இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் FaceTime பயன்படுத்தத் தொடங்குதல்

Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேருக்கு நேர் உரையாடுவதற்கு FaceTime செயலியைப் பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். FaceTime அழைப்பில், நீங்கள் டிவி ஷோக்களையும் திரைப்படங்களையும் பார்க்கலாம், இசையைக் கேட்கலாம் மற்றும் ஒன்றாக வேலை செய்யலாம்.

FaceTime அமைப்புகள் திரை, இயல்புநிலை அழைப்புச் செயலி விருப்பம், FaceTimeஐ ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கான கட்டுப்பாடு, FaceTimeக்குப் பயன்படுத்தப்படும் Apple கணக்கு ஆகியவற்றைக் காட்டுகிறது.

FaceTimeஐ அமைத்தல்

அமைப்புகள் செயலிக்குச் சென்று, “செயலிகள்” என்பதைத் தட்டி, FaceTimeஐத் தட்டவும். FaceTime ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும், உங்கள் Apple கணக்கை FaceTime உடன் பயன்படுத்த விரும்பினால் அதில் உள்நுழையவும். (உதாரணமாக, சாதனங்களை மாற்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம்). “இயல்புநிலை அழைப்புச் செயலி” என்பதற்குக் கீழே ஆடியோ அழைப்புகளுக்கான இயல்புநிலை அழைப்பு விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம். “FaceTimeக்கு நீங்கள் பயன்படுத்தும் கணக்கு” என்பதன் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு முறைகள் காட்டப்பட்டால், அவற்றில் இருப்பவற்றைத் தட்டி தேர்ந்தெடுக்கவோ தேர்வுநீக்கவோ செய்யலாம்.

FaceTime அழைப்பைத் தொடங்குவதற்கான திரையில் “இணைப்பை உருவாக்கு” பட்டனும் ஒரு FaceTime வீடியோ அல்லது ஆடியோ அழைப்பைத் தொடங்குவதற்கான “புதிய அழைப்பு” பட்டன்களும் காட்டப்பட்டுள்ளன.

FaceTime அழைப்பைச் செய்தல்

FaceTime செயலியைத் திறந்து “புதிய அழைப்பு” என்பதைத் தட்டி, நீங்கள் அழைக்க விரும்பும் நபரின் (அல்லது நபர்களின்) பெயர், எண் அல்லது மின்னஞ்சலை உள்ளிடவும். வீடியோ அழைப்பைச் செய்ய FaceTime-ஐத் தட்டவும் அல்லது ஆடியோ அழைப்பைச் செய்ய “அழை” பட்டன்-ஐத் தட்டவும். குழு FaceTime அழைப்பில் 32 நபர்கள் வரை சேர்க்கலாம்.

Apple சாதனம் இல்லாத ஒருவரை நீங்கள் அழைக்க விரும்பினால், அழைப்பிற்கான இணைப்பை உருவாக்கி மெசேஜஸ் அல்லது மின்னஞ்சலில் அனுப்பலாம். FaceTime-ஐத் திறந்து, “புதிய அழைப்பு” என்பதைத் தட்டி, “அழை” பட்டன்-ஐத் தட்டவும்.

அழைப்பின் செயல்நிலையைக் காட்டும் FaceTime திரை. திரையின் மேற்பகுதியில், பங்கேற்பாளரின் பெயர் பெரிய படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ் இடதுபுறத்தில் ஒரு சிறிய செவ்வகத்தில் வேறு பங்கேற்பாளரின் படமும் அதனருகில் “கேமராவை மாற்று” பட்டன் காட்டப்பட்டுள்ளது. அதற்கு மேலே உள்ள டைல்களில் பிற பங்கேற்பாளர்களின் படங்கள் காட்டப்பட்டுள்ளன. திரையின் கீழ் வலதுபுறத்தில் கூடுதல் FaceTime கட்டுப்பாடுகள் காட்டப்பட்டுள்ளன: “கேமரா”, “மைக்ரோஃபோன்”, “மேலும்”, “அழைப்பை முடி” ஆகிய பட்டன்கள் காட்டப்பட்டுள்ளன.

FaceTime கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

FaceTime அழைப்பின் போது, FaceTime கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் கேமரா அல்லது மைக்கை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், Live Photo எடுக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். கட்டுப்பாடுகளைப் பார்க்கவில்லை என்றால் உங்கள் திரையைத் தட்டவும்.

iPhone முகப்புத் திரையின் மேல் பகுதியில் iPadஇல் இருந்து வரும் FaceTime வீடியோ அழைப்புக்கான அறிவிப்பு காட்டப்பட்டுள்ளது. அழைப்பை உங்கள் iPhoneக்கு நகர்த்த, அறிவிப்பின் வலதுபுறத்தில் உள்ள "மாற்று" பட்டனைத் தட்டவும்

FaceTime அழைப்பை மற்றொரு சாதனத்திற்கு மாற்றுதல்

நீங்கள் உங்கள் Apple கணக்கு மூலம் பல சாதனங்களில் உள்நுழைந்திருந்தால், அவற்றில் ஒன்றில் FaceTime அழைப்பைத் தொடங்கி, பிறகு உங்கள் iPhoneக்கு மாற்றிக் கொள்ளலாம். உங்கள் அழைப்பை iPhoneஇல் இருந்து வேறொரு சாதனத்திற்கும் மாற்றிக்கொள்ளலாம். எந்தச் சாதனத்தில் இருந்து மாற்ற விரும்புகிறீர்களோ அந்தச் சாதனத்தில், திரையின் மேலே உள்ள FaceTime வீடியோ அழைப்பு பட்டன்  அல்லது FaceTime ஆடியோ அழைப்பு பட்டன்-ஐத் தட்டவும் அல்லது “அழைப்பை இந்த [சாதனத்தின் பெயர்]க்கு நகர்த்து” என்ற பரிந்துரையைத் தட்டி, “மாற்று” என்பதைத் தட்டவும்.

உங்கள் அழைப்பைத் தவறவிட்ட நபருக்கு ஒரு பதிவுசெய்த வீடியோ மெசேஜை அனுப்புவதற்கான திரை காட்டப்பட்டுள்ளது. மேல் இடதுபுறத்தில் “ரத்துசெய்” பட்டன் உள்ளது. மேல் வலதுபுறத்தில் “சேமி” பட்டன் உள்ளது. இதைப் பயன்படுத்தி வீடியோ மெசேஜை ஃபோட்டோஸில் சேமிக்கலாம். திரையின் நடுவில் “பிளே செய்” பட்டன் உள்ளது. இதைப் பயன்படுத்தி வீடியோ மெசேஜை அனுப்புவதற்கு முன் அதை முன்னோட்டமிடலாம். கீழே “அனுப்பு” பட்டனும் “மீண்டும் எடு” பட்டனும் உள்ளன.

வீடியோ மெசேஜ் அனுப்புதல்

ஒருவர் உங்கள் FaceTime வீடியோ அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை என்றால், அவருக்கு ஒரு வீடியோ மெசேஜை அனுப்பலாம். “வீடியோவை ரெக்கார்டு செய்” என்பதைத் தட்டி உங்கள் மெசேஜைப் பதிவுசெய்யவும். பதிவுசெய்து முடித்ததும், “நிறுத்து” பட்டன்-ஐத் தட்டவும். வீடியோவை அனுப்ப, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

குறிப்பு: அனைத்து அம்சங்களும் உள்ளடக்கமும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.