இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் 3D மேப்ஸைப் பார்த்தல்

மேப்பில் எந்தவொரு இருப்பிடத்தைக் கண்டறியும்போதும், நீங்கள் மேப்பைச் சுழற்றி அந்தப் பகுதியின் கூடுதல் பரிமாணங்களைப் பார்க்கலாம்.

ஆதரிக்கப்படும் மாடல்கள் மற்றும் குறிப்பிட்ட சில நகரங்களில், தரை மட்டத்தின் அளவு, சாலைகள், மரங்கள், கட்டடங்கள், அடையாளச் சின்னங்கள் மற்றும் பலவற்றிற்கான மேம்பட்ட விவரங்களை “மேப்ஸ்” செயலி வழங்கும். (அம்சம் கிடைப்பது குறித்த தகவல்களுக்கு, iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை தொடர்பான இணையதளம் என்ற பிரிவில் உள்ள “மேம்பட்ட நகர அனுபவம்” என்பதைப் பார்க்கவும்.)

மேப் அல்லது குளோபை நகர்த்துதல், பெரிதாக்குதல் அல்லது சுழற்றுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • மேப்பில் நகர்த்த: மேப்பை இழுக்கவும்.

    • பெரிதாக்க அல்லது சிறிதாக்க: இருமுறை தட்டிவிட்டு, பெரிதாக்க மேலே இழுக்கவும் அல்லது சிறிதாக்க கீழே இழுக்கவும். இல்லையெனில் மேப்பில் உள்நோக்கி அல்லது வெளிநோக்கி பின்ச் செய்யவும்.

    • மேப்பைச் சுழற்றுதல்: இரண்டு விரல்களால் மேப்பைத் தொட்டுப் பிடித்திருந்து, உங்கள் விரல்களைச் சுழற்றவும்.

      மேப்பைச் சுழற்றிய பிறகு திரையின் மேற்புறத்தில் வட திசையைக் காட்ட, “திசைகாட்டி” பட்டன்-ஐத் தட்டவும்.

3D மேப்பைப் பார்த்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. 2D மேப்பை 3D மேப்பாக மாற்ற, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  3. 3D மேப்பைப் பார்க்கும்போது, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம்:

    • கோணத்தைச் சரிசெய்தல்: இரண்டு விரல்களால் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ இழுக்கவும்.

    • கட்டடங்கள் மற்றும் பிற சிறிய இடங்களை 3Dஇல் பார்க்க: பெரிதாக்கவும்.

    • பூமியைப் பார்த்தல்: மேப் குளோபாக மாறும் வரை சிறிதாக்கவும். ஆதரிக்கப்படும் மாடல்களில், குளோபை இழுத்து அதைச் சுழற்றவும் அல்லது மலைத்தொடர்கள், பாலைவனங்கள், பெருங்கடல்கள் மற்றும் பலவற்றின் காட்சியை துல்லிமாகப் பார்க்க, குளோபைப் பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்க்கவும்.

    • 2D மேப்பைப் பார்க்க: மேல் வலதுபுறத்தில் 2D என்பதைத் தட்டவும்.

மேப்ஸ் செயலியில் உள்ள 3D மேப்பில் ஒரு பாலம் மற்றும் பூங்கா காட்டப்பட்டுள்ளன.

நீங்கள் Flyover பயணங்கள் மேற்கொள்ளலாம் அல்லது இடங்களை நகர்த்திப் பார்க்கலாம்.

வட்டாரம் மற்றும் நாட்டைப் பொறுத்து மேப்ஸ் அம்சங்கள் மாறுபடும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.