இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மாற்று உரைகளைக் கொண்ட கீஸ்ட்ரோக்குகளைச் சேமித்தல்

iPadஇல், ஒரு சில எழுத்துகளை மட்டும் டைப் செய்வதன் மூலம் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளிட, நீங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் “மாற்று உரை” அம்சத்தை அமைக்கலாம். உதாரணமாக, “எனது வழியில்!” என்பதை உள்ளிட “omw” என டைப் செய்யவும் அது ஏற்கெனவே உங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் நீங்களும் அதைச் சேர்க்கலாம்.

மாற்று உரையை உருவாக்குதல்

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • திரையில் உள்ள கீபோர்டில்: “இமோஜி” பட்டன் அல்லது கீபோர்டை மாற்றுவதற்கான கீ-ஐத் தொட்டுப் பிடித்து, கீபோர்டு அமைப்புகளைத் தட்டவும், பின்றகு "மாற்று உரை" என்பதைத் தட்டவும்.

    • வெளிப்புற கீபோர்டில்: அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் சென்று பிறகு மாற்று உரையைத் தட்டவும்.

  2. மேல் வலதுபுறத்தில் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. சொற்றொடர் புலத்தில் ஒரு சொற்றொடர் மற்றும் குறுக்குவழி புலத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உரை குறுக்குவழியை உள்ளிடவும்.

நீங்கள் சரிசெய்ய விரும்பாத, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை அல்லது சொற்றொடர் உள்ளதா?

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > கீபோர்டு என்பதற்குச் சென்று பிறகு மாற்று உரையைத் தட்டவும்.

  2. மேல் வலதுபுறத்தில் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, பிறகு உங்கள் வார்த்தை அல்லது சொற்றொடரை சொற்றொடர் புலத்தில் உள்ளிடவும், ஆனால் குறுக்குவழி புலத்தைக் காலியாக வைத்திருக்கவும்.

வார்த்தை மற்றும் உள்ளீட்டு இணைகளுக்கு மாற்று உரையை உருவாக்குதல்

சில சீன அல்லது ஜப்பானீஸ் கீபோர்டுகளைப் பயன்படுத்தும் போது, வார்த்தை மற்றும் உள்ளீட்டு இணைகளுக்கு மாற்று உரையை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் தனிப்பட்ட அகராதியில் மாற்று உரை சேர்க்கப்பட்டது. ஆதரிக்கப்படும் கீபோர்டைப் பயன்படுத்தும்போது, ஒரு வார்த்தை அல்லது உள்ளீட்டுக்கான உரைச் சுருக்குவழியை டைப் செய்யும்போது, சுருக்கவழிக்குப் பதிலாக இணைக்கப்பட்ட சொல் அல்லது உள்ளீடு பயன்படுத்தப்படும்.

பின்வருவனவற்றில் குறுக்குவழிகள் உள்ளன:

  • எளிமையாக்கப்பட்ட சீன மொழி: பின்யின்

  • பாரம்பரிய சீன மொழி: பின்யின் மற்றும் ஜூயின்

  • ஜப்பானீஸ்: ரோமாஜியும் கானாவும்

உங்கள் தனிப்பட்ட அகராதியை உங்கள் பிற சாதனங்களில் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க iCloudஐப் பயன்படுத்துதல்

அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று iCloud Driveஐ ஆன் செய்யவும்.

உங்கள் தனிப்பட்ட அகராதியை மீட்டமைத்தல்

  1. அமைப்புகள்  > பொது அமைப்புகள் > iPad தரவுகளை இடமாற்றுதல் அல்லது மீட்டமைத்தல் > மீட்டமை என்பதற்குச் சென்று, "கீபோர்டு அகராதியை மீட்டமை" என்பதைத் தட்டவும்.

  2. “கீபோர்டு அகராதியை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

    பிரத்தியேக வார்த்தைகள் மற்றும் குறுக்குவழிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, கீபோர்டு அகராதி அதன் இயல்புநிலை நிலைக்குத் திரும்பும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.