இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சரிபார்ப்புக் குறியீடுகளைத் தானாக நிரப்புதல்

சில இணையதளங்களும் செயலிகளும் இரு-காரணி அங்கீகாரத்தை வழங்குகின்றன (பல காரணி அங்கீகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது). பிறர் உங்கள் பாஸ்வேர்டுகளை அறிந்திருந்தாலும் அவர்கள் உங்கள் கணக்குகளை அணுகுவதைத் தடுக்க இது உதவும். பாஸ்வேர்டுகள் முதல் அங்கீகாரக் காரணிகளாகவும், தற்காலிகமான, ஒரு முறை சரிபார்ப்புக் குறியீடுகள் இரண்டாவது காரணிகளாகவும் உள்ளன. உங்கள் SMS மெசேஜ்கள் அல்லது கூடுதல் செயலிகளை நம்பாமல் இந்த சரிபார்ப்புக் குறியீடுகளை iPhoneஆல் தானாக உருவாக்க முடியும்.

ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இணையதளம் அல்லது செயலியின் தானியங்கு சரிபார்ப்புக் குறியீடுகளை அமைத்தல்

கம்ப்யூட்டர் அல்லது iPad போன்ற திரையுடன் கூடிய மற்றொரு சாதனம் உங்களிடம் இருந்தால், இணையதளம் அல்லது செயலியில் இருந்து QR குறியீட்டைக் காட்ட அதைப் பயன்படுத்தலாம். குறியீட்டை ஸ்கேன் செய்ய iPhone கேமராவைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் மற்றொரு சாதனத்தில், உங்கள் கணக்கை நிர்வகிக்கும் இணையதளம் அல்லது செயலியின் பகுதியில் உள்நுழைந்து, இரு-காரணி அங்கீகாரத்தையும் அங்கீகரிப்பாளர் செயலியையும் செயல்படுத்துவதற்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

    அங்கீகரிப்பாளர் செயலியை அமைக்க உங்களுக்கு உதவியாக ஒரு QR குறியீடு தோன்றும்.

  2. iPhone சாதனத்தில், கேமராவைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

  3. iPhone சாதனத்தில், இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு புலங்களுக்குக் கீழே சரிபார்ப்புக் குறியீடு தோன்றும்.

  4. உங்களின் வேறு சாதனத்தில், உங்கள் iPhone சாதனத்தில் தோன்றும் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.

செட்-அப் கீயை உள்ளிடுவதன் மூலம் இணையதளம் அல்லது செயலியின் தானியங்கு சரிபார்ப்புக் குறியீட்டை அமைத்தல்

மற்றொரு திரையில் இருந்து ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாவிட்டால், நீங்கள் ஒரு செட்-அப் கீயை நேரடியாக உள்ளிடலாம்.

  1. உங்கள் கணக்கை நிர்வகிக்கும் இணையதளம் அல்லது செயலியின் பகுதியில் உள்நுழைந்து, இரு-காரணி அங்கீகாரத்தையும் அங்கீகரிப்பாளர் செயலியையும் செயல்படுத்துவதற்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. செட்-அப் கீயை (அல்லது செட்-அப் குறியீடு அல்லது அது போன்றது) நேரடியாக பயன்படுத்துவதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்து செட்-அப் கீயைத் தேர்ந்தெடுத்து நகலெடுக்கவும்.

  3. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  4. “அனைத்தும்” என்பதைத் தட்டி, இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் கணக்கைத் தட்டவும்.

  5. “திருத்து” என்பதைத் தட்டி “குறியீட்டை அமை” என்பதைத் தட்டவும்.

  6. செட்-அப் கீயை இணையதளத்தில் இருந்து பெற்று, “பாஸ்வேர்டுகள்” செயலியில் செட்-அப் கீயை உள்ளிட்டு, பின்னர் “செட்-அப் கீயைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

    இதைத் தானாகச் செய்ய QR குறியீட்டை இணையதளம் வழங்கினால், அதைத் தொட்டுப் பிடித்திருக்கவும், பின்னர் “பாஸ்வேர்டுகளில் சரிபார்ப்புக் குறியீட்டைச் சேர்” என்னும் விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம்.

இணையதளத்திலோ செயலியிலோ சரிபார்ப்புக் குறியீட்டைப் பயன்படுத்துதல்

  1. இணையதளம் அல்லது செயலியில் உள்நுழையவும்.

  2. கேட்கப்பட்டால், அங்கீகரிப்பாளர் செயலியைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. சரிபார்ப்புக் குறியீடு கேட்கப்படும்போது, கீபோர்டுக்கு மேலே தோன்றும் பரிந்துரையைத் தட்டவும்.

    பரிந்துரை எதுவும் தோன்றவில்லை எனில், உங்கள் iPhone சாதனத்தில் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் சென்று, இணையதளம் அல்லது செயலிக்கான உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுத்து, “சரிபார்ப்புக் குறியீடு” என்பதைத் தட்டி, “சரிபார்ப்புக் குறியீட்டை நகலெடு” என்பதைத் தட்டவும். இணையதளம் அல்லது செயலிக்குத் திரும்பி, புலத்தில் சரிபார்ப்புக் குறியீட்டை ஒட்டவும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சரிபார்ப்புக் குறியீடுகளைத் தானாக நிரப்புதல்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சரிபார்ப்புக் குறியீடுகள் தானாக நிரப்பப்படுவதால் நீங்கள் உள்நுழையும் இணையதளம் அல்லது செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. சரிபார்ப்புக் குறியீடுகளைத் தானாக நிரப்பிய பிறகு அவற்றைத் தானாக நீக்குவதையோ அவற்றை வைத்திருக்கவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி “தானாக நிரப்புதல் & பாஸ்வேர்டுகள்” என்பதைத் தட்டவும்.

  3. சரிபார்ப்புக் குறியீடுகளுக்கு கீழே உள்ள “பயன்படுத்திய பிறகு நீக்கு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.