இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPad மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்தல்

Handoff மூலம், ஒரு சாதனத்தில் ஒரு பணியைத் தொடங்கி, மற்றொரு சாதனத்தில் அதை முடிக்கலாம். உதாரணமாக, உங்கள் iPadஇல் மின்னஞ்சலை உருவாக்கி, பின்னர் அதை உங்கள் Mac கம்ப்யூட்டரின் பெரிய திரையில் நிறைவுசெய்யலாம்.

பல Apple செயலிகளில் Handoffஐ நீங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக Safari, Mail, FaceTime மற்றும் மேப்ஸ். சில மூன்றாம் தரப்பு செயலிகளும் Handoff உடன் வேலை செய்கின்றன.

iPhone, iPad, Mac ஆகியவற்றுக்கு இடையே Handoffஐப் பயன்படுத்தலாம். உங்கள் Apple Watch, iPhone ஆகியவற்றுக்கு இடையே பணிகளையும் நீங்கள் ஹேண்ட் ஆஃப் செய்யலாம்.

தொடங்கும் முன்

பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்:

நீங்கள் VPN பயன்படுத்தினால், சில கன்டினியுட்டி அம்சங்களை அது பாதிக்கக்கூடும் என்பதால் அதன் உள்ளமைவு உள்ளூர் நெட்வொர்க்கிற்கு இடையூறு செய்யாத வகையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Handoffஐ ஆன் செய்யவும்

உங்கள் iPad, மற்றொரு Apple சாதனம் ஆகிய இரண்டிலும் Handoffஐ ஆன் செய்யவும்.

  • உங்கள் iPhone அல்லது iPadஇல்: அமைப்புகள்  > பொது அமைப்புகள் > AirPlay & கன்டினியுட்டி என்பதற்குச் சென்று Handoffஐ ஆன் செய்யவும்.

  • உங்கள் Macஇல்: Apple மெனு > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து சைடுபாரில் உள்ள “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்த பிறகு “Airplay & கன்டினியுட்டி” என்பதை கிளிக் செய்து “Handoff” என்பதை ஆன் செய்யவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

    குறிப்பு: உங்கள் Macஇல் macOS 12.5 அல்லது அதற்கு முந்ந்தைய பதிப்பு இருந்தால், Apple மெனு  > சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் தேர்வுசெய்து “பொது” என்பதை கிளிக் செய்த பிறகு “இந்த Mac மற்றும் iCloud சாதனங்களுக்கு இடையே Handoffஐ அனுமதி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் iPad மற்றும் பிற சாதனங்களுக்கு இடையில் ஒரு பணியை ஹேண்ட் ஆஃப் செய்தல்

உங்கள் சாதனங்கள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கும்போது, ஒரு பணியை ஹேண்ட் ஆஃப் செய்ய முடியும் போதெல்லாம் அதற்கான ஐகான் காட்டப்படும். உங்களின் மற்றொரு சாதனத்தில் தொடர்ந்து செயல்பட, Handoff ஐகானைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

பின்வரும் இடங்களில் Handoff ஐகான் இருக்கும்:

  • iPhoneஇல்: செயலி மாற்றி திரையின் அடிப்பகுதியில் இருக்கும்.

  • iPadஇல்: Dockஇன் வலது முனையில் இருக்கும்.

  • Macஇல்: திரையின் அடிப்பகுதியில் Dock இருந்தால், Dockஇன் வலது முனையை நோக்கி அது இருக்கும். உங்கள் திரையின் இடது அல்லது வலதுபுறத்தில் Dockஐ அமைத்திருந்தால், Dockஇன் அடிப்பகுதியில் Handoff ஐகான் காட்டப்படும்.

Handoff வேலைசெய்யவில்லை என்றால் என்ன செய்வது?

  • இரண்டு சாதனங்களிலும் Wi-Fi மற்றும் Bluetooth ஆன் செய்யப்பட்டிருப்பதையும் அவற்றில் நீங்கள் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.

  • உங்கள் செயலி Handoffஐ ஆதரிக்கிறதா எனச் சரிபார்க்கவும். கேலண்டர், தொடர்புகள், FaceTime, Keynote, Mail, மேப்ஸ், Pages, Numbers, நினைவூட்டல்கள், Safari மற்றும் பல மூன்றாம் தரப்புச் செயலிகள் Handoffஐ அனுமதிக்கின்றன.

உதவிக்குறிப்பு: Handoff ஆன் செய்யப்பட்டிருக்கும்போது உரை, படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைச் சாதனங்களுக்கு இடையே நகலெடுத்து ஒட்ட, யுனிவர்சல் கிளிப்போர்டைப் பயன்படுத்தலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.