இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தல்

Mail செயலியில் நீங்கள் மின்னஞ்சல்களைப் படிக்கலாம், தொடர்புகளைச் சேர்க்கலாம், மின்னஞ்சலைத் திறக்காமலேயே அதன் உள்ளடக்கங்களை முன்னோட்டமிடலாம்.

Mail இன்பாக்ஸ் திறக்கப்பட்டு, இடதுபுறத்தில் மின்னஞ்சல்களின் பட்டியலும் வலதுபுறத்தில் திறக்கப்பட்ட மின்னஞ்சலும் காட்டப்பட்டுள்ளது.

மின்னஞ்சலைப் படித்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மெசேஜ் பட்டியலில், நீங்கள் படிக்க விரும்பும் மெசேஜைத் தட்டவும்.

முதன்மை மின்னஞ்சலைப் பின்னர் பார்க்க “எனக்கு நினைவூட்டு” என்பதைப் பயன்படுத்துதல்

முதன்மை மெசேஜை உடனடியாகப் பார்க்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால், நினைவூட்டலைப் பெறுவதற்கான நேரத்தையும் தேதியையும் அமைத்து, அந்த மெசேஜ் மீண்டும் உங்கள் இன்பாக்ஸின் மேல் பகுதியில் காட்டும்படி அமைக்கலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. முதன்மை மெசேஜைத் தட்டி, மெசேஜின் கீழே வலதுபக்கத்தில் உள்ள “பதிலளி” பட்டன்-ஐத் தட்டி, "எனக்கு நினைவூட்டு" என்பதைத் தட்டி, எப்போது நினைவூட்ட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: எளிதாக அணுகும் வகையில் Mail செயலியின் டூல்பாரில் “எனக்கு நினைவூட்டு” விருப்பத்தை நீங்கள் சேர்க்கலாம். Mail டூல்பாரைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

பல மின்னஞ்சல்களை “படித்தவை” என்று விரைவாகக் குறித்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மின்னஞ்சல் பட்டியல் காட்டப்படும்போது, “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, நீங்கள் குறிக்க விரும்பும் மின்னஞ்சல்களின் செக்பாக்ஸ்களைத் தட்டி அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    முக்கியம்: பரிவர்த்தனைகள், அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள மெசேஜ்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அந்தப் பிரிவில் அந்த அனுப்புநரிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மெசேஜ்களும் தேர்ந்தெடுக்கப்படும்.

  3. மெசேஜ் பட்டியலின் கீழே உள்ள குறிப்பைத் தட்டி “படித்ததாகக் குறி” என்பதைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: உங்கள் முகப்புத் திரையில் காட்டப்படும் படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கை, உங்கள் முதன்மைப் பிரிவில் உள்ள படிக்காத மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள படிக்காத மின்னஞ்சல்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்ட, அமைப்புகள் > அறிவிப்புகள் > Mail > அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கு என்பதற்குச் சென்று "படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும்" என்பதை ஆன் செய்யவும்.

முதன்மை மின்னஞ்சல் மற்றும் விருப்பங்களின் பட்டியலை முன்னோட்டமிடுதல்

நீங்கள் முதன்மை மெசேஜை முழுமையாகத் திறக்காமல் அது எதைப் பற்றியது என்பதைப் பார்க்க வேண்டுமெனில் அதன் முன்னோட்டத்தைப் பார்க்கலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் முதன்மை மின்னஞ்சல் பட்டியலில் ஒரு மின்னஞ்சலைத் தொட்டுப் பிடித்து அதன் உள்ளடக்கங்களை முன்னோட்டமிடலாம். மேலும், பதிலளித்தல், நகர்த்துதல் மற்றும் பல விருப்பங்களைக் கொண்ட பட்டியலைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் நீளமான முன்னோட்டத்தைக் காட்டுதல்

உங்கள் இன்பாக்ஸில் இயல்புநிலையாகவே ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் இரண்டு வரிகளை Mail செயலி காட்டும். மெசேஜைத் திறக்காமலேயே கூடுதல் வரிகளைக் காட்டும் வகையில் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

அமைப்புகள்  > செயலிகள் > Mail > முன்னோட்டம் (மெசேஜ் பட்டியல் என்பதற்குக் கீழ்) என்பதற்குச் சென்று, ஐந்து வரிகள் வரை தேர்வுசெய்யலாம்.

முழு உரையாடலையும் காட்டுதல்

அமைப்புகள்  > செயலிகள் > Mail என்பதற்குச் சென்று, “திரெட் வாரியாக ஒழுங்குபடுத்து” என்பதை (திரெட்டிங் என்பதற்குக் கீழ்) ஆன் செய்யவும்.

குறிப்பு: “படித்த மெசேஜ்களைச் சுருக்கு” அல்லது “சமீபத்தியவற்றை மேலே காட்டு” போன்ற பிற அமைப்புகளையும் இங்கே மாற்றலாம்.

உங்கள் இன்பாக்ஸில் “பெறுநர்” மற்றும் Cc லேபிள்களைக் காட்டுதல்

அமைப்புகள்  > செயலிகள் > Mail என்பதற்குச் சென்று, “பெறுநர்/Cc லேபிள்களைக் காட்டு” என்பதை ஆன் செய்யவும் (மெசேஜ் பட்டியல் என்பதற்கு கீழ் இருக்கும்).

உங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களையும் ஒன்று சேகரிக்கும் “பெறுநர்/Cc” மெயில்பாக்ஸையும் நீங்கள் பார்க்கலாம். அதைக் காட்ட அல்லது மறைக்க, Mail செயலியின் மேல் இடது மூலையில் உள்ள “சைடுபாரைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி, அஞ்சல் பெட்டிகளுக்கு மேல் “திருத்து” என்பதைத் தட்டி, “பெறுநர் அல்லது Cc” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தொடர்புகளில் ஒருவரைச் சேர்த்தல் அல்லது அவர்களை VIPஆக மாற்றுதல்

தொடர்புகளில் ஒருவரைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவரின் மெசேஜ்களை எளிதாகத் தேடிக் கண்டறியலாம் அல்லது அவரை VIPஆக மாற்றி அவரிடமிருந்து பெறும் மெசேஜ்களைத் தானாகவே நட்சத்திரமிடலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மெசேஜில் ஒரு நபரின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் தொடர்புகளில் சேர்த்தல்: “புதிய தொடர்பை உருவாக்கு” அல்லது “ஏற்கெனவே உள்ள தொடர்பில் சேர்” என்பதைத் தட்டவும்.

      ஃபோன் எண், பிற மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பலவற்றைச் சேர்க்கலாம்.

    • உங்கள் VIP பட்டியலில் சேர்த்தல்: “VIPஇல் சேர்” என்பதைத் தட்டவும்.

தொடர்புப் புகைப்படங்களைக் காட்டுதல் அல்லது மறைத்தல்

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. இன்பாக்ஸில், திரையின் மேலே உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “தொடர்பின் படங்களைக் காட்டு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேர்வு நீக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.