இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் கிராப் செய்தல், சுழற்றுதல், திருப்புதல் அல்லது நேராக்குதல்

iPadஇல் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள கருவிகளைப் பயன்படுத்தி புகைப்படம் அல்லது வீடியோவை கிராப் செய்யலாம், சுழற்றலாம், திருப்பலாம், நேராக்கலாம் அல்லது அதன் அளவைச் சரிசெய்யலாம்.

iCloud புகைப்படங்கள் அம்சத்தைப் பயன்படுத்தினால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நீங்கள் செய்யும் திருத்தங்கள் அனைத்தும் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் சேமிக்கப்படும்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கிராப் செய்தல், சுழற்றுதல், பிளிப் செய்தல்

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்க அதைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. திரையின் இடதுபுறத்தில் “கிராப் செய்” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    ஃபோட்டோஸ் செயலியின் “திருத்துதல்” திரையின் நடுவில் ஒரு புகைப்படம் காட்டப்பட்டுள்ளது. திரையின் இடதுபுறத்தில் “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகிய பட்டன்கள் உள்ளன. அவற்றில் “கிராப் செய்” பட்டன் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திரையின் வலதுபுறத்தில் கிராப் செய்வதை மேம்படுத்தும் விருப்பங்களும், எஃபெக்ட்டின் அளவைச் சரிசெய்வதற்கான ஸ்லைடரும் உள்ளன.
    • நேரடியாக கிராப் செய்ய: படத்தில் நீங்கள் வைத்திருக்க விரும்பும் பகுதியை இணைக்க செவ்வக மூலைகளை இழுக்கவும் அல்லது திறக்கவோ மூடவோ பின்ச் செய்யவும்.

      குறிப்பு: நீங்கள் ஒரு மூலையை இழுக்கும்போது, கிராப் கருவி புகைப்படத்தின் அசல் தோற்ற விகிதத்தை வைத்திருக்கும். தோற்ற விகிதத்தை மாற்ற, தோற்ற விகிதத்தை அன்லாக் செய்ய புகைப்படத்தின் மேல் வலது மூலையில் உள்ள லாக்கைத் தட்டவும்.

    • நிலையான முன்னமைவு விகிதத்திற்கு கிராப் செய்ய: திரையின் மேற்புறத்தில் உள்ள “தோற்ற விகிதம்” பட்டன்-ஐத் தட்டி, திரையின் கீழ்ப்பகுதியில் ஒரு விருப்பத்தை (சதுரம், வால்பேப்பர், 9:16, 5:7 போன்றவை) தேர்வுசெய்யவும்.

    • சுழற்ற: படத்தை 90 டிகிரி சுழற்ற, “சுழற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

    • பிளிப் செய்ய: படத்தை கிடைமட்டமாக ஃபிளிப் செய்ய “ஃபிளிப் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது உங்கள் மாற்றங்கள் பிடிக்கவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டி, “மாற்றங்களை நிராகரி” என்பதைத் தட்டவும்.

நீங்கள் அதைப் பார்க்கும்போது புகைப்படத்தை விரைவாக கிராப் செய்ய, பெரிதாக்கிப் பார்க்க புகைப்படத்தில் பின்ச் செய்யவும். புகைப்படம் நீங்கள் விரும்பியபடி கிராப் செய்த நிலையில் தோன்றும் போது, திரையின் மேல் வலது மூலையில் உள்ள “கிராப் செய்” என்பதைத் தட்டவும். கிராப் செய்யும் கருவிகளைப் பயன்படுத்தி மேலும் ஏதேனும் மாற்றங்களைச் செய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

புகைப்படம் அல்லது வீடியோவை நேராக்கி அதன் காட்சியமைப்பைச் சரிசெய்தல்

நீங்கள் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை நேராக்கலாம் அல்லது செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ சாய்த்துக் கொள்ளலாம்.

  1. iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோவைத் திறக்க அதைத் தட்டி, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “கிராப் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. திருத்துதல் விருப்பங்களைப் பார்க்க புகைப்படத்தின் கீழே இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  5. நீங்கள் திருத்த விரும்பும் எஃபெக்ட்டைத் தட்டி, துல்லியமான மாற்றங்களைச் செய்ய ஸ்லைடரை இழுக்கவும்.

    நீங்கள் செய்யும் அட்ஜெஸ்ட்மெண்டின் அளவு ஸ்லைடரில் காட்டப்படும். திருத்தப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவுக்கும் அவற்றின் அசலுக்கும் இடையில் மாற பட்டனைத் தட்டவும்.

  6. உங்கள் திருத்தங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: நீங்கள் சேமித்த பிறகு செய்த திருத்தங்களைச் செயல்தவிர்க்க, புகைப்படம் அல்லது வீடியோவைத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டி, “திரும்பச் செல்” என்பதை தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.