இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலியில் விமான நிலையங்கள் அல்லது மால்களில் உள்ள இடங்களைக் கண்டறிதல்

விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற சில பெரிய அளவிலான கட்டடங்களில், அவற்றின் உட்புறமுள்ள இடங்கள் பற்றிய மேப்களை விளக்கமாக நீங்கள் பார்க்கலாம், அதன் மூலம் தேவையான இடங்களுக்கு எளிதாகச் சென்றடையலாம்.

குறிப்பு: சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் “உட்புற மேப்கள்” கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.

விமான நிலைய முனையத்தின் உட்புறத்தைக் காட்டும் மேப். இதில் குடிவரவுச் சோதனைச் சாவடி, படிக்கட்டுகள், ஓய்வறைகள், முதலுதவி மையம் ஆகியவை காட்டப்பட்டுள்ளன. L1 (முதல் நிலைக்கு) எனக் குறிக்கப்பட்டுள்ள பட்டனைப் பயன்படுத்தி பல்வேறு தளங்களுக்கான மேப்பில் நீங்கள் நிலைகளை மாற்றலாம்.
  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

    • நீங்கள் அங்கு செல்வதற்கு முன்: விமான நிலையம், மால் போன்றவற்றைத் தேடுங்கள், தேடல் முடிவில் அது காட்டப்பட்டால் “உட்புறத்திற்கான மேப்” என்பதைத் தட்டவும். இல்லையெனில் அதைக் காட்ட மேப்பை இழுக்கவும், பெரிதாக்கி, “உட்புறத்தைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

    • விமான நிலையம் அல்லது மாலில் நீங்கள் இருக்கும்போது: “டிராக்கிங் ஆஃப்” பட்டன்-ஐத் தட்டி, “உட்புறத்தைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  3. அருகிலுள்ள சேவைகளைக் கண்டறிய, ஒரு வகையைத் தட்டவும் (உணவு, ஓய்வறைகள், நுழைவு வாயில்கள் போன்றவை).

    ஒரு முடிவு குறித்துக் கூடுதல் தகவல் வேண்டுமெனில், அதைத் தட்டவும்.

  4. வேறொரு தளத்தின் மேப்பைப் பெற, தளத்தின் எண்ணைக் காட்டும் பட்டனைத் தட்டவும் (பட்டன் காட்டப்படவில்லை எனில் பெரிதாக்கவும்).

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.