இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள iCloud Mail மூலம் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை அமைத்தல்

iCloud+ சந்தா சேரும்போது, நீங்கள் ஐந்து பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்களைச் சேர்த்து அந்த டொமைன்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உங்கள் iPhoneஇல் உருவாக்கலாம். அதன் பிறகு, உங்கள் iPhone, iPad மற்றும் Macஇல் உள்ள Mail செயலியிலும், iCloud.com தளத்தில் உள்ள உங்கள் Mail கணக்கிலும், Windows சாதனத்தில் உள்ள மின்னஞ்சல் செயலியிலும் நீங்கள் மின்னஞ்சலை அனுப்பலாம், பெறலாம்.

iPhoneஇல் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனைச் சேர்ப்பதற்கு முன்பு உங்களிடம் முதன்மை iCloud Mail முகவரி இருக்க வேண்டும். iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள iCloud Mailக்கான முதன்மை மின்னஞ்சல் முகவரியை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

மேலும் அறிய, iCloud பயனர் வழிகாட்டியில் உள்ள iCloud Mailஐத் தனிப்பயன் மின்னஞ்சல் டொமைன் மூலம் பிரத்தியேகமாகப் பிறருடன் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

குறிப்பு: ஒவ்வொரு சாதனத்திலும் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்திருக்க வேண்டும். உங்கள் Apple கணக்கில் உள்நுழையாத அல்லது Mail அம்சம் ஆஃப் செய்யப்பட்டுள்ள சாதனங்கள் உங்களிடம் இருந்தால், அந்தச் சாதனங்களில் உங்கள் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்களையும் மெயிலையும் பார்க்க முடியாது.

iCloud Mailஇல் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனைச் சேர்த்தல்

நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை iCloud Mailஇல் சேர்க்கலாம் அல்லது புதிதாக ஒன்றை வாங்கலாம்.

குறிப்பு: iPhoneஇல் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனைச் சேர்ப்பதற்கு முன்பு உங்களிடம் முதன்மை iCloud Mail முகவரி இருக்க வேண்டும். iCloud பயனர் வழிகாட்டியில் iCloud Mailக்கான முதன்மை மின்னஞ்சல் முகவரியை உருவாக்குதல் என்பதைப் பார்க்கும்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > Mail (iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை என்பதற்குக் கீழ்) என்பதற்குச் சென்று, “இந்த iPhoneஇல் பயன்படுத்தவும்” என்பது ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  2. பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்” மீது தட்டி, பின்வரும் ஒன்றைத் தட்டவும்:

    • டொமைனை வாங்குதல்: உங்களிடம் இன்னும் பிரத்தியேக டொமைன் இல்லையென்றால் இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். நீங்கள் அதை வாங்கிய பிறகு, பிரத்தியேக மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கலாம்.

    • உங்களிடம் உள்ள டொமைனைப் பயன்படுத்துதல்: உங்களிடம் ஏற்கெனவே ஒரு டொமைன் இருந்தால், அதை iCloud Mail உடன் பயன்படுத்த விரும்பினால் இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். அந்த டொமைனில் நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளமைக்கலாம், மேலும் பலவற்றை உருவாக்கலாம்.

  3. திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    உங்களிடம் ஏற்கெனவே உள்ள ஒரு டொமைனைச் சேர்க்கிறீர்கள் என்றால், உங்கள் டொமைனை அமைக்க சில பதிவாளர்கள் DNS பதிவுகளை மாற்றக் கோருவர். iCloud Mail மூலம் ஏற்கெனவே உள்ள டொமைனை அமைத்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

ஏற்கெனவே உள்ள மின்னஞ்சல்களை இம்போர்ட் செய்தல்

iCloud Mailக்கான பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை நீங்களோ உங்கள் “குடும்பப் பகிர்வு” குழுவின் உறுப்பினரோ அமைத்த பிறகு, உங்களது முந்தைய மின்னஞ்சல் புரொவைடரிடம் இருந்து (அனைத்து மின்னஞ்சல் புரொவைடருக்கும் கிடைப்பதில்லை) ஏற்கெனவே உள்ள மின்னஞ்சல்களை இம்போர்ட் செய்ய iCloud.comஐப் பயன்படுத்தலாம். iCloud பயனர் வழிகாட்டியில் உங்கள் பிரத்தியேக iCloud Mail முகவரிக்கு ஏற்கெனவே உள்ள மின்னஞ்சல் மெசேஜ்களை இம்போர்ட் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குதல், நீக்குதல்

நீங்கள் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனைச் சேர்த்த பிறகு, அந்த டொமைனுக்கான மின்னஞ்சல் முகவரிகளை எளிதாக உருவாக்கலாம், நீக்கலாம்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > Mail (iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை என்பதற்குக் கீழ்) என்பதற்குச் சென்று, “இந்த iPhoneஇல் பயன்படுத்தவும்” என்பது ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  2. “பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்” மீது தட்டி, நீங்கள் மாற்ற விரும்பும் டொமைனைத் தட்டவும்.

  3. “மின்னஞ்சல் முகவரிகளை நிர்வகி” என்பதைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்தல்: “மின்னஞ்சல் முகவரியை உருவாக்கு” என்பதைத் தட்டி, புதிய முகவரியை உள்ளிட்டு, “தொடர்க” என்பதைத் தட்டவும்.

    • மின்னஞ்சல் முகவரியை நீக்குதல்: மின்னஞ்சல் முகவரி மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “நீக்கு” என்பதைத் தட்டி, அகற்று என்பதைத் தட்டவும்.

    • நபர்களைச் சேர்த்தல்: உங்கள் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனுக்கு ஒருவரை அழைக்க, அழை என்பதைத் தட்டவும்.

பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை அகற்றுதல்

நீங்கள் இனி பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், உங்கள் iPhoneஐப் பயன்படுத்தி அதை அகற்றலாம். நீங்கள் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை அகற்றும்போது, Mailஇல் உள்ள அந்த டொமைனில் உள்ள எந்த முகவரிகளுக்கும் மின்னஞ்சலை அனுப்பவோ பெறவோ முடியாது.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > Mail (iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை என்பதற்குக் கீழ்) என்பதற்குச் செல்லவும்.

  2. “பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்” என்பதைத் தட்டி, “உங்கள் டொமைன்” என்பதற்கு அடுத்துள்ள “திருத்து” என்பதைத் தட்டவும்.

  3. “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி, “நீக்கு” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் டொமைனை புதிய பதிவாளரிடம் நகர்த்துகிறீர்கள் என்றால், பின்வருவதைச் செய்யுங்கள்:

    • உங்கள் புதிய மின்னஞ்சல் புரொவைடரிடம் டொமைன் பதிவுகளைப் புதுப்பிக்க உங்கள் டொமைன் பதிவாளரிடம் சென்று iCloud தொடர்பான பதிவுகளை அகற்றவும்.

    • உங்கள் புதிய புரொவைடர் மூலம் தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் மின்னஞ்சல் முகவரிகளை அமைக்கவும்.

குறிப்பு: நீங்கள் ஒரு பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனை அகற்றும்போது உங்கள் முதன்மை @icloud.com முகவரியிலிருந்து மின்னஞ்சலை அனுப்பலாம், பெறலாம்.

பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தையும் உங்கள் டொமைனில் அனுமதித்தல்

உங்கள் iCloud Mail மின்னஞ்சல் முகவரியை கேட்ச்-ஆல் முகவரியாகப் பயன்படுத்தலாம். உங்கள் பிரத்தியேக மின்னஞ்சல் டொமைனுக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் அனைத்தையும் பெற இது உங்களை அனுமதிக்கும். அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்ட அதே முகவரியை நீங்கள் இதுவரை உருவாக்கியிருக்காத பட்சத்திலும் இது பொருந்தும்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > iCloud > Mail (iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை என்பதற்குக் கீழ்) என்பதற்குச் செல்லவும்.

  2. “பிரத்தியேக மின்னஞ்சல் டொமைன்” என்பதைத் தட்டி, உங்கள் பிரத்தியேக டொமைனைத் தட்டவும்.

  3. “பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தையும் அனுமதிக்கவும்” என்பதை ஆன் செய்யவும்.

பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தையும் டொமைன் உரிமையாளர் அனுமதித்தால், செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படாத மெசேஜ்கள் அனைத்தும் டொமைன் உரிமையாளரின் இன்பாக்ஸிற்குச் செல்லும். இந்த அமைப்பை ஆன் செய்யவில்லை என்றால், அந்த மெசேஜ்கள் அனுப்புநருக்குத் திருப்பி அனுப்பப்படும்.

குறிப்பு: நீக்கிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள், தானாகவே அனுப்புநருக்குத் திருப்பி அனுப்பப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.