்டவை” என்பதையோ நீங்கள் உருவாக்கிய மற்றொரு வகையையோ தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • சேமித்த சொற்றொடரைச் சேர்த்தல்: “சொற்றொடரைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, வார்த்தைப் புலத்தில் உங்கள் சொற்றொடரை உள்ளிட்டு “சேமி” என்பதைத் தட்டவும்.

    • சேமிக்கப்பட்ட சொற்றொடரை அகற்றுதல்: சொற்றொடரைத் தட்டி “சொற்றொடரை நீக்கு” என்பதைத் தட்டவும்.

சேமிக்கப்பட்ட சொற்றொடர்களுக்கான வகைகளை உருவாக்குதல்

பணி, பள்ளி அல்லது கேமிங் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக உங்கள் சேமிக்கப்பட்ட சொற்றொடர்களை வகைகளாக ஒழுங்கமைக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > நேரலைப் பேச்சு என்பதற்குச் சென்று “வாக்கியங்கள்” என்பதைத் தட்டவும்.

  2. “பிரிவைச் சேர்” பட்டன்-ஐத் தட்டி, வகைக்கு ஒரு பெயரை உள்ளிட்டு ஐகானைத் தேர்ந்தெடுத்த பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

மற்ற செயலிகளின் ஆடியோவை அழைப்புகளில் அனுமதித்தல்

குரல் மற்றும் வீடியோ அழைப்புகளில் செயலிகளின் ஆடியோ கேட்கும்படி நீங்கள் அனுமதிக்கலாம், இது பேசுவதற்கும் தொடர்புகொள்வதற்கும் உதவும் செயலிகளைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உதவும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > ஆடியோ & விஷுவல் என்பதற்குச் சென்று "அழைப்புகளில் ஆடியோவைச் சேர்" என்பதைத் தட்டவும்.

  2. “அழைப்புகளில் ஆடியோவைச் சேர்க்க செயலிகளை அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.

    இந்த விருப்பத்தை ஆன் செய்தால், அழைப்புகளில் ஆடியோ மற்றும் மைக்ரோஃபோன் உள்ளீடு இரண்டுமே சேர்க்கப்படும். அழைப்பின்போது அனைத்து ஆடியோவையும் ஒலிமுடக்க, மைக்ரோஃபோனை ஒலிமுடக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.