இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Apple Music செயலியில் ஐட்டங்களைப் “பிடித்தவை” எனக் குறித்தல்

இசையில் ஐட்டங்களைக் கண்டறிவதை எளிதாக்க “பிடித்தவை” என அவற்றைக் குறிக்கலாம். நீங்கள் Apple Music சந்தா சேர்ந்தால், உங்களுக்குப் பிடித்த கலைஞர்களின் புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்புகளைப் பெறலாம். முகப்புத் தாவலில் இருந்து அவர்களின் இசைக்கு எளிதாகச் செல்லலாம்.

பிடித்த பிளேலிஸ்ட்கள், கலைஞர்கள், ஆல்பங்கள் மற்றும் பாடல்களைச் சேர்த்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பிடித்த பிளேலிஸ்ட்டைச் சேர்க்க: ஒரு பிளேலிஸ்ட்டைத் தொட்டு பிடித்திருக்கவும் அல்லது பிளேலிஸ்ட் காட்டப்படும்போது “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும். பிறகு “பிடித்தவை” என்பதைத் தட்டவும்.

    • பிடித்த கலைஞரைச் சேர்க்க: கலைஞரின் பக்கத்திற்குச் சென்று, திரையின் மேல்பகுதியில் உள்ள “பிடித்தவை” பட்டன்-ஐத் தட்டவும்.

      நீங்கள் ஒரு கலைஞரைப் பிடித்தவராகக் குறிக்கும் போது, முகப்பில் உள்ள பிடித்தமான கலைஞர்கள் பிரிவின்கீழ் அவர்கள் தோன்றுவார்கள். மேலும் அவர்களின் இசை அடிக்கடி பரிந்துரைக்கப்படும்.

    • பிடித்த ஆல்பத்தைச் சேர்க்க: ஆல்பத்தைத் தொட்டுப் பிடித்து பிடித்ததைத் தேர்வுசெய்யவும். இல்லையெனில், ஆல்பத்தைத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “பிடித்தவை” என்பதைத் தட்டவும்.

    • பிடித்த பாடலைச் சேர்க்க: ஒரு பாடலைத் தொட்டுப் பிடித்திருக்கவும் அல்லது பாடலுக்கு அடுத்துள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “பிடித்தவை” என்பதைத் தட்டவும். அல்லது “இப்போது பிளே ஆவது” என்ற திரையில் “பிடித்தவை” பட்டன்-ஐத் தட்டவும்.

      நீங்கள் ஒரு பாடலை பிடித்த பாடலாகக் குறிப்பிடும்போது, அது பிடித்த பாடல்கள் பிளேலிஸ்ட்டில் தோன்றும். அந்த பிளேலிஸ்ட்டைப் பார்க்க லைப்ரரியைத் தட்டி பிளேலிஸ்ட்டைத் தட்டவும்.

உங்கள் இசை லைப்ரரியில் பிடித்தமான ஐட்டங்களை எளிதாகக் கண்டறியலாம். லைப்ரரியைத் தட்டி பிளேலிஸ்ட்கள், கலைஞர்கள், ஆல்பங்கள் அல்லது பாடல்களைத் தேர்வுசெய்யவும். பிறகு “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, பிடித்தவற்றைத் தேர்வுசெய்யவும்.

பிளேலிஸ்ட்கள், கலைஞர்கள், ஆல்பங்கள் மற்றும் பாடல்களை பிடித்தவற்றில் இருந்து அகற்றுதல்

  1. iPhoneஇல் உள்ள இசை செயலிக்குச் செல்லவும்.

  2. லைப்ரரியைத் தட்டி பிளேலிஸ்ட்கள், கலைஞர்கள், ஆல்பங்கள் அல்லது பாடல்களைத் தேர்வுசெய்யவும். பிறகு “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, பிடித்தவற்றைத் தேர்வுசெய்யவும்.

  3. பிளேலிஸ்ட், கலைஞர், ஆல்பம் அல்லது பாடலைத் தொட்டுப் பிடித்து “பிடித்தவையில் இருந்து அகற்று/பிடித்ததைச் செயல்தவிர்” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: பாடல்களைப் பிடித்தவையில் சேர்க்கும்போது உங்கள் லைப்ரரியில் பாடல்களைச் சேர்க்க விரும்பினால், அமைப்புகள்  > செயலிகள் > இசை என்பதற்குச் சென்று “பிடித்த பாடல்களைச் சேர்” என்பதை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.