இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் மின்னஞ்சல்களை ஃபில்டர் செய்தல்

ஃபில்டர்களைப் பயன்படுத்தி, ஃபில்டர் பட்டியலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் மின்னஞ்சல் மெசேஜ்களை மட்டும் தற்காலிகமாகக் காட்டும் வகையில் நீங்கள் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் “படிக்காதவை” மற்றும் “இணைப்புகளுடன் கூடிய Mail மட்டும்” என்பவற்றைத் தேர்ந்தெடுத்தால், இணைப்புகளைக் கொண்ட படிக்காத மின்னஞ்சல்கள் மட்டுமே உங்களுக்குக் காட்டப்படும்.

குறிப்பிட்ட ஃபோகஸ் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது Mailஇல் எந்த மின்னஞ்சல் கணக்குகள் தோன்ற வேண்டும் என்பதையும் நீங்கள் குறிப்பிடலாம்.

மின்னஞ்சல்களை ஃபில்டர் செய்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மெயில்பாக்ஸ் பட்டியலின் கீழ் இடது மூலையில் உள்ள “ஃபில்டரை நிலைமாற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

    குறிப்பு: iPadஇல் செங்குத்துத் திசையமைவில் மெசேஜைப் படிக்கும்போது, கீழ்ப்பகுதியில் “ஃபில்டரை நிலைமாற்று” பட்டன் உடன் மெசேஜ் பட்டியலைக் காட்ட “சைடுபாரைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “ஃபில்டர் வகை” என்பதைத் தட்டி, நீங்கள் பார்க்க விரும்பும் மெசேஜ்களுக்கான நிபந்தனையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஆன் செய்யவும். பிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

அனைத்து ஃபில்டர்களையும் ஆஃப் செய்ய, “ஃபில்டரை நிலைமாற்று” பட்டன்-ஐத் தட்டவும். குறிப்பிட்ட ஃபில்டரை ஆஃப் செய்ய, “ஃபில்டர் விருப்பங்கள்” என்பதைத் தட்டி, அதைத் தேர்வுநீக்கவும்.

மெயில் கணக்கை ஃபோகஸ் பயன்முறையுடன் பொருத்துதல்

ஃபோகஸ் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது எந்த மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து அறிவிப்புகளைப் பெறலாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் வொர்க் ஃபோகஸ் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது உங்கள் பணி சார்ந்த மின்னஞ்சல் கணக்கையும் அதன் அறிவிப்புகளையும் மட்டுமே காட்ட ஒரு ஃபில்டரை அமைக்கலாம்.

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் சென்று ஃபோகஸ் மீது தட்டவும்.

    உங்களுக்குத் தேவையான ஃபோகஸ் விருப்பத்தை நீங்கள் பார்க்கவில்லை எனில், “ஃபோகஸைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும். ஃபோகஸை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

  2. “ஃபோகஸ் ஃபில்டர்கள்” மெனுவின் கீழே உள்ள “ஃபில்டரைச் சேர்” மெனுவைத் தட்டி, Mailஐத் தட்டவும்.

  3. ஃபோகஸ் பயன்முறையில் இருக்கும்போது உங்கள் இன்பாக்ஸில் நீங்கள் பார்க்க விரும்பும் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.