இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Safariஐப் பிரத்தியேகமாக்க நீட்டிப்புகளைப் பெறுதல்

உங்கள் உலாவி செயல்படும் விதத்தைப் பிரத்தியேகமாக்க நீட்டிப்புகளை நிறுவலாம். எடுத்துக்காட்டாக, ஷாப்பிங் செய்யும்போது கூப்பன்களைக் கண்டறியவும், இணையதளங்களில் உள்ள உள்ளடக்கத்தைத் தடுக்கவும், மேலும் பலவற்றைச் செய்யவும் நீட்டிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

Safari நீட்டிப்புகளைச் சேர்த்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. தேடல் புலத்தின் வலது பக்கத்தில் உள்ள “நீட்டிப்புகளை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி “நீட்டிப்புகளை நிர்வகி” என்பதைத் தட்டவும்.

  3. App Storeஇல் உள்ள நீட்டிப்புகளைப் பார்க்க “மேலும் நீட்டிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் விரும்பும் ஒன்றைக் கண்டறிந்தால், விலையைத் தட்டவும் அல்லது செயலி இலவசமாக இருந்தால் “பெறுக” என்பதைத் தட்டி திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

குறிப்பு: iPadஇல் Safari செயலிக்காக நீங்கள் நிறுவும் நீட்டிப்புகள் பிற பிளாட்ஃபார்ம்களில் கிடைப்பதோடு அவற்றை எளிதாகக் கண்டறியவும் பதிவிறக்கவும் அதே Apple கணக்கு மூலம் நீங்கள் உள்நுழைந்துள்ள எந்தவொரு iPhone, iPad அல்லது Mac சாதனத்தில் உள்ள Safari அமைப்புகளிலும் காட்டப்படும்.

Safari நீட்டிப்பு அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் உலாவி செயல்படும் விதத்தைப் பிரத்தியேகமாக்க நீட்டிப்பைப் பயன்படுத்தலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் Safari நீட்டிப்புகளை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. தேடல் புலத்தின் வலது பக்கத்தில் உள்ள “நீட்டிப்புகளை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி “நீட்டிப்புகளை நிர்வகி” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் அனுமதிகளை வழங்க விரும்பும் ஒவ்வொரு நீட்டிப்பையும் தட்டி, ஒவ்வொரு நீட்டிப்புக்கும் எந்த அளவுக்கு அணுகலை வழங்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

    முக்கியம்: நீங்கள் நிறுவிய நீட்டிப்புகளைச் சரிபார்த்து, அவை செயல்படும் விதம் குறித்து நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யவும்.

தனிப்பட்ட இணையதளத்திற்கு Safari நீட்டிப்பு அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் ஒட்டுமொத்த Safari அமைப்புகளை மாற்றாமல் ஒரு தனிப்பட்ட இணையதளத்திற்கான நீட்டிப்பை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. தேடல் புலத்தின் வலது பக்கத்தில் உள்ள “நீட்டிப்புகளை நிர்வகி” பட்டன்-ஐத் தட்டி “நீட்டிப்புகளை நிர்வகி” என்பதைத் தட்டவும்.

  3. ஒவ்வொரு நீட்டிப்பையும் ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Safari நீட்டிப்பை அகற்றுதல்

  1. முகப்புத் திரையில் கீழே ஸ்வைப் செய்து, நீங்கள் அகற்ற விரும்பும் நீட்டிப்பைத் தேடவும்.

  2. நீட்டிப்பு ஐகானைத் தொட்டுப் பிடித்து "செயலியை நீக்கு" என்பதைத் தட்டிய பிறகு திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.