இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் இருந்து அச்சிடுதல்

AirPrint அம்சத்தைப் பயன்படுத்தி Mail, ஃபோட்டோஸ், Safari, Freeform போன்ற செயலிகளில் இருந்து AirPrint செயல்படுத்தப்பட்ட பிரின்டரில் வயர்லெஸ் முறையில் பிரின்ட் செய்யலாம். App Storeஇல் கிடைக்கும் பல செயலிகள் AirPrintஐ ஆதரிக்கின்றன.

உங்கள் iPad மற்றும் பிரின்டர் ஒரே Wi-Fi நெட்வொர்க்கில் இருக்க வேண்டும். AirPrintஐப் பற்றி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

AirPrint செயல்படுத்தப்பட்ட பிரின்டரைத் தேர்வுசெய்தல்

உங்கள் பிரின்டர் AirPrintஐ ஆதரிப்பதையும், உங்கள் iPad, பிரின்டர் ஆகிய இரண்டும் ஒரே Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளதையும் உறுதிசெய்த பிறகு பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. நீங்கள் எந்தச் செயலியில் இருந்து அச்சிட விரும்புகிறீர்களோ அதைத் தேர்வுசெய்யவும்.

  2. “பகிர்” பட்டன், “மேலும்” பட்டன், “பதிலளி” பட்டன் அல்லது “செயல்கள் மெனு” பட்டன்-ஐத் தட்டவும் (செயலியைப் பொறுத்து).

  3. “அச்சிடு” என்பதைத் தட்டி “பிரின்டர் எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை” என்பதைத் தட்டிய பிறகு AirPrint செயல்படுத்தப்பட்ட பிரின்டரைத் தேர்வுசெய்யவும்.

ஆவணத்தை அச்சிடுதல்

  1. நீங்கள் எந்தச் செயலியில் இருந்து அச்சிட விரும்புகிறீர்களோ அதைத் தேர்வுசெய்யவும்.

  2. “பகிர்” பட்டன், “மேலும்” பட்டன், “பதிலளி” பட்டன் அல்லது “செயல்கள் மெனு” பட்டன்-ஐத் தட்டவும் (செயலியைப் பொறுத்து).

  3. “அச்சிடு” என்பதைத் தட்டவும். (“அச்சிடு” என்பது காட்டப்படவில்லை எனில், மேலே ஸ்வைப் செய்யவும்.)

அச்சிடும் பணியின் நிலையைப் பார்க்கவும்

செயலி மாற்றியைத் திறந்து “பிரிண்ட் சென்டர்” என்பதைத் தட்டவும்.

வரிசையில் எத்தனை ஆவணங்கள் உள்ளன என்பதை ஐகானில் உள்ள பேட்ஜ் காட்டுகிறது.

அச்சிடுவதை ரத்துசெய்ய, அதை பிரிண்ட் சென்டரில் தேர்ந்தெடுத்து, “அச்சிடுதலை ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.