இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் பாட்காஸ்ட்களைக் கண்டறிதல்

பாட்காஸ்ட்கள் செயலியைப் பயன்படுத்தி அறிவியல், செய்திகள், அரசியல், நகைச்சுவை மற்றும் பலவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கண்டறியவும். நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியைக் கண்டறிந்தால் அதை உங்கள் லைப்ரரியில் சேர்க்க பின்தொடரலாம். பிறகு அதை எளிதாக ஆஃப்லைனில் கேட்கலாம், புதிய எபிசோடுகள் குறித்த அறிவிப்புகளைப் பெறலாம், பின்தொடரும் நிகழ்ச்சிகளை உங்களின் பிற Apple சாதனங்கள், இணையத்தில் உள்ள Apple Podcasts ஆகியவற்றில் அணுகலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

குறிப்பு: நிகழ்ச்சிகள் பொதுவாக பிரத்தியேக நிகழ்ச்சிகள் மற்றும் எபிசோடுகள், புதிய வெளியீடுகள், விளம்பரங்கள் இல்லாத எபிசோடுகள் மற்றும் பலவற்றுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும் கட்டணச் சந்தாக்களைக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு நிகழ்ச்சி அல்லது சேனலுக்குச் சந்தா சேரலாம் மற்றும் உங்கள் சந்தாக்களை நிர்வகிக்கலாம். நீங்கள் ஏற்கனவே Apple Music, Apple News+ அல்லது தகுதிபெறும் மூன்றாம் தரப்பு செயலிக்கு சந்தா சேர்ந்திருந்தால் பாட்காஸ்ட்களில் அதற்கான சந்தாதாரர் உள்ளடக்கத்தைக் கேட்கலாம். iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலியில் சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான உள்ளடக்கத்தைக் கேட்டல் இணைப்பைப் பார்க்கவும்.

பாட்காஸ்ட்கள் செயலியில் உள்ள தேடல் திரை பாட்காஸ்ட்டின் வகைகளைக் காட்டுகிறது. திரையின் கீழ்ப்பகுதியில் எபிசோடின் கலைப்படைப்பு, எபிசோடு தலைப்பு, “ரீவைண்ட்”, “இடைநிறுத்து” மற்றும் “முன்னோக்கிச் செல்” பட்டன்கள் ஆகியவை உள்ளன.

பாட்காஸ்ட்களைக் கண்டறிதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தலைப்பு, நபர் அல்லது பிரிவின் அடிப்படையில் தேட: “தேடு” பட்டன்-ஐத் தட்டி (இல்லையெனில் சைடுபாரில் உள்ள “தேடுக” என்பதைத் தட்டவும்), தேடல் புலத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடரை உள்ளிடவும். நீங்கள் டைப் செய்யும்போது பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்றொடர்கள் தோன்றும். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தட்டலாம் அல்லது டைப் செய்த சொல் அல்லது சொற்றொடருக்கான அனைத்து முடிவுகளையும் பார்க்க திரையில் உள்ள கீபோர்டில் “தேடு” என்பதைத் தட்டலாம். “சிறந்த தேடல் முடிவுகள்” பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்றொடர்களுக்குக் கீழே தோன்றும்-பட்டியலில் உள்ள சேனல், நிகழ்ச்சி அல்லது எபிசோடைத் தட்டி அதற்கு நீங்கள் நேரடியாகச் செல்லலாம்.

    • புதிய நிகழ்ச்சிகளைக் கண்டறிய: புதிய மற்றும் டிரெண்டிங் நிகழ்ச்சிகளையும் Apple எடிட்டோரியல் தொகுப்புகளையும் பார்க்க உலாவியைத் தட்டவும். நீங்கள் “தேடு” பட்டன்-ஐயும் தட்டலாம் அல்லது எதையும் டைப் செய்யாமலேயும் தேடலாம்; “சிறந்தவை” போன்ற சிறப்பு வகைகள் உங்களுக்குக் காட்டப்படும்.

      உதவிக்குறிப்பு: “சிறந்தவை” வகையை விரைவாகத் தேர்ந்தெடுக்க, “சிறந்தவை” திரையில் உள்ள “வகைகள் அனைத்தும்” என்பதைத் தட்டி, ஒரு வகையைத் தட்டவும்.

    • URL மூலம் நிகழ்ச்சிகளைச் சேர்க்க: சைடுபாரில் உள்ள லைப்ரரிக்குக் கீழே, “நிகழ்ச்சிகள்” என்பதைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு, ”URL மூலம் நிகழ்ச்சியைப் பின்தொடர்க” என்பதைத் தட்டவும். URLஐ உள்ளிட்டு, பின்தொடர் என்பதைத் தட்டவும்.

      குறிப்பு: URL சரியான பாட்காஸ்ட் RSS ஃபீடுக்கானதாக இருக்க வேண்டும்.

பிரத்தியேக பரிந்துரைகளைப் பெறுதல்

உங்கள் கேட்டல் செயல்பாடு, உங்களுக்குப் பிடித்த சேனல்கள் மற்றும் வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பாட்காஸ்ட் பரிந்துரைகளைப் பெறலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. முகப்பைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க: “நீங்கள் விரும்பக்கூடியவை” வரிசையில் இடது அல்லது வலதுபுறமாக ஸ்க்ரால் செய்யவும்.

    • உங்கள் நிகழ்ச்சிப் பரிந்துரைகளை மேம்படுத்த: “நீங்கள் விரும்பக்கூடியவை” வரிசையில் ஒரு நிகழ்ச்சியைத் தட்டி “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “குறைவாகப் பரிந்துரை” என்பதைத் தட்டவும்.

    • நீங்கள் கேட்டவற்றின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட எபிசோடுகளைப் பார்க்க: கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து “இவற்றையும் கேளுங்கள்” வரிசைக்குச் சென்று, இடது அல்லது வலதுபுறமாக ஸ்க்ரால் செய்யவும்.

    • தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளுக்கான ஒப்புதலைத் திரும்பப் பெற: உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி, உங்கள் பெயரைத் தட்டிய பிறகு “பிரத்தியேகப் பரிந்துரைகள்” என்பதை ஆஃப் செய்யவும்.

      குறிப்பு: உங்கள் பிரத்தியேகப் பரிந்துரைகள் அமைப்பானது Apple Books, iTunes Store, Apple TV மற்றும் Appleஇன் சந்தாக்களுக்கும் பொருந்தும்.

நீங்கள் கேட்பவற்றின் வகைகள், ஏற்கெனவே வாங்கிய எந்த சந்தாக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பிற பரிந்துரைகள் கிடைக்கின்றன.

பகிரப்பட்ட பாட்காஸ்ட்களைக் காட்டுதல்

ஒரு நண்பர் ஒரு நிகழ்ச்சியையோ எபிசோடையோ மெசேஜஸில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, நீங்கள் அதை “பாட்காஸ்ட்கள்” செயலியில் எளிதாகப் பார்க்கலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. “முகப்பு” என்பதைத் தட்டி கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவுக்குச் செல்லவும்.

    “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவை உங்களால் பார்க்க முடியவில்லையெனில், உங்கள் நண்பர் உங்கள் தொடர்புகளில் இருப்பதையும் அமைப்புகள்  > செயலிகள் > மெசேஜஸ் > “உங்களுடன் பகிர்ந்தவை” பிரிவுக்குள் அந்த பாட்காஸ்ட்கள் ஆன் செய்யப்பட்டிருப்பதையும் சரிபார்த்து உறுதிசெய்யவும்.

வேறொருவர் உங்களுடன் பகிர்ந்த உள்ளடக்கம் அனைத்தையும் கண்டறிதல் பிரிவையும் பார்க்கவும்.

குறிப்பிட்ட பாட்காஸ்ட்டுக்குள் எபிசோடுகளைத் தேடிப்பார்த்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு நிகழ்ச்சியைக் கண்டறிய தேடவும் அல்லது உலாவவும்.

  3. நிகழ்ச்சியின் தகவல் பக்கத்தைப் பார்க்க அதைத் தட்டவும்.

  4. சமீபத்திய எபிசோடுகளைப் பார்க்க கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்யவும் அல்லது “அனைத்தையும் காட்டு” (இருந்தால்) என்பதைத் தட்டவும்.

எபிசோடுகளை ஃபில்டர் செய்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு நிகழ்ச்சியைக் கண்டறிய தேடவும் அல்லது உலாவவும்.

  3. நிகழ்ச்சியின் தகவல் பக்கத்தைப் பார்க்க அதைத் தட்டவும்.

  4. எபிசோடுகளின் பட்டியலுக்கு மேலே உள்ள எபிசோடுகள் (அல்லது நடப்பு ஃபில்டர்) என்பதைத் தட்டவும்.

  5. பிளே செய்யப்படாதது அல்லது சீசன் 1 போன்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: பிளே செய்யப்படாதவை, பதிவிறக்கப்பட்டவை, சேமித்தவை, பிளே செய்யப்பட்டவை போன்ற சில ஃபில்டர் விருப்பங்கள், நீங்கள் பின்தொடரும் நிகழ்ச்சிகள் அல்லது சேமித்த/பதிவிறக்கப்பட்ட எபிசோடுகளைக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.