இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் நீங்களே Genmoji மூலம் இமோஜியை உருவாக்குதல்

Apple Intelligence* மூலம் Genmoji என அழைக்கப்படும் பிரத்தியேக இமோஜியை உருவாக்கலாம். Genmoji எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரித்தோ, ஏற்கெனவே உள்ள இமோஜியுடன் சேர்த்து ஒரு விளக்கத்தைச் சொல்லியோ, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் புகைப்படங்களின் அடிப்படையிலோ அதை உருவாக்கலாம். மெசேஜ்களில் Genmojiஐச் சேர்க்கலாம், அவற்றை ஸ்டிக்கர் அல்லது Tapbackஆகப் பகிரலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம் கோன் Genmojiஐக் காட்டும் Genmoji சாளரம்.

குறிப்பு: சில iPhone மாடல்களிலும், குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களிலும் Apple Intelligence அம்சம் கிடைப்பதில்லை. கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக, நீங்கள் iOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.

Genmojiஐ உருவாக்குதல்

  1. இமோஜி கீபோர்டுக்கு மாற, உரைப் புலத்தைத் தட்டி பிறகு “இமோஜி” பட்டன் அல்லது “அடுத்த கீபோர்டு” கீ-ஐத் தட்டவும்.

  2. திரையில் உள்ள கீபோர்டில் மேல் வலதுபுறத்தில் “Genmoji” என்பதைத் தட்டவும்.

  3. Genmojiஇல் நீங்கள் விரும்புவதைச் சேர்க்கவும். ஏழு கூறுகள் வரை மிக்ஸ் மேட்ச் செய்து நீங்கள் அசல் Genmojiஐ உருவாக்கலாம்.

    • கருத்தாக்கங்கள்: இடதுபுறம் ஸ்வைப் செய்து தீம்கள், உணர்வு வெளிப்பாடுகள், ஆடைகள், ஆக்சஸரிகள் அல்லது இடங்களைப் பார்த்து, அதில் ஒரு விருப்பத்தைத் தட்டவும்.

    • ஏற்கெனவே உள்ள இமோஜி அல்லது Genmoji: “பரிந்துரைகள்” என்பதற்குக் கீழே ஒரு இமோஜியைத் தட்டவும் அல்லது வேறொரு இமோஜியைத் தேர்வுசெய்ய “இமோஜியைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • விளக்கம்: “Genmojiஐ விளக்குக” என்பதைத் தட்டி, விளக்கத்தை உள்ளிட்டு, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • நபர்: “நபரைத் தேர்வுசெய்” பட்டன்-ஐத் தட்டி, உங்கள் புகைப்பட லைப்ரரி அல்லது இமோஜியில் இருந்து ஒரு நபரைத் தேர்வுசெய்யவும். ஃபோட்டோஸில் இருந்து ஒரு நபர் அல்லது செல்லப்பிராணியைச் சேர்க்க, ஃபோட்டோஸ் செயலியில் நீங்கள் அவற்றுக்குப் பெயரிட்டிருக்க வேண்டும்.

      நீங்கள் ஏற்கனவே ஒரு நபரைச் சேர்த்து, அவரின் தோற்றத்தை மாற்ற விரும்பினால், “நபரைத் தேர்வுசெய்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டி, புதிய தொடக்கப் புள்ளியைத் தேர்வுசெய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும். Genmojiஇன் தொடக்கப் புள்ளியைத் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

      நீங்கள் பயன்படுத்தும் படத்தில் இருந்து வேறுபட்ட விவரிப்பை நீங்கள் வழங்கினால் (எடுத்துக்காட்டாக, ஃபோட்டோஸ் செயலியில் உள்ள பெயருடன் உங்கள் விவரிப்பில் உள்ள பெயர் பொருந்தாமல் இருப்பது), உரை விவரிப்பிற்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தின் அடிப்படையில் உங்கள் படம் தனிப்பயனாக்கப்படும்.

      உதவிக்குறிப்பு: இமோஜியின் அடிப்படையிலும் ஒரு நபருக்கான Genmojiஐ நீங்கள் உருவாக்கலாம். “நபரைத் தேர்வுசெய்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டி, ஸ்கின் டோன் மற்றும் தோற்றத்தைத் தேர்வுசெய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்து உங்கள் படத்தை மேம்படுத்தலாம்:

    • மாறுபாடுகளைப் பார்த்தல்: முன்னோட்டம் பபுளைத் தட்டி இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.

    • கருத்துருவை அகற்றுதல்: “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. Genmoji உங்களுக்குப் பிடித்திருந்தால், “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் உருவாக்கும் Genmoji, உங்கள் ஸ்டிக்கர்களுடன் சேமிக்கப்படும்.

நீங்கள் Image Playground மூலமாகவும் Genmojiஐ உருவாக்கலாம். Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

Genmojiஇன் தொடக்கப் புள்ளியைத் திருத்துதல்

நீங்கள் தொடக்கப் புள்ளியாக வேறொரு புகைப்படத்தைத் தேர்வுசெய்தோ ஹேர்ஸ்டைல், முகத்தில் உள்ள முடி, மூக்குக்கண்ணாடி போன்ற தனிப்பட்ட பண்புகளை மாற்றியோ ஒரு நபரின் தோற்றத்தை மாற்றலாம்.

  1. ஒரு நபரைக் கொண்டு Genmojiஐ உருவாக்கும்போது, “நபரைத் தேர்வுசெய்” பட்டன்-ஐத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வேறொரு புகைப்படத்தைத் தேர்வுசெய்ய: “வேறு புகைப்படத்தைத் தேர்வுசெய்” என்பதைத் தட்டி, ஒரு புகைப்படத்தைத் தட்டித் தேர்வுசெய்யவும்.

    • ஹேர்ஸ்டைல், முகத்தில் உள்ள முடி அல்லது மூக்குக்கண்ணாடியைத் தேர்வுசெய்தல்: “தோற்றத்தைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, பாப்-அப் மெனுக்களில் இருந்து விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

      உதவிக்குறிப்பு: தொடக்கப் புள்ளி இன்னும் சரியாக இல்லையென்றால், “கூடுதல் விவரங்கள்” புலத்தில் ஒரு விளக்கத்தை உள்ளிட்டு முயலவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் பரிந்துரைச் சீட்டு மூக்குக்கண்ணாடியைச் சேர்த்திருந்து, அவை தவறான நிறத்தில் இருந்தால், “நீல நிற மூக்குக்கண்ணாடி” அல்லது “மஞ்சள் நிற மூக்குக்கண்ணாடியாக மாற்று” என நீங்கள் உள்ளிடலாம்.

    • அசல் தொடக்கப் புள்ளிக்குச் செல்லுதல்: “தோற்றத்தை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

  3. தொடக்கப் புள்ளி உங்களுக்குப் பிடித்திருந்தால், “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Genmojiஐ நீக்குதல்

  1. இமோஜி கீபோர்டுக்கு மாற, உரைப் புலத்தைத் தட்டி பிறகு “இமோஜி” பட்டன் அல்லது “அடுத்த கீபோர்டு” கீ-ஐத் தட்டவும்.

  2. வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும் அல்லது “ஸ்டிக்கர்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. Genmojiஐத் தொட்டுப் பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.