இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

Apple சாதனங்களுக்கு இடையே வேலை செய்ய கன்டினியுட்டியைப் பயன்படுத்துதல்

iPhone, iPad, Apple Watch போன்ற வேறொரு சாதனத்துடன் உங்கள் iPadஐ பயன்படுத்தும்போது பிரத்தியேகமான கன்டினியுட்டி அம்சங்களை நீங்கள் பயன்படுத்திலாம். உங்கள் சாதனங்களைத் தனித்துவமான வழிகளில் பயன்படுத்த இந்த அம்சங்கள் உதவும். உங்கள் சாதனங்களுக்கு இடையே தடையின்றி வேலை செய்யலாம், பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்யலாம், கோப்புகள் மற்றும் புகைப்படங்களைப் பகிரலாம், வீடியோ மற்றும் ஆடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். கன்டினியுட்டி அம்சங்கள் உங்கள் சாதனங்களின் ஆபரேட்டிங் சிஸ்டங்களிலும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல செயலிகளிலும் நேரடியாக உள்ளமைக்கப்பட்டிருக்கும். கூடுதல் செயலி எதுவும் நிறுவத் தேவையில்லை. தொடங்குவதற்கு, அனைத்துச் சாதனங்களிலும் ஒரே Apple கணக்கில் உள்நுழையவும்.

குறிப்பு: கன்டினியுட்டி அம்சங்களுக்கு, குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகள் உள்ளன. சில அம்சங்களுக்கு Wi-Fi மற்றும் Bluetooth® தேவை. Apple சாதனங்களுக்கான கன்டினியுட்டி அம்சங்களும் தேவைகளும் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

iPad மூலம் உங்கள் பணியிடத்தை விரிவுபடுத்துதல்

MacBook Air மற்றும் iPad இரண்டும் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இரண்டு திரைகளிலும் பல இடங்களில் சிவப்பு நிறத்தில் உரை திருத்தப்பட்டுள்ளது. அவற்றில், வாக்கியங்கள் குறுக்குக்கோடிட்டு அடிக்கப்பட்டுள்ளன, அம்புக்குறிகள் சேர்க்கப்பட்டுள்ளன, வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. iPad திரையின் கீழ்ப்பகுதியில் மார்க்-அப் கருவிகளும் உள்ளன.

Sidecar அம்சத்தின் மூலம், உங்கள் Macஇன் இரண்டாவது டிஸ்ப்ளேவாக iPadஐப் பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் Mac டெஸ்க்டாப்பை நீட்டிக்கலாம் அல்லது ஒரே செயலியை இரு திரைகளிலும் காட்டலாம், ஆனால் அதன் வெவ்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்தலாம். Macக்கான இரண்டாவது டிஸ்ப்ளேயாக iPadஐப் பயன்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

சாதனங்களுக்கு இடையே உள்ளடக்கத்தை விரைவாகப் பகிர்தல்

iPadஇல் இருந்து உங்கள் Macக்கு உரையை நகலெடுத்தல், iPhoneஇல் இருந்து உங்கள் iPadக்கு கோப்பைப் பகிர்தல் அல்லது சாதனங்களுக்கு இடையே பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்தல் என எதுவாக இருந்தாலும் உங்கள் சாதனங்களுக்கு இடையே உள்ளடக்கத்தை எளிதாகப் பகிரலாம்.

புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் பிறவற்றை உங்களுக்கு அருகிலுள்ளவர்களுடன் வயர்லெஸ் முறையில் விரைவாகப் பகிரலாம். AirDrop மூலம் iPhone, iPad, Mac ஆகியவற்றிற்கு இழுத்து விடுவதன் மூலமாகவே எளிதாகப் பகிரலாம். iPadஇல் AirDropஐப் பயன்படுத்தி அருகிலுள்ள Apple சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்புதல் என்பதைப் பார்க்கவும்.

யுனிவர்சல் கிளிப்போர்டு மூலம், ஒரு Apple சாதனத்தில் இருந்து வார்த்தை, படங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நகலெடுத்து அந்த உள்ளடக்கத்தை மற்றொரு Apple சாதனத்தில் ஒட்டலாம். உதாரணமாக, உங்கள் iPadஇல் உள்ள Safariஇல் இருந்து ஒரு உணவுச் செய்முறைக் குறிப்பை நகலெடுத்து அதை அருகிலுள்ள Macஇல் உள்ள குறிப்புகள் செயலியில் ஒட்டலாம். உங்கள் Apple சாதனங்களுக்கு இடையே நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ஒரு சாதனத்தில் ஓர் ஆவணம், மின்னஞ்சல் அல்லது மெசேஜைத் தொடங்கி, மற்றொரு சாதனத்தில் நீங்கள் விட்ட இடத்தில் இருந்து தொடரலாம். Mail, Safari, மேப்ஸ், மெசேஜஸ், நினைவூட்டல்கள், கேலண்டர், தொடர்புகள், Pages, Numbers, Keynote போன்ற செயலிகளில் பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்யலாம். உங்கள் iPad மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே பணிகளை ஹேண்ட் ஆஃப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

ஸ்கெட்ச்கள், புகைப்படங்கள் மற்றும் ஸ்கேன்களைச் சேர்த்தல்

iPadஇல் ஒரு ஸ்கெட்ச் காட்டப்பட்டுள்ளது, அதற்கு அருகே Macஇல் ஒரு குறிப்பில் ஸ்கெட்ச் காட்டப்பட்டுள்ளது.

கன்டினியுட்டி ஸ்கெட்ச் மூலம், iPadஇல் ஸ்கெட்ச் செய்து அதை Macஇல் பார்க்கலாம். உங்கள் iPadஇல் படமெடுத்தோ ஆவணத்தை ஸ்கேன் செய்தோ, உங்கள் Macஇல் கன்டினியுட்டி கேமரா மூலம் அதைக் காட்டலாம். உங்கள் iPadஇல் இருந்து ஸ்கெட்ச்கள், புகைப்படங்கள், ஸ்கேன்கள் ஆகியவற்றை Macஇல் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

இன்னும் கூடுதலான கன்டினியுட்டி அம்சங்கள்

Mac மற்றும் iPadஐ ஒன்றாகக் கட்டுப்படுத்துதல்

ஒரு கீபோர்டையும் டிராக்பேட்/மவுஸையும் பயன்படுத்தி iPad மற்றும் Macக்கு இடையே யுனிவர்சல் கட்டுப்பாடு மூலம் பணிபுரியலாம்.

கீபோர்டு மற்றும் மவுஸைப் பயன்படுத்தி Mac மற்றும் iPadஐக் கட்டுப்படுத்துதல்

உங்கள் iPadஇல் இருந்து அழைப்புகளுக்குப் பதிலளித்தல் மற்றும் மெசேஜ்களை அனுப்புதல்

iPhoneஇல் இருந்து iPadக்கு அழைப்புகளை ரிலே செய்யலாம், மெசேஜ்களை அனுப்பலாம் பெறலாம்.

iPadஇல் ஃபோன் அழைப்புகளையும் மெசேஜ்களையும் பெறுதல்

பெரிய திரையில் ஸ்ட்ரீம் செய்தல்

உங்கள் iPadஇல் இருந்து வீடியோக்கள், இசை, புகைப்படங்கள் மற்றும் பலவற்றை உங்கள் Mac, Apple TV, AirPlay 2-செயல்படுத்தப்பட்ட TV ஆகியவற்றுடன் பகிரலாம்.

உங்கள் iPadஇல் இருந்து AirPlay மூலம் வீடியோ மற்றும் ஆடியோவை ஸ்ட்ரீம் செய்தல்

உங்கள் Wi-Fiஐப் பகிர்தல்

iPadஇல் (Wi-Fi + Cellular) உள்ள தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் Macஐ இணையத்துடன் இணைக்கலாம்.

iPad (Wi-Fi + Cellular) இணைய இணைப்பைத் தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் பகிர்ந்துகொள்ளுதல்

உங்கள் சாதனங்களை ஒன்றாகப் பயன்படுத்துவதற்கான பிற வழிகள்

கன்டினியுட்டி அம்சங்களைத் தவிர மற்ற வழிகளிலும் உங்கள் Macஐ பிற Apple சாதனங்களுடன் நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் இதையும் செய்யலாம்:

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.