இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் பேட்டரி ஆயுளைச் சேமிக்க குறைந்த ஆற்றல் பயன்முறையைப் பயன்படுத்துதல்

பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும்போது உங்கள் iPad பயன்படுத்தக்கூடிய ஆற்றல் அளவை “குறைந்த ஆற்றல் பயன்முறை” குறைக்கிறது. அழைப்புகளைச் செய்வது மற்றும் பெறுவது, மின்னஞ்சலையும் மெசேஜ்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது, இணையத்தை அணுகுவது போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான செயல்திறனை இது மேம்படுத்துகிறது. ProMotion டிஸ்ப்ளே தொழில்நுட்பம் உள்ள iPad மாடல்களில், டிஸ்ப்ளேவின் ரெஃப்ரெஷ் விகிதத்தை “குறைந்த ஆற்றல் பயன்முறை” வினாடிக்கு 60 ஃப்ரேம்கள் என வரம்பிடும்.

குறிப்பு: குறைந்த ஆற்றல் பயன்முறையில் இருக்கும்போது iPad சில பணிகளை மிகவும் மெதுவாகச் செய்யக்கூடும்.

குறைந்த ஆற்றல் பயன்முறையை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

iPadஇன் சார்ஜ், 80 அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்தைத் தொடும்போது “குறைந்த ஆற்றல் பயன்முறை” தானாக ஆஃப் செய்யப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.