இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iCloud தரவுகளுக்கு “மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைப்” பயன்படுத்துதல்

இயல்பாகவே, உங்கள் தகவல்கள் பரிமாற்றப்படும்போது அதை என்கிரிப்ட் செய்வதன் மூலமாகவும், என்கிரிப்ட் வடிவமைப்பில் அதைச் சேமிப்பதன் மூலமாகவும், Apple தரவு மையங்களில் உங்கள் என்கிரிப்ஷன் கீக்களைப் பாதுகாப்பதன் மூலமாகவும் iCloud உங்கள் தகவல்களைப் பாதுகாக்கிறது. கூடுதலாக, பல Apple சேவைகள் முழுமையான என்கிரிப்ஷனைப் பயன்படுத்துகின்றன; உங்கள் சாதனங்கள் மற்றும் பாஸ்கோடில் இருந்து பெறப்பட்ட கீக்களைப் பயன்படுத்தி உங்கள் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படும்.

உச்சக்கட்ட கிளவுட் தரவுப் பாதுகாப்பைப் பெற, “மேம்பட்ட தரவு பாதுகாப்பு” அம்சத்தை (iPadOS 16.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை) நீங்கள் ஆன் செய்யலாம். பின்வருவன போன்ற கூடுதல் தரவு வகைகளில் முழுமையான என்கிரிப்ஷனை இது பயன்படுத்துகிறது:

  • சாதன பேக்-அப்

  • மெசேஜஸ் பேக்-அப்

  • iCloud Drive

  • குறிப்புகள்

  • ஃபோட்டோஸ்

  • நினைவூட்டல்கள்

  • Safari புக்மார்க்குகள்

  • Siri சுருக்கவழிகள்

  • “வாய்ஸ்மெமோ” செயலி

  • வாலெட் பாஸ்கள்

மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு மூலம், உங்களின் பாதுகாக்கப்பட்ட தரவுகளை நம்பகமான சாதனங்களில் மட்டுமே டீகிரிப்ட் செய்ய முடியும், இதனால் கிளவுடில் பாதுகாப்பு மீறல்கள் ஏற்பட்டாலும் கூட உங்கள் தரவுகள் பாதுகாக்கப்படும். Apple கூட உங்கள் தகவல்களை அணுக முடியாது.

மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைப் பயன்படுத்துவதற்கான தேவைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, iCloudக்கு மேம்பட்ட தரவுப் பாதுகாப்பை எப்படி ஆன் செய்வது? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

மேம்பட்ட தரவுப் பாதுகாப்பை ஆன் செய்தல்

  1. அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud என்பதற்குச் சென்று “மேம்பட்ட தரவுப் பாதுகாப்பு” என்பதைத் தட்டவும்.

  2. “மேம்பட்ட தரவுப் பாதுகாப்பை ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

  3. ரெகவரி தொடர்பையோ ரெகவரி கீயையோ நீங்கள் அமைக்கவில்லை எனில், “கணக்கு மீட்டெடுப்பு” என்பதைத் தட்டி “கணக்கு மீட்டெடுப்பை அமை” என்பதைத் தட்டிய பிறகு திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    கவனத்திற்கு: நீங்கள் “மேம்பட்ட தரவுப் பாதுகாப்பைப்” பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் தரவை மீட்டெடுப்பதற்கு நீங்களே பொறுப்பு. Appleஇல் உங்கள் தரவை மீட்டெடுக்கத் தேவையான கீக்கள் இல்லாததால், உங்கள் கணக்கில் ரெகவரி தொடர்பு அல்லது ரெகவரி கீ அமைக்கப்பட வேண்டும். உங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ உங்கள் கணக்கிற்கான அணுகலை இழந்துவிட்டாலோ உங்கள் தரவுகளுக்கான அணுகலை மீண்டும் பெற, இந்தக் கூடுதல் மீட்டெடுப்பு முறைகளைப் பயன்படுத்தலாம்.

பின்னர் “மேம்பட்ட தரவுப் பாதுகாப்பை” ஆஃப் செய்யத் தேர்வுசெய்தால், உங்கள் iCloud தரவு நிலையான பாதுகாப்பிற்குத் திரும்பும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.