இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் விரைவுச் செயல்களைச் செய்தல்

முகப்புத் திரையிலும் கட்டுப்பாட்டு மையத்திலும் செயலிகளிலும் நீங்கள் முன்னோட்டங்களைப் பார்க்கலாம், விரைவுச் செயல்களுக்கான மெனுக்களைத் திறக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

  • ஃபோட்டோஸ் செயலியில், ஒரு படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கவும் விருப்பங்களின் பட்டியலைப் பார்க்கவும் படத்தைத் தொட்டுப் பிடிக்கவும்.

  • Mailஇல், மெசேஜ் உள்ளடக்கங்களின் முன்னோட்டத்தைப் பார்க்கவும் விருப்பங்களின் பட்டியலைப் பார்க்கவும் அஞ்சல் பெட்டியில் உள்ள மெசேஜைத் தொட்டுப் பிடிக்கவும்.

  • முகப்புத் திரையில், விரைவுச் செயல்களுக்கான மெனுவைத் திறக்க செயலி ஐகானைத் தொட்டு பிடிக்கவும். ஐகான்கள் ஜிகிள் ஆகத் தொடங்கினால், மேல் வலதுபுறத்தில் உள்ள “முடிந்தது” என்பதைத் தட்டவும் அல்லது முகப்பு பட்டனை (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல்) அழுத்தி, மீண்டும் முயலவும்.

  • விருப்பங்களைப் பார்க்க, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து கேமரா, ஒளிர்வுக் கட்டுப்பாடு போன்றவற்றைத் தொட்டுப் பிடிக்கவும்.

  • பூட்டுத் திரையில் அறிவிப்பிற்குப் பதிலளிக்க அறிவிப்பை அழுத்திப் பிடிக்கவும்.

  • டைப் செய்யும் போது, உங்கள் ஆன்ஸ்கிரீன் கீபோர்டை டிராக்பேடாக மாற்ற, ஸ்பேஸ் பாரை ஒரு விரலால் தொட்டுப் பிடிக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.