இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள கோப்புகள் செயலியில் இருந்து கோப்புகளை அனுப்புதல்

நீங்கள் எந்தவொரு கோப்பின் நகலையும் மற்றவர்களுக்கு அனுப்பலாம். டிஜிட்டல் வடிவில் இல்லாத ஆவணத்தை நீங்கள் அனுப்ப விரும்பினால், முதலில் கோப்புகள் செயலியைப் பயன்படுத்தி அதை ஸ்கேன் செய்ய வேண்டும்.

கோப்பை அனுப்புதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பைத் தொட்டு பிடித்து, பகிர் என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: கோப்பின் சிறிய பதிப்பை அனுப்ப, பகிர் என்பதைத் தட்டுவதற்கு முன்பு “கம்ப்ரஸ் செய்” என்பதைத் தட்டவும், பின்னர் கோப்பின் கம்ப்ரஸ் செய்யப்பட்ட பதிப்பைத் தொட்டுப் பிடித்து (zip கோப்பு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்), பகிர் என்பதைத் தட்டவும்.

  3. அனுப்புவதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்து (எடுத்துக்காட்டு: AirDrop, மெசேஜஸ், Mail), பின்னர் “அனுப்பு” என்பதைத் தட்டவும்.

பெறப்பட்ட ஆவணத்திற்குப் பதிலளித்தல்

நீங்கள் Mail செயலியில் இருந்து பதிவிறக்கிச் சேமித்த இணைப்பின் மூலம், அந்த மின்னஞ்சலுக்கு விரைவாகப் பதிலளிக்கலாம், தேவைப்பட்டால் இணைப்பைத் திருப்பி அனுப்பலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பதிலளிக்க விரும்பும் கோப்பைத் தொட்டுப் பிடித்து, பின்னர் “இவருக்குப் பதிலளி:” என்பதைத் தட்டவும்.

ஆவணத்தை ஸ்கேன் செய்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ஸ்கேன் செய்ய விரும்பும் ஆவணம் உள்ள இடம் அல்லது கோப்புறையைத் திறக்கவும்

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “ஆவணங்களைத் ஸ்கேன் செய்” என்பதைத் தட்டவும்.

கோப்புகள் செயலியிலிருந்து கோப்புகளை அனுப்ப, Split View அல்லது Slide Overஐப் பயன்படுத்தி Mail அல்லது மெசேஜஸ் செயலியைத் திறக்கலாம், ஒன்று அல்லது பல ஐட்டங்களை கோப்புகள் செயலியில் தேர்ந்தெடுத்து நீங்கள் தேர்ந்தெடுத்ததை ஒரு மெசேஜுக்குள் இழுக்கவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் பகிர விரும்பும் கோப்புகள் அல்லது கோப்புறைகளை iCloud Driveஇல் சேமித்திருந்தால், அவற்றின் உள்ளடக்கங்களைப் பார்க்கவும் திருத்தவும் மற்றவர்களை அழைக்கலாம். நீங்கள் அவற்றின் நகல்களை அனுப்பத் தேவையில்லை.

இவற்றையும் பாருங்கள்iPadஇல் iCloud Driveஐ அமைத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.