இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் மெசேஜஸ் செயலியில் குழு உரையாடல் செய்தல்

நீங்கள் குழு மெசைஜை அனுப்பலாம், அதற்குப் பெயரிடலாம், மேலும் அதை எளிதாகக் கண்டறியும் வகையில் ஒரு படத்தை அமைக்கலாம். குழு உரையாடலில், குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு நபர்களின் கவனத்தைப் பெற அவர்களைக் குறிப்பிடலாம், திட்டப்பணிகளில் கூட்டுப்பணியாற்றவும் செய்யலாம்.

குழுவிற்குப் புதிய மெசேஜை அனுப்புதல்

குழு உரையாடலைத் தொடங்கி நீங்கள் பலருக்கும் மெசேஜ் அனுப்பலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புதிய உரையாடலைத் தொடங்க திரையின் மேலே உள்ள கம்போஸ் பட்டன் ஐகானைத் தட்டவும்.

  3. ஒவ்வொரு பெறுநரின் ஃபோன் எண், தொடர்புப் பெயர் அல்லது Apple கணக்கை உள்ளிடவும் அல்லது தொடர்பைச் சேர்ப்பதற்கான பட்டன் ஐகானைத் தட்டி, தொடர்புகளைத் தேர்வுசெய்யவும்.

    குறிப்பு: உங்கள் பெறுநர்களில் ஒருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ iMessageஐப் பயன்படுத்தவில்லை என்றால், மெசேஜ் பபுள்கள் நீல நிறத்திற்குப் பதிலாக பச்சை நிறத்தில் காட்டப்படும்.

  4. வார்த்தைப் புலத்தைத் தட்டி, உங்கள் மெசேஜை டைப் செய்து, “அனுப்பு” பட்டன் ஐகானைத் தட்டவும்.

ஏற்கெனவே உள்ள குழு உரையாடலில் ஒருவரைச் சேர்த்தல்

குழு உரையாடலில் குறைந்தது இரண்டு பேர் இருந்தால், நீங்கள் கூடுதல் தொடர்புகளைச் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ஒருவரைச் சேர்க்க விரும்பும் குழு உரையாடலைத் தட்டவும்.

  3. உரையாடலின் மேலே உள்ள குழு பெயரைத் தட்டி, உரையாடலில் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் காட்டும் பட்டனைத் தட்டவும்.

    குழுவிற்கான உரையாடல் விவரங்களைக் கொண்ட iPad.
  4. “தொடர்பைச் சேர்” என்பதைத் தட்டி, புதிய பெறுநரின் ஃபோன் எண், தொடர்புப் பெயர் அல்லது Apple கணக்கை உள்ளிடவும்.

    இல்லையெனில் தொடர்பைச் சேர்ப்பதற்கான பட்டன் ஐகானைத் தட்டி, பட்டியலில் இருந்து தொடர்பைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: iMessageஐ ஆன் செய்யாத ஒருவர் குழுவில் இருந்தால், புதிய குழுவைத் தொடங்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உரையாடலில் ஒரு நபர் மட்டுமே இருந்தால், மற்றொருவரைச் சேர்க்க புதிய குழு உரையாடலை நீங்கள் தொடங்க வேண்டும்.

குழு உரையாடலில் இருந்து ஒருவரை அகற்ற, அவர்களின் பெயர் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “அகற்று” என்பதைத் தட்டவும்.

குழு உரையாடலில் இருந்து வெளியேறுதல்

உரையாடலில் குறைந்தது மூன்று பங்கேற்பாளர்கள் இருந்தால் நீங்கள் குழு உரையாடலை விட்டு வெளியேறலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் வெளியேற விரும்பும் குழு உரையாடல் மீது தட்டவும்.

  3. உரையாடலின் மேலே உள்ள குழுப் பெயரின் மீது தட்டவும்.

  4. கீழே ஸ்க்ரால் செய்து “இந்த உரையாடலை விட்டு வெளியேறு” அல்லது “உரையாடலை நீக்கிவிட்டு தடு” என்பதைத் தட்டவும். (உரையாடல்களை நீக்குதல் மற்றும் தடுத்தல் குறித்து மேலும் அறிக)

    தடுக்கப்பட்ட உரையாடல்கள் “சமீபத்தில் நீக்கியவை” கோப்புறைக்கு நகர்த்தப்படும். அதிலிருந்து அவற்றை நீங்கள் மீட்டெடுக்க முடியும்.

நீங்கள் ஒரு குழு உரையாடலில் இருக்க விரும்பி அதன் அறிவிப்புகளை மட்டும் நிறுத்த விரும்பினால், உரையாடல் அறிவிப்புகளை முடக்கலாம்.

குழு உரையாடலில் நபர்களைக் குறிப்பிடுதல்

குழு உரையாடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜில் ஒருவரின் கவனத்தைப் பெற, அந்த மெசேஜில் அவரின் பெயரை நீங்கள் குறிப்பிடலாம். அதுகுறித்த அறிவிப்பை அவர் பெறுவார். நீங்கள் குறிப்பிடும் நபரின் அமைப்புகளைப் பொறுத்து, உரையாடல் அறிவிப்புகளை முடக்கியிருந்தாலும் கூட அவருக்கு அறிவிக்கப்படலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலில் உள்ள வார்த்தைப் புலத்தில் தொடர்பின் பெயரை டைப் செய்யத் தொடங்கவும்.

  3. தொடர்பின் பெயர் காட்டப்படும்போது அதன் மீது தட்டவும்.

    @ என்று டைப் செய்து அதைத் தொடர்ந்து தொடர்பின் பெயரை டைப் செய்வதன் மூலமும் மெசேஜஸில் ஒரு தொடர்பைக் குறிப்பிடலாம்.

    மெசேஜஸ் செயலியில் உங்கள் பெயர் குறிப்பிடப்படும்போது நீங்கள் எப்படி அல்லது எப்போது அறிவிப்புகளைப் பெற வேண்டும் என்பதை மாற்ற, அமைப்புகள்  > செயலிகள் > மெசேஜஸ் > எனக்குத் தெரிவி” என்பதற்குச் செல்லவும்.

குழு உரையாடலுக்குப் பெயரிடுதல்

உரையாடலை விளக்கும் வகையிலான ஒரு பெயரைக் குழு மெசேஜுக்கு வழங்கி, அதற்கான ஒரு படத்தையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். iMessageஐ ஆன் செய்துள்ள அனைவருக்கும் புதிய பெயரும் படமும் காட்டப்படும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலின் மேலே உள்ள பெயர் அல்லது எண்ணைத் தட்டவும்.

  3. “பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்று” என்பதைத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.