இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலியில் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை ஒழுங்கமைத்தல்

“கோப்புகள்” செயலியில், ஆவணங்கள், படங்கள் மற்றும் பிற கோப்புகளைக் கோப்புறைகளில் நீங்கள் ஒழுங்கமைக்கலாம்.

கோப்புறையை உருவாக்குதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு குறிப்பிட்ட இடத்தையோ ஏற்கனவே உள்ள கோப்புறையையோ திறக்கவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “புதிய கோப்புறை” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: புதிய கோப்புறை காட்டப்படவில்லை என்றால், அந்த இடத்தில் உங்களால் புதிய கோப்புறையை உருவாக்க முடியாது என்று அர்த்தம்.

கோப்பு அல்லது கோப்புறையின் பெயரை மாற்றுதல், கம்ப்ரஸ் செய்தல் மற்றும் பிற மாற்றங்களைச் செய்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு குறிப்பிட்ட இடத்தையோ ஏற்கனவே உள்ள கோப்புறையையோ திறக்கவும்.

  3. கோப்பு அல்லது கோப்புறையைத் தொட்டுப் பிடித்து, பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்: நகலெடு, நகர்த்து, மறுபெயரிடு, கம்ப்ரஸ் செய், பிரதியெடு அல்லது நீக்கு.

ஒரே நேரத்தில் பல கோப்புகள் அல்லது கோப்புறைகளை மாற்ற, “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் மாற்ற விரும்பும் கோப்புகள் அல்லது கோப்புறைகளைத் தேர்ந்தெடுத்து, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பகிர், நகலெடு, நகர்த்து, நீக்கு” போன்ற பல விருப்பங்களில் இருந்து ஒன்றைத் தட்டவும்.

குறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுத்த ஐட்டத்தைப் பொறுத்து சில விருப்பங்கள் கிடைக்காமல் போகலாம். எடுத்துக்காட்டாக, செயலி லைப்ரரியை (செயலி பெயரில் உள்ள கோப்புறை) நீங்கள் நீக்கவோ நகர்த்தவோ முடியாது.

கோப்பு அல்லது கோப்புறையை ஜிப் அல்லது அன்ஜிப் செய்தல்

உங்கள் iPadஇல் குறைவான சேமிப்பிடத்தை எடுக்கும் வகையில் ஒரு கோப்பு அல்லது கோப்புறையை கம்ப்ரெஸ் செய்ய ஜிப் செய்யலாம். கம்ப்ரெஸ் செய்யப்பட்ட கோப்பு அல்லது கோப்புறையை அன்ஜிப் செய்யலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ஜிப் செய்ய விரும்பும் கோப்பு அல்லது கோப்புறையைத் தொட்டு பிடித்து, “கம்ப்ரெஸ்” என்பதைத் தட்டவும்.

கம்ப்ரெஸ் செய்யப்பட்ட கோப்பு அல்லது கோப்புறையை அன்ஜிப் செய்ய, அதைத் தொட்டு பிடித்து, “அன்கம்ப்ரெஸ்” என்பதைத் தட்டவும்.

கோப்பு அல்லது கோப்புறைக்குக் குறிச்சொல் சேர்த்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு குறிப்பிட்ட இடத்தையோ ஏற்கனவே உள்ள கோப்புறையையோ திறக்கவும்.

  3. கோப்பு அல்லது கோப்புறையைத் தொட்டுப் பிடித்து, குறிச்சொற்கள் என்பதைத் தட்டி, பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிச்சொற்களைத் தட்டவும்.

  4. முடிந்தது என்பதைத் தட்டவும்.

டேக் செய்யப்பட்ட ஐட்டங்கள் “உலாவுக” சைடுபார் பகுதியில் உள்ள குறிச்சொற்களுக்குக் கீழே தோன்றும்.

ஒரு குறிச்சொல்லை மீண்டும் தட்டி அதை அகற்றலாம்.

ஒரு கோப்புறையைப் பிடித்தவையில் சேர்த்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. இருப்பிடம் அல்லது ஏற்கனவே உள்ள கோப்புறையைத் திறந்து, கோப்புறையைத் தொட்டுப் பிடித்து, “பிடித்தவை” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.