இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் (U.S.இல் மட்டும்) உங்கள் மருந்துகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

நீங்கள் உங்கள் மருந்துகள் பட்டியலில் சேர்க்கும் மருந்துகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.

மருந்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல்

ஒரு மருந்து எதற்குப் பயன்படுத்தப்படுகிறது, அது எவ்வாறு செயல்படுகிறது, சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் அதை உச்சரிப்பது எப்படி என்பதைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. மருந்தைத் தட்டியதும் (உங்கள் மருந்துகளின் பட்டியலில் இருப்பது), கீழே “அறிமுகம்” என்பதற்கு ஸ்க்ரால் செய்யவும்.

உங்கள் மருந்துகளுக்கு இடையேயான இடைவினைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “மருந்துகள்” என்பதைத் தட்டவும்.

  3. கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து “மருந்து இடைவினைகள்” என்பதைத் தட்டவும்.

  4. ஆல்கஹால் போன்ற இடைவினைக் காரணிகள் உங்கள் மருந்துகளுடன் இடைவினையைச் செய்ய முடியுமா என்பதை அறிய, இடைவினைக் காரணிகள் பகுதியில் உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, பொருந்தும் காரணிகளைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

  5. ஓர் இடைவினையைப் பற்றி மேலும் அறிய, அதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.