இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Siriஐ ஆன் செய்தல் மற்றும் செயல்படுத்துதல்

iPhoneஇல் உள்ளமைக்கப்பட்டுள்ள அறிவார்ந்த உதவியாளரான Siri மூலம் நீங்கள் பல பணிகளைச் செய்து முடிக்கலாம்.

குறிப்பு: Siri உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையிலும், என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய, Siri, டிக்டேஷன் & தனியுரிமை இணையதளம், Siri மற்றும் டிக்டேஷன் & தனியுரிமையை மேம்படுத்துதல் இணையதளம் ஆகியவற்றைப் பார்க்கவும்.

Siriஐ ஆன் செய்தல்

Siriஐப் பயன்படுத்தி தகவலைப் பெறுவதற்கு முன்பு, அது ஆன் செய்யப்பட வேண்டும். உங்கள் iPhoneஐ முதலில் அமைத்தபோது Siriஐ அமைக்கவில்லை எனில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. Siri (அல்லது Apple Intelligence & Siri) என்பதைத் தட்டி, "Siri உடன் பேசுதல்" என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • “Siri” அல்லது “Hey Siri”: கோரிக்கைகளின் தொடக்கத்தில் “Siri” அல்லது “Hey Siri”சொல்லப்படுகிறதா என iPhone கவனிக்கும்.

      குறிப்பு: சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் ஆதரிக்கப்படும் iPhone மாடல்களில் “Siri” என்று மட்டும் சொல்வதற்கான விருப்பம் உள்ளது. உங்கள் சாதனத்திலும் மொழியிலும் “Hey Siri” அல்லது “Siri” அம்சம் கிடைக்கிறதா என்று பார்க்க, iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும் தன்மை இணையதளத்தைப் பார்க்கவும்.

    • “Hey Siri”: கோரிக்கைகளின் தொடக்கத்தில் “Hey Siri”சொல்லப்படுகிறதா என iPhone கவனிக்கும்.

    பக்கவாட்டு பட்டன் மூலம் Siriஐச் செயல்படுத்த, “Siriஐ இயக்க பக்கவாட்டு பட்டனை அழுத்துதல்” என்பதை ஆன் செய்யவும்.

கூடுதல் Siri அமைப்புகளை மாற்ற, Siri அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

Siriஐச் செயல்படுத்துதல்

Siriஐ ஆன் செய்ததும், அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். பிறகு கேள்வியைக் கேட்கலாம் அல்லது கோரிக்கையை விடுக்கலாம்.

குறிப்பு: Siriஐப் பயன்படுத்த நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  1. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் குரல் மூலம்: “Siri” அல்லது “Hey Siri” என்று சொல்லுங்கள்

    • Face IDஐக் கொண்ட iPhone சாதனத்தில்: பக்கவாட்டு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

    • முகப்பு பட்டனைக் கொண்ட iPhone சாதனத்தில்: முகப்பு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

    • EarPods உடன்: மையத்தில் அல்லது அழைப்பு பட்டனை அழுத்தி பிடிக்கவும்.

    • CarPlay உடன்: ஸ்டீயரிங் வீலில் உள்ள குரல் கட்டளை பட்டனை அழுத்திப் பிடிக்கவும் அல்லது CarPlay முகப்புத் திரையில் உள்ள முகப்பு பட்டனைத் தொட்டு பிடிக்கவும். உங்கள் காரில் Siriஐப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

    • Siri Eyes Free மூலம்: உங்கள் ஸ்டீயரிங் வீலில் உள்ள குரல் கட்டளை பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

  2. ஒரு கேள்வியைக் கேட்கவும் அல்லது கோரிக்கையை விடுக்கவும்—உதாரணத்திற்கு, இதுபோன்ற ஏதேனும் சொல்லலாம்: “What’s 18 percent of 225?” அல்லது “Set the timer for 3 minutes.”

    உதவிக்குறிப்பு: நீங்கள் பேசுவதை எவ்வளவு நேரத்திற்கு Siri கவனிக்க வேண்டும் என்பதை மாற்ற, அமைப்புகள் செயலிக்குச் சென்று, “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, Siriஐத் தட்டி, “Siri இடைநிறுத்த நேரம்” என்பதற்குக் கீழே உள்ள “இயல்புநிலை”, “நீண்ட நேரம்” அல்லது “அதிகபட்சம்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

நீங்கள் Siriஐ ஒரு பட்டன் மூலம் செயல்படுத்தும்போது, iPhone அமைதிப் பயன்முறையில் இருக்கும்போது Siri அமைதியாகப் பதிலளிக்கிறது. அமைதிப் பயன்முறை ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது, Siri உரத்த குரலில் பதிலளிக்கிறது. உங்கள் குரல் மூலம் Siriஐச் செயல்படுத்தும்போது Siri உரத்த குரலில் பதிலளிக்கிறது. இந்த நடத்தையை மாற்ற, Siri பதிலளிக்கும் விதத்தை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

ஆதரிக்கப்படும் AirPodsஐத் தொடுவதன் மூலமோ உங்கள் குரல் மூலமோ Siriஐச் செயல்படுத்தலாம். AirPods பயனர் வழிகாட்டியில் உள்ள Siriஐ அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: “Siri” அல்லது “Hey Siri” என்பதற்கு iPhone பதிலளிப்பதைத் தவிர்க்க, உங்கள் iPhone திரை கீழ்நோக்கி இருக்கும்படி வைக்கவும் அல்லது அமைப்புகள்  செயலிக்குச் சென்று, Siri (அல்லது Apple Intelligence & Siri) என்பதைத் தட்டி, “Siri உடன் பேசுதல்” (அல்லது Siri உடன் பேசுதல் & டைப் செய்தல்) என்பதைத் தட்டி “ஆஃப்” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

அடுத்தடுத்த கோரிக்கைகளைச் செய்தல்

Siriஐச் செயல்படுத்திய பிறகு, அதை மீண்டும் செயல்படுத்தாமலேயே பின்தொடர்வுக் கோரிக்கைகளைச் செய்யலாம். (சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை).

  1. Siriஐச் செயல்படுத்தி, கோரிக்கை விடுக்கவும்.

  2. கோரிக்கை செய்த உடனே மற்றும் ஒரு கோரிக்கையைச் சொல்லவும்.

    உதாரணமாக, “Hey Siri, what’s the weather like in San Francisco? What about Cupertino?” என்று சொல்லிப் பார்க்கவும்.

கோரிக்கையை ஓவர்ரைடு செய்ய, Siri பேசும்போது அதைக் குறுக்கிடவும்.

நீங்கள் சொல்வதை Siri தவறாகப் புரிந்து கொண்டால் அதைச் சரிசெய்யவும்

  • அடுத்தடுத்த கோரிக்கைகளைச் செய்யும்போது: மீண்டும் உங்கள் கோரிக்கையை வேறொரு வழியில் செய்யவும்.

  • அடுத்தடுத்த கோரிக்கைகளைச் செய்யவில்லை என்றால்: “கேள்” பட்டன்-ஐத் தட்டி, உங்கள் கோரிக்கையை வேறொரு வழியில் மீண்டும் செய்யவும்.

  • உங்கள் கோரிக்கையின் ஒரு பகுதியை உச்சரிக்கவும்: “கேள்” பட்டன்-ஐத் தட்டி, Siriக்கு புரியாத சொற்களை உச்சரிப்பதன் மூலம் உங்கள் கோரிக்கையை மீண்டும் செய்யவும். உதாரணமாக, “Call” எனச் சொன்ன பிறகு, அழைக்க வேண்டியவரின் பெயரில் உள்ள எழுத்துகளை ஒவ்வொன்றாக உச்சரிக்கவும்.

  • மெசேஜை அனுப்பும் முன் அதை மாற்ற: “Change it.” எனச் சொல்லவும்.

  • உங்கள் கோரிக்கையை உரை மூலம் திருத்த: உங்கள் கோரிக்கையைத் திரையில் பார்க்கும்போது, அதைத் திருத்தலாம். கோரிக்கையைத் தட்டி, திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்தி அதைத் திருத்தவும்.

உதவிக்குறிப்பு: Siriஐ மீண்டும் செயல்படுத்தாமல் உங்கள் கோரிக்கையைத் திருத்த, கோரிக்கையைச் சொன்ன உடனே திருத்தப்பட்ட கோரிக்கையைச் சொல்லவும். (சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் ஆதரிக்கப்படும் iPhone மாடல்களில் கிடைக்கும்.)

Siri உடன் பேசுவதற்குப் பதிலாகத் டைப் செய்தல்

நீங்கள் Apple Intelligenceஐ ஆன் செய்யவில்லை எனில், அணுகல்தன்மை அமைப்புகளில் “Siriக்கு டைப் செய்” அம்சத்தை ஆன் செய்யலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, Siriஐத் தட்டி, “Siriஇல் டைப் செய்க” என்பதை ஆன் செய்யவும்.

  3. கோரிக்கையை டைப் செய்ய, Siriஐச் செயல்படுத்தி, ஒரு கேள்வியைக் கேட்க அல்லது கோரிக்கையைச் செய்ய கீபோர்டு மற்றும் உரைப் புலத்தைப் பயன்படுத்தவும்.

குறிப்பு: Apple Intelligenceஐப் பயன்படுத்தி Siriக்கு டைப் செய்ய, Siriஇல் டைப் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Siriஐ ஆஃப் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. Siri (அல்லது Apple Intelligence & Siri) என்பதைத் தட்டி, "Siri உடன் பேசுதல்" (அல்லது Siri உடன் பேசுதல் & டைப் செய்தல்) என்பதைத் தட்டவும்.

  3. ஆஃப் என்பதைத் தட்டி, “Siriஐ இயக்க பக்கவாட்டு பட்டனை அழுத்துதல்” என்பதை ஆஃப் செய்யவும்.

உங்கள் iPhone சாதனத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி Siri வேலை செய்யவில்லை எனில், உங்கள் iPhone அல்லது iPad சாதனத்தில் Siri வேலை செய்யவில்லை எனில் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.