இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் iTunes Store வாங்குதல்களையும் அமைப்புகளையும் நிர்வகித்தல்

iTunes Store செயலியில், நீங்களோ உங்கள் குடும்ப உறுப்பினர்களோ வாங்கிய இசை, திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் பதிவிறக்கலாம். அமைப்புகளுக்குச் சென்று iTunes Storeக்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.

குடும்பப் பகிர்வு மூலம் வாங்குதல்களை அங்கீகரித்தல்

குடும்ப பகிர்வை அமைப்பதன் மூலம, குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட பிற குடும்ப உறுப்பினர்கள் வாங்கியவற்றை குடும்ப ஒருங்கிணைப்பாளர் மதிப்பாய்வு செய்து அங்கீகரிக்கலாம். “வாங்குவதற்குக் கேள்” அம்சத்தை ஆன் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

நீங்களோ குடும்ப உறுப்பினர்களோ வாங்கிய இசையைப் பார்வையிடுதல் மற்றும் பதிவிறக்குதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள iTunes Store செயலிக்குச் செல்லவும்.

  2. மேலே உள்ள தாவல் பட்டியில் “வாங்கியவை” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் குடும்பப் பகிர்வை அமைத்தால், “எனது வாங்குதல்கள்” என்பதைத் தட்டவும், பின்னர் ஒரு குடும்ப உறுப்பினரைத் தேர்வுசெய்து அவர்கள் வாங்கியவற்றைப் பார்க்கவும்.

    குறிப்பு: குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வாங்கியவற்றைப் பகிரத் தேர்வுசெய்தால் மட்டுமே அவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

  4. நீங்கள் பதிவிறக்க விரும்புவதைக் கண்டுபிடித்து, “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

நீங்களோ உங்கள் குடும்ப உறுப்பினர்களோ வாங்கிய திரைப்படங்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க மற்றும் பதிவிறக்க, Apple TV செயலியில் உங்கள் லைப்ரரியை நிர்வகித்தல் என்ற இணைப்பைப் பார்க்கவும்.

iTunes Storeஇல் இதுவரை நீங்கள் வாங்கியவை அனைத்தையும் பார்வையிடுதல்

உங்கள் Apple கணக்கு மூலம் வாங்கிய செயலிகள், பாடல்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் மற்றும் பலவற்றை அவை வாங்கப்பட்ட காலவரிசையின்படி பட்டியலாகப் பார்க்க, iTunes Storeஇல் இதுவரை நீங்கள் வாங்கியவற்றைப் பார்வையிடுதல் என்ற இணைப்புக்குச் செல்லவும்.

இதுவரை நீங்கள் வாங்கியவற்றில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம்:

  • உங்கள் கணக்கிற்கு ஒரு ஆர்டர் எப்போது பில் செய்யப்பட்டது என்பதைப் பார்க்கலாம்.

  • வாங்கிய தேதியைப் பார்க்கலாம்.

  • மின்னஞ்சல் ரசீதுகளை மீண்டும் அனுப்பலாம்.

  • வாங்கிய உள்ளடக்கம் மீதான ஒரு சிக்கலைப் புகாரளிக்கலாம்.

உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைத்தல்

உள்ளடக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை ஆன் செய்த பிறகு, அமைப்புகள்  > ஸ்க்ரீன் டைம் > உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள் > App Store, மீடியா, இணையம் & கேம்ஸ் என்பதற்குச் சென்று, கிடைக்கும் கட்டுப்பாடுகளை அமைக்கவும். ஆபாச உள்ளடக்கத்தைத் தடுக்கலாம், இசை வீடியோக்களை ஆஃப் செய்யலாம், வயதிற்குப் பொருத்தமான மதிப்பீடுகள் மூலம் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை, இசை வீடியோக்கள், இ-புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் அல்லது Appleஇல் இருந்து ரிங்டோன்களை வாங்கும்போது, இணக்கமான iPhone, iPad, Mac அல்லது PCஇல் இவற்றை நிரந்தரமாகப் பதிவிறக்கும் விருப்பமும் உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் பதிவிறக்கிய உள்ளடக்கத்தை Apple திரும்பப் பெற முடியாது, பதிவிறக்கிய உள்ளடக்கத்தை இணைய இணைப்பு இல்லாமல் நீங்கள் எப்போதும் அணுகலாம்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.